Published:Updated:

ஒன் பை டூ: குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய்... ஆசைகாட்டி வாக்கு அரசியல் செய்கிறதா தி.மு.க?

கோவை சத்யன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
கோவை சத்யன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

முதல்வர், நிதியமைச்சர் தொடங்கி தி.மு.க-வில் இருக்கும் யாரும் குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் தர முடியாது என்று சொல்லவில்லை

ஒன் பை டூ: குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய்... ஆசைகாட்டி வாக்கு அரசியல் செய்கிறதா தி.மு.க?

முதல்வர், நிதியமைச்சர் தொடங்கி தி.மு.க-வில் இருக்கும் யாரும் குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் தர முடியாது என்று சொல்லவில்லை

Published:Updated:
கோவை சத்யன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
கோவை சத்யன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

கோவை சத்யன், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க

வாக்கு அரசியல்தான் செய்கிறது தி.மு.க. அதிலென்ன சந்தேகம்? கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், அதையே அடுத்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் சொல்லி ஆசைகாட்டுவது ஏமாற்று வேலைதானே... இப்போதும்கூட முதல்வர், ‘கொடுப்போம்’ என்றுதான் சொல்லியிருக்கிறார்... ‘எப்போது கொடுப்போம்’ என்று சொல்லவில்லை. தி.மு.க சொன்னதெல்லாம் பொய் என்பது மக்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. மக்களும் அதை உணர்ந்துவிட்டார்கள். விலைவாசி விஷம்போல ஏறிக்கொண்டிருக்கிறது. நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாத ஓர் அரசு, ஆட்சி செய்துகொண்டிருக்கிறது. ‘தமிழர்களின் உரிமையை மீட்போம்’ என்று கூறிய முதல்வர், இப்போது தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம்விடுவதைத் தடுக்க பிரதமருக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறார். இதே தமிழக மீனவர்கள் பிரச்னை தொடர்பாக நாங்கள் கடிதம் எழுதியபோது, ‘அடிமை அரசு’ என்று விமர்சித்தார்கள். நீட் விவகாரத்தில் ‘நீட் தேர்வு விலக்கு பெறும் ரகசியம் எங்களுக்குத்தான் தெரியும்’ என்று கூறினார்கள். இப்போது, ‘மத்திய அரசு எங்களை வஞ்சிக்கிறது’ என்று காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மொத்தத்தில் இவர்கள் கூறியவை அனைத்துமே பொய்யான வாக்குறுதிகள்தான்!

ஒன் பை டூ: குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய்... ஆசைகாட்டி வாக்கு அரசியல் செய்கிறதா தி.மு.க?
ஒன் பை டூ: குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய்... ஆசைகாட்டி வாக்கு அரசியல் செய்கிறதா தி.மு.க?

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், செய்தித் தொடர்பாளர், தி.மு.க

முதல்வர், நிதியமைச்சர் தொடங்கி தி.மு.க-வில் இருக்கும் யாரும் குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் தர முடியாது என்று சொல்லவில்லை. `தி.மு.க அரசு சொன்னதைச் செய்யவில்லை’ என்று எடப்பாடி அண்ட் கோ-தான் பொய்யான பரப்புரையைச் செய்துவருகிறது. தற்போது நாங்கள் குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் தரப்போகிறோம் என்பது தெரிந்ததும், பயந்து அலறுவதும் அவர்கள்தான். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மட்டுமல்ல... கொடுத்த வாக்குறுதிகளுக்கு மேலும் செய்யும் திமுக அரசு. தற்போது முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்குச் சொந்தமான 110 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தில் மட்டுமே 11 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் கொடுக்க முடியும். அ.தி.மு.க-வில் உள்ள எடப்பாடி, பன்னீர்செல்வம், தங்கமணி, விஜயபாஸ்கர் என்று முன்னாள் அமைச்சர்கள் பலரும் முறைகேடாகச் சேர்த்த பணத்திலிருந்து அடுத்த பல வருடங்களுக்கு குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் கொடுக்கலாம். தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல விரும்பும் இந்த அரசு, வருவாயைப் பெருக்கும் செயல்களில் ஈடுபட்டுவருகிறது. தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல, தாய்மார்களுக்குக் கண்டிப்பாக மாதம் 1,000 ரூபாய் கொடுக்கும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism