Published:Updated:

ரெய்டில் கட்டுக் கட்டாக ரூ.2,000, ரூ.500 நோட்டுகள்... மேற்கு வங்க அமைச்சரைக் கைதுசெய்த அமலாக்கத்துறை

20 கோடி ரூபாய் அமலாக்க இயக்குநரகம் மீட்டிருக்கிறது. ( ட்விட்டர் )

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் ஒருவரின் வீட்டிலிருந்து ரூ.20 கோடி ரூபாய் ரொக்கத்தை அமலாக்க இயக்குநரகம் மீட்டிருக்கிறது.

ரெய்டில் கட்டுக் கட்டாக ரூ.2,000, ரூ.500 நோட்டுகள்... மேற்கு வங்க அமைச்சரைக் கைதுசெய்த அமலாக்கத்துறை

மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் ஒருவரின் வீட்டிலிருந்து ரூ.20 கோடி ரூபாய் ரொக்கத்தை அமலாக்க இயக்குநரகம் மீட்டிருக்கிறது.

Published:Updated:
20 கோடி ரூபாய் அமலாக்க இயக்குநரகம் மீட்டிருக்கிறது. ( ட்விட்டர் )

மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி, இதற்கு முன்பு கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது பள்ளி சேவை ஆணையத்தால் (WBSSC) அரசு நடத்தும் உதவி பெறும் பள்ளிகளில் சட்டவிரோத நியமனங்கள் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக, பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் அர்பிதா முகர்ஜியின் வீட்டில் அமலாக்க இயக்குநரகம் சோதனை நடத்தியது.

அப்போது ரூ. 2,000 மற்றும் ரூ. 500 நோட்டுக்கட்டுகள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், அர்பிதா முகர்ஜியின் வளாகத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக அமலாக்க இயக்குநரகம், "இந்தத் தொகை WBSSC ஊழல் குற்றத்தின் வருமானமாகச் சந்தேகிக்கப்படுகிறது" என்று தெரிவித்திருக்கிறது.

அமலாக்க இயக்குநரகம் மீட்ட பணம்
அமலாக்க இயக்குநரகம் மீட்ட பணம்
ட்விட்டர்

சாட்டர்ஜியைத் தவிர, கல்வித்துறை இணை அமைச்சர் பரேஷ் சி ஆதிகாரி, எம்.எல்.ஏ மாணிக் பட்டாச்சார்யா மற்றும் பலர் மீதும் சந்தேகத்தின் அடிப்படையில் ED சோதனை நடத்தியிருக்கிறது. இந்தச் சோதனை குறித்து, மேற்கு வங்க ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் போக்குவரத்து அமைச்சர் ஃபிர்ஹாத் ஹக்கீம் ,"அமலாக்க இயக்குநரகத்தின் இந்தச் சோதனை நடவடிக்கை மத்திய பா.ஜ.க அரசு தனது அரசியல் எதிரிகளைத் தொல்லைப்படுத்த மேற்கொண்ட தந்திரம். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய தியாகிகள் தின பேரணிக்குப் பிறகு இந்தச் சோதனை, திரிணாமுல் காங்கிரஸின் தலைவர்களைத் துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்கும் ஒரு முயற்சியே தவிர வேறில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கிடையே, மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர் பணி நியமன முறைகேடு தொடர்பான பண மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி இன்று கைதுசெய்யப்பட்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!