Published:Updated:

புதுச்சேரி: பாண்லே நிறுவனத்தில் சம்பளம்; எம்.எல்.ஏ அலுவலகத்தில் வேலை! - ஆர்.டி.ஐ தகவல் சொல்வதென்ன?

புதுச்சேரி பாண்லே நிறுவனம்

”புதுச்சேரி பாண்லே நிறுவனத்தின் இது போன்ற தவறான நடவடிக்கையால்தான் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு, பால் விலையை ஏற்றவேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.”

புதுச்சேரி: பாண்லே நிறுவனத்தில் சம்பளம்; எம்.எல்.ஏ அலுவலகத்தில் வேலை! - ஆர்.டி.ஐ தகவல் சொல்வதென்ன?

”புதுச்சேரி பாண்லே நிறுவனத்தின் இது போன்ற தவறான நடவடிக்கையால்தான் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு, பால் விலையை ஏற்றவேண்டிய கட்டாய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.”

Published:Updated:
புதுச்சேரி பாண்லே நிறுவனம்

புதுச்சேரி அரசின் கூட்டுறவு நிறுவனங்களில் ஒன்றான பாண்லே நிறுவனத்தில் ஆண்டுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் ஊழியர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் அலுவலகங்களில் பணிபுரிகிறார்கள் என்று ஆர்.டி.ஐ தகவல் மூலம் சுட்டிக்காட்டியிருக்கிறது ராஜீவ்காந்தி மனித உரிமைகள் அமைப்பு. இது தொடர்பாக துணைநிலை ஆளுநர், தலைமைச் செயலர், கூட்டுறவுத்துறை செயலர் மற்றும் பதிவாளருக்கு அந்த அமைப்பு அனுப்பியிருக்கும் கடிதத்தில், ``கூட்டுறவு நிறுவனமான பாண்லே நிறுவனத்தில் சம்பளம் பெறும் பலர், வேறு அலுவலகங்களில் பணிபுரிந்துவருவது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் 29.12.2021 அன்று தகவல்களாகக் கேட்டிருந்தோம்.

ஆர்.டி.ஐ
ஆர்.டி.ஐ

அதற்கு பாண்லே நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் முரளி என்பவர், இது பொதுநலன் சார்ந்த தகவல் அல்ல என்று கூறி தகவல் தர மறுத்துவிட்டார். அதையடுத்து கூட்டுறவுப் பதிவாளர் அவர்களிடம் மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில் 15 நாள்களுக்குள் தகவல் அளிக்க உத்தரவிட்டார். அப்படி பெறப்பட்ட தகவலில் பாண்லே நிறுவனத்தில் பணிபுரியும் 18 ஊழியர்கள் ஆண்டுக்கு ரூ.63,98,184/- ரூபாய் ஊதியம் பெற்றுக்கொண்டு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவுப் பதிவாளர் அலுவலகம் போன்றவற்றில் பணிபுரிந்துவருவதாக தகவல் அளித்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குறிப்பாக புதுச்சேரியில் உள்ள அனைத்துக் கூட்டுறவு நிறுவனங்களும் நஷ்டத்தைச் சந்தித்து, மூடப்பட்டுவிட்ட நிலையில், தற்போது வரை இயங்கிவரும் ஒருசில கூட்டுறவு நிறுவனங்களில் பாண்லே நிறுவனமும் ஒன்று. அதுமட்டுமல்லாமல் பாண்லே நிறுவனம் பிற கூட்டுறவு நிறுவனங்கள்போல் அல்லாமல், பொதுமக்களுக்கு மிக அத்தியாவசியப் பொருள்களான பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனம். இந்நிலையில் இங்கு பணிபுரிந்துவரும் Operator Gr.-I, Senior Asst., Senior Driver, Dairy Helper ஆகிய ஊழியர்களை சர்வீஸ் பிளேஸ்மென்ட் அடிப்படையில் வேறு அலுவலகங்களில் பணிபுரிய அனுப்புவதால் பாண்லே நிறுவனத்தின் பணிகள் பாதிக்கப்படுவதுடன், உற்பத்திகள் குறைந்து வருமான இழப்பும் ஏற்படுகிறது.

அத்துடன் இவர்களுக்குக் கொடுக்கப்படும் பல லட்சம் சம்பளத்தாலும் இரட்டிப்பு நிதி இழப்பு ஏற்படும் என்பது பாண்லே மேலாண் இயக்குநருக்குத் தெரியாதா... பாண்லே நிறுவனத்தின் இது போன்ற தவறான நடவடிக்கையால்தான் நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டு, பால் விலையை ஏற்றவேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே பாண்லே நிறுவனத்தின் நலன் கருதி பிற அலுவலகங்களில் பணிபுரிந்துவரும் ஊழியர்களை மீண்டும் அவரவர் பணிக்கு திரும்பச் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism