Published:Updated:

சேலம்: முதல்வர் குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக நிர்வாகி கைது! - நேரில் சந்தித்த பாஜக எம்.எல்.ஏ

பாஜக நிர்வாகி

முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சேலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கைதுசெய்யப்பட்டிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம்: முதல்வர் குறித்து அவதூறு பரப்பியதாக பாஜக நிர்வாகி கைது! - நேரில் சந்தித்த பாஜக எம்.எல்.ஏ

முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக சேலத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கைதுசெய்யப்பட்டிருப்பது பரப்பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
பாஜக நிர்வாகி

சேலம் எடப்பாடி நகர திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்துவருபவர் பாலசுப்பிரமணியம். இவர் எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில், முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்தும், அவருடைய பெயருக்குக் களங்கம் விளைவிக்கும்விதமாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிவரும் பா.ஜ.க-வின் சேலம் மேற்கு மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் அருள் பிரசாத்தின் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார்.

அதனடிப்படையில் புகாரை ஏற்ற போலீஸார் விசாரணை செய்ததில் அருள் பிரசாத் தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் அணிந்திருந்த கூலிங் ஜாக்கெட் விலை 17 கோடி ரூபாய் என நிதியமைச்சர் கூறியதாக விமர்சனம் செய்திருந்தார். அதனால், போலீஸார் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். மேலும் இது குறித்துத் தகவலறிந்த மொடக்குறிச்சி பா.ஜ.க எம்.எல்.ஏ.,சரஸ்வதி, சங்ககிரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருள் பிரசாத்தை நேரில் பார்க்கச் சென்றார்.

அருள் பிரசாத்
அருள் பிரசாத்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “தனியார் தொலைக்காட்சியில் வந்ததைத்தான் பாஜக நிர்வாகி பதிவிறக்கம் செய்துள்ளார். அவராக எதையும் உருவாக்கவில்லை. இது திமுக அரசின் அராஜகத்தை வெளிப்படுத்துகிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தமிழகத்தில் எந்தக் கட்சியும் வளரக் கூடாது. அடிமையாகத்தான் இருக்க வேண்டுமென திமுக நினைக்கிறது. இதற்கு ஒருபோதும் பாஜக பயப்படாது” என்று கூறினார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism