Published:Updated:

``ஆர்.என்.ரவி அல்ல ஆர்.எஸ்.எஸ் ரவி என்பதே சரியாக இருக்கும்..!" - தொல்.திருமாவளவன் தாக்கு

தொல்.திருமாவளவன் எம்.பி

``இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது. தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்பதே சரியாக இருக்கும்." - ஆர்.என்.ரவி

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் விழா ஏற்பாடு செய்யத் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தன்னார்வலர்களுக்குப் பாராட்டுவிழா கிண்டியிலிருக்கும் ஆளுநர் மாளிகையில் இரண்டு நாள்களுக்கு முன்னர் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, ``இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாடு என்பதைவிட தமிழகம் என்பதே சரியாக இருக்கும்" எனப் பேசினார். அவரின் இந்தப் பேச்சு அரசியல் அரங்கில் சர்ச்சையைக் கிளப்பியது.

இந்த விவகாரத்தில், `ஆளுநர் ரவி, பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸின் பிரசாரகராகச் செயல்படுகிறார்' என அரசியல் கட்சியினர் சாடினர். இந்த நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் ஆளுநரை விமர்சித்து ட்வீட் செய்திருக்கிறார்.

தொல்.திருமாவளவன் எம்.பி - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தொல்.திருமாவளவன் எம்.பி - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

அந்தப் பதிவில், ``தமிழகமா... தமிழ்நாடா? இது குதர்க்கவாதம். `ஆர்.என்.ரவி என்பதைவிட, ஆர்.எஸ்.எஸ் ரவி என்பதே சரியாக இருக்கும்.' சனநாயகத்துக்கான ஆளுநர் என்பதைவிட, சனாதனத்துக்கான ஆள் இவர் என்பதே சரியாக இருக்கும். அரசமைப்புச் சட்டத்துக்கான பிரதிநிதி என்பதைவிட, சங்பரிவார்களுக்கான அரசியல்வாதி என்பதே சரியாக இருக்கும்" என்று திருமாவளவன் விமர்சித்திருக்கிறார்.