Published:Updated:

6 பேர் உயிருக்குப் போராடியபோது முதல்வர் நெஞ்சுக்கு நீதி படம் பார்த்துக்கொண்டிருந்தார்-சசிகலா புஷ்பா

சசிகலா புஷ்பா

``நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’’ என சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

6 பேர் உயிருக்குப் போராடியபோது முதல்வர் நெஞ்சுக்கு நீதி படம் பார்த்துக்கொண்டிருந்தார்-சசிகலா புஷ்பா

``நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’’ என சசிகலா புஷ்பா தெரிவித்தார்.

Published:Updated:
சசிகலா புஷ்பா

நெல்லை மாவட்டம், அடைமிதிப்பான்குளத்தில் கடந்த 14-ம் தேதி இரவு கல்குவாரியில் ஏற்பட்ட நிலச்சரிவில், 6 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களில் இருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ஒருவரின் உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்
பாரதிய ஜனதா ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில், கல்குவாரி விபத்துக்குக் காரணமான உரிமையாளரைக் கைதுசெய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை ரயில் நிலையம் முன்பாக மாவட்டத் தலைவர் தயா சங்கர் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைத்தலைவரான சசிகலா புஷ்பா கலந்துகொண்டார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஆர்ப்பாட்டத்தில் பேசிய சசிகலா புஷ்பா, ``நெல்லை மாவட்டத்தில் கல்குவாரியில் விபத்து ஏற்பட்டு ஆறு பேர் உயிருக்குப் போராடியபோது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தன் மகனுடைய `நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தின் முதல் காட்சியைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார். பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்த விவகாரத்தில் தலையிட்ட பிறகே மீட்புப் பணிகள் வேகமாக நடந்தன.

ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் யாருக்கும் குவாரி கிடையாது. ஆனால் ஆளுங்கட்சியினர் பலரும், அவர்களின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்காரர்களும் கல்குவாரி நடத்துகிறார்கள். நெல்லையில் விபத்து நடந்த கல்குவாரி, காங்கிரஸ்காரருக்குச் சொந்தமானது. அதனால் சபாநாயகர் அப்பாவு இந்த விபத்தை மறைக்கத் திட்டமிட்டுச் செயல்பட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பான உண்மை நிலையைக் கண்டறிய சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்க வேண்டும்.

கல்குவாரி விபத்து தொடர்பாக நடந்த ஆர்ப்பாட்டம்
கல்குவாரி விபத்து தொடர்பாக நடந்த ஆர்ப்பாட்டம்

விபத்து நடந்த குவாரியின் உரிமையாளரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும். மக்கள் பிரச்னைகள் ஏராளமாக இருக்கும்போது, தமிழ்நாட்டு முதல்வர் திரையரங்கில் படம் பார்த்துக்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது. மக்களின் குறைகளைக் கேட்பதற்கு தயாராக இல்லாத தி.மு.க ஆட்சிக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism