Published:Updated:

``என்னோட தொகுதிக்கு ரூ.200 கோடி ஒதுக்கணும்..!" - வராதவருக்கும் சேர்த்து நிதி கேட்ட பா.ம.க எம்.எல்.ஏ

பா.ம.க எம்.எல்.ஏ சதாசிவம்

`சட்டமன்றம் தொடங்கிய நாளிலிருந்து ஏதாவது ஒரு மனு கொடுத்துக்கிட்டுதான் இருக்குறேன். எனக்கு நிதி வந்தபாடில்லை.. அதனால, எனக்கே 200 கோடி ரூபாய் ஒதுக்கணும்.' - எம்.எல்.ஏ சதாசிவம்.

``என்னோட தொகுதிக்கு ரூ.200 கோடி ஒதுக்கணும்..!" - வராதவருக்கும் சேர்த்து நிதி கேட்ட பா.ம.க எம்.எல்.ஏ

`சட்டமன்றம் தொடங்கிய நாளிலிருந்து ஏதாவது ஒரு மனு கொடுத்துக்கிட்டுதான் இருக்குறேன். எனக்கு நிதி வந்தபாடில்லை.. அதனால, எனக்கே 200 கோடி ரூபாய் ஒதுக்கணும்.' - எம்.எல்.ஏ சதாசிவம்.

Published:Updated:
பா.ம.க எம்.எல்.ஏ சதாசிவம்

சேலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ஒவ்வொரு எம்.எல்.ஏ-வும் தங்கள் தொகுதிகளிலுள்ள பள்ளிகளின் நிலை குறித்துக் கூட்டத்தில் விவரித்தனர்.

அப்போது பேசிய பா.ம.க-வின் மேட்டூர் எம்.எல்.ஏ சதாசிவம், ``நான் மேட்டூரில் உள்ள எல்லாப் பள்ளிகளுக்கும் சென்றிருக்கேன். அங்க நான் பார்த்த பள்ளிகூடங்கள் எதுவுமே தரமானதாக இல்லை. கட்டடமெல்லாம் மழைக்காலத்துல ஒழுகுது. அதனால மாணவர்கள் மரத்தடியில அமர்ந்து படிக்குறாங்க.

பள்ளிக் கட்டடங்களை கட்டும் ஒப்பந்ததாரர்கள் தரமாகக் கட்டணும். அவங்களுக்குத் தார் ரோடும், பள்ளிக்கூடமும் ஒண்ணாத்தான் தெரியுது. கட்டடம் கட்டும்போதே சரியான அளவு சிமென்ட் போடாம, ஜல்லி போடாம பாத்ரூம் காம்பவுண்ட் கட்டுற மாதிரி கட்டிட்டுப் போயிடுறாங்க. இதனால கொஞ்ச நாள்லயே விரிசல் விட ஆரம்பிச்சிடுது. அதனால பள்ளிக் கட்டடம் கட்டுவதற்குத் தனியாகத் துறை அமைக்க வேண்டும்.

எம்.எல்.ஏ சதாசிவம்
எம்.எல்.ஏ சதாசிவம்

இது குறித்து தமிழக முதல்வர் கவனத்துக்கும் தெரிவிச்சிருருக்கேன். சட்டமன்றம் தொடங்கிய நாளிலிருந்து ஏதாவது ஒரு மனு கொடுத்துக்கிட்டுதான் இருக்குறேன். எனக்கு நிதி வந்தபாடில்லை... அதனால, எனக்கே ஒரு 200 கோடி ரூபாய் ஒதுக்கணும். எனவே, சேலம் மாவட்டத்திலுள்ள என்னுடைய மேட்டூர் சட்டமன்றத் தொகுதிக்கும், எனக்குப் பக்கத்து தொகுதி எம்.எல்.ஏ அருளுக்கும் கட்டடம் கட்ட 20 கோடி ரூபாய் முதலில் தரணும்" என்றார்.

கூட்டத்துக்கு வராத எம்.எல்.ஏ-வுக்கும் சேர்த்து பா.ம.க எம்.எல்.ஏ நிதி கேட்க, அதுவரையிலும் ஏதோ சிந்தனையில் இருந்த அமைச்சர் அன்பில் மகேஸ் சற்று நிமிர்ந்து உட்கார்ந்து அவரை அதிர்ச்சியுடன் பார்த்தார். எம்.எல்.ஏ-வின் பேச்சு கூட்டத்தில் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism