Published:Updated:

தலைவர்கள் பற்றி அவதூறுப் பேச்சு; நாங்குநேரியில் தடுத்து நிறுத்தம் - சாட்டை துரைமுருகன் கைதான பின்னணி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஆர்ப்பாட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன்
ஆர்ப்பாட்டத்தில் பேசிய சாட்டை துரைமுருகன்

`நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள்’ என்றும், ராஜீவ் காந்தி கொலை தொடர்பான சில கருத்துகளைப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை உடைத்து கற்கள், ஜல்லி, பாறைத்தூள் உள்ளிட்டவற்றைச் சட்ட விரோதமாக கேரளத்துக்குக் கடத்துவதைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தக்கலையில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய சீமான், இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கக் கூடாது என்பதை வலியுறுத்திப் பேசினார். அதே சமயம் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய யூடியூபர் சாட்டை துரைமுருகன், ``சீமான் கனிம வளத்துக்கு எதிரா பேசுறாரு. அதை கேரளாவுக்குக் கடத்தக் கூடாதுன்னு பேசுறாரு என்கிறார்கள். கேரளா மலையாளிகள் தேசம் என்பதற்காக நாங்கள் கடத்தக் கூடாது என்று சொல்லலை. கேரளா துறைமுகத்துக்கு எதுக்காக தமிழ்நாட்டின் வளங்களை கொள்ளையடிச்சுக்கிட்டு போகிறே... ஏன்னா, கேரளாவுலயும் மலைகள் இருக்கு" என்றவர், தமிழக முதல்வரை அவதூறாகப் பேசியதாகச் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி 'நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள்’ என்றும், ராஜீவ் காந்தி கொலை தொடர்பான சில கருத்துகளைப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

கைதுசெய்யப்பட்ட சாட்டை துரைமுருகன்
கைதுசெய்யப்பட்ட சாட்டை துரைமுருகன்

சாட்டை துரைமுருகன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது அதிர்வலையை ஏற்படுத்தியது. தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியது, முதல்வரையும் தமிழக அரசையும் அவதூறாகப் பேசியது தொடர்பாக சாட்டை துரைமுருகன்மீது தக்கலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 143, 153, 153ஏ, 505(2), 506(1), 269 உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் சாட்டை துருமுருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த துரைமுருகன் முன்னாள் நாம் தமிழர் கட்சி நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

'சாட்டை துரைமுருகன் கைது அரசியல் காழ்ப்புணர்ச்சியா?' - குற்றச்சாட்டும் விளக்கமும்

தக்கலையில் ஆர்ப்பாட்டம் முடித்து சென்னை நோக்கிச் சென்றுகொண்டிருந்த சாட்டை துரைமுருகனை நாங்குநேரியில் வைத்து போலீஸார் மடக்கிப் பிடித்து கைதுசெய்தனர். அங்கிருந்து அவர் தக்கலைக்கு அழைத்துவரப்பட்டு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை வரும் 25-ம் தேதி வரை சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டது. இதையடுத்து அவர் நாங்குநேரி சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு