Published:Updated:

கருங்கடலில் பதற்றம்: அமெரிக்க டிரோன்மீது ரஷ்யப் போர் விமானம் தாக்குதல் - என்ன நடந்தது?

ஆளில்லா விமானம் ( ட்விட்டர் )

ரஷ்யப் போர் விமானம், அமெரிக்காவின் டிரோன்மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

கருங்கடலில் பதற்றம்: அமெரிக்க டிரோன்மீது ரஷ்யப் போர் விமானம் தாக்குதல் - என்ன நடந்தது?

ரஷ்யப் போர் விமானம், அமெரிக்காவின் டிரோன்மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆளில்லா விமானம் ( ட்விட்டர் )

ரஷ்ய விமானப் படைக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று கருங்கடல் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்தது. அப்போது ரஷ்யப் போர் விமானம், அமெரிக்காவுக்குச் சொந்தமான டிரோன்மீது மோதியிருக்கிறது, இந்தச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த திடீர்த் தாக்குதல் காரணமாக கருங்கடலில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.

இது குறித்து அமெரிக்க ஐரோப்பிய கட்டுப்பாட்டு அறை அளித்த தகவலில், இரண்டு ரஷ்ய Su-27 போர் விமானங்கள் சர்வதேசக் கடல்வழியில், ஆளில்லா MQ-9 ரீப்பர் விமானத்தின் மீது மோதி அதன் புரொப்பல்லரை (Propeller) சேதப்படுத்தியதாகத் தெரிவித்திருக்கிறது.

ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளாக்கப்பட்டது என்பதை ரஷ்யா மறுத்துவிட்டது. மேலும், ஆளில்லா போர் விமானம் கட்டுப்பாடற்ற வகையில் பறந்தது. MQ-9 விமானத்தை இயக்கியவர்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள ஒதுங்கியபோது, அந்த ஆளில்லா விமானம் கட்டுப்பாட்டை இழந்து நீரில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது" என ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்திருக்கிறது.

ஆளில்லா விமானம்
ஆளில்லா விமானம்
டவிட்டர்

இது குறித்துப் பேசிய வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி பின்னர், "ரஷ்யர்களின் மறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும், விழுந்த ஆளில்லா விமானம் தவறான நபர்களிடம் செல்வதைத் தடுக்க அமெரிக்கா முயல்கிறது. இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பதால், எங்களைப் பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.