Published:Updated:

``ஆர்.எஸ்.எஸ்-ஐ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பேசுவதா?!" - பாஜக கண்டனம்

பாஜக - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

``ஆர்.எஸ்.எஸ் என்றால் அரசியலமைப்பை நிலைநிறுத்துவது. இது வேறு சில அஜண்டாவைக் கொண்டவர்களைத் தவிர, உலகிலுள்ள அனைத்து அறிவாளிகளுக்கும் தெரியும்." - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

``ஆர்.எஸ்.எஸ்-ஐ, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுடன் ஒப்பிட்டுப் பேசுவதா?!" - பாஜக கண்டனம்

``ஆர்.எஸ்.எஸ் என்றால் அரசியலமைப்பை நிலைநிறுத்துவது. இது வேறு சில அஜண்டாவைக் கொண்டவர்களைத் தவிர, உலகிலுள்ள அனைத்து அறிவாளிகளுக்கும் தெரியும்." - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

Published:Updated:
பாஜக - மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

பீகார் மாநிலம், பாட்னா மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(எஸ்.எஸ்.பி) மானவ்ஜீத் சிங் தில்லான், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா(பிஎஃப்ஐ) அமைப்பை, ஆர்.எஸ்.எஸ்-ஸுடன் ஒப்பிட்டுப் பேசியதற்கு, மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மானவ்ஜீத் சிங் தில்லான், ``பி.எஃப்.ஐ அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரைப் போலவே தற்காப்புக் கலைகள் மற்றும் உடற்பயிற்சிகளை வழங்குகிறார்கள்" என நேற்று செய்தியாளர் கூட்டத்தில் கூறியிருந்தார்.

பாட்னா எஸ்.எஸ்.பி மானவ்ஜீத் சிங் தில்லான்
பாட்னா எஸ்.எஸ்.பி மானவ்ஜீத் சிங் தில்லான்

இந்த நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், ``ஆர்.எஸ்.எஸ் என்றால் தேசத்தின் மீதான அன்பு. ஆர்.எஸ்.எஸ் என்றால் நாட்டு நலன். ஆர்.எஸ்.எஸ் என்றால் தேசத்துக்கான சேவை. ஆர்.எஸ்.எஸ் என்றால் மக்கள் நலன். ஆர்.எஸ்.எஸ் என்றால் மனித நேயம் மற்றும் நல்லிணக்கம். ஆர்.எஸ்.எஸ் என்றால் அரசியலமைப்பை நிலைநிறுத்துவது. இது வேறு சில அஜண்டாவைக் கொண்டவர்களைத் தவிர, உலகிலுள்ள அனைத்து அறிவாளிகளுக்கும் தெரியும்" என இந்தியில் பதிவிட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்

மேலும் இதே விவகாரத்தில் மானவ்ஜீத் சிங் தில்லான் பேச்சுக்கு, பா.ஜ.க மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், ``இது முற்றிலும் அநாகரிகமானது. ஆர்.எஸ்.எஸ் போன்ற ஒரு தேசிய நெறிமுறைகொண்ட அமைப்பின் வேலையை பி.எஃப்.ஐ மற்றும் அத்தகைய பயங்கரவாத அமைப்புடன் ஒப்பிடுவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது" எனக் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரம் தீவிரமானதையடுத்து மானவ்ஜீத் சிங் தில்லான், தான் கூறியது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்றும், பி.எஃப்.ஐ உறுப்பினர்கள் மீதான சோதனையின் போது மீட்கப்பட்ட ஆவணங்களில் எழுதப்பட்டிருந்த விஷயத்தை மட்டுமேதான் குறிப்பிட்டதாகவும் விளக்கமளித்தார்.