Published:Updated:

இலங்கை: ``மக்களின் நலனுக்காக அதிபர் போட்டியிலிருந்து விலகுகிறேன்'' - சஜித் பிரேமதாசா

சஜித் பிரேமதாசா ( ட்விட்டர் )

இலங்கை அதிபர் போட்டியிலிருந்து விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்திருக்கிறார்.

இலங்கை: ``மக்களின் நலனுக்காக அதிபர் போட்டியிலிருந்து விலகுகிறேன்'' - சஜித் பிரேமதாசா

இலங்கை அதிபர் போட்டியிலிருந்து விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அறிவித்திருக்கிறார்.

Published:Updated:
சஜித் பிரேமதாசா ( ட்விட்டர் )

இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலையில் சிக்கித் தவித்துவருகிறது. அத்தியாவசியப் பொருள்களுக்குக்கூட இலங்கையில் கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மக்கள் போராட்டம் வன்முறையாக வெடித்தது. எமர்ஜென்சியை அமல்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்திருக்கிறது. இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் ரணிலும் பதவி விலக வேண்டும் என்று மக்கள் போராடினார்கள்.

இலங்கை
இலங்கை

இதையடுத்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையைவிட்டு தப்பி ஓடிவிட்டார். கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்க பொறுப்பேற்றுக்கொண்டார். வருகிற 20-ந்தேதி நாடாளுமன்றத்தில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே, சஜித் பிரேமதாசா , டல்லஸ் அழகப்பெரும, அருணா திசநாயகா ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், இது தொடர்பாக இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, ``நான் நேசிக்கும் நாடு, மக்களின் நலனுக்காக அதிபர் போட்டியிலிருந்து விலகுகிறேன். அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சே கட்சியின் வேட்பாளர் டல்லஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு கொடுக்கிறேன்'' என பதிவிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!