Published:Updated:

``தயவு செய்து டாஸ்மாக் கடையை மூடுங்கள்!" - ஊழியர்கள் காலில் விழுந்து வலியுறுத்திய சேலம் எம்.எல்.ஏ

சேலம் எம்.எல்.ஏ

பொதுமக்களுடன் மதுக்கடைக்குச் சென்ற எம்.எல்.ஏ., ``நீங்கள் கேட்ட காலக்கெடு முடிந்துவிட்டது. நாளை கடையை திறக்கக் கூடாது" எனக் கூறினார். மேலும் அங்கிருந்த டாஸ்மாக் ஊழியரின் காலில் விழுந்த எம்.எல்.ஏ., ”தயவுசெய்து கடையை மூடுங்கள்" என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.

சேலம், ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் சுமார் 10 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை இயங்கிவருகிறது. இந்தக் கடை ஊரின் மையப்பகுதியில் செயல்பட்டுவருவதால், குடிமகன்களின் தொந்தரவு அதிகரித்துவருவதாகப் புகார் எழுந்தது. எனவே, கடையை மூடக் கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். கடந்த மாதம், சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ அருள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது டாஸ்மாக் நிறுவனத்தின் சார்பில் கடையை அகற்ற ஒரு மாத காலம் அவகாசம் கேட்கப்பட்டது. மக்களும் அதற்கு ஒப்புக்கொண்டு ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், கால அவகாசம் முடிந்த நிலையில், இதுவரை கடையை மூடவோ, வேறு இடத்துக்கு மாற்றவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

காலில் விழுந்த எம்எல்ஏ
காலில் விழுந்த எம்எல்ஏ

இந்த நிலையில், நேற்று முன்தினம் டாஸ்மாக் கடையை மூடுவதற்கான வழிமுறை குறித்து எம்.எல்.ஏ அருள் தலைமையில் முத்துநாயக்கன்பட்டி, செல்லப்பிள்ளைகுட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து பொதுமக்களுடன் மதுக்கடைக்குச் சென்ற எம்.எல்.ஏ., ``நீங்கள் கேட்ட காலக்கெடு முடிந்துவிட்டது. நாளை கடையை திறக்கக் கூடாது" எனக் கூறினார். மேலும், அங்கிருந்த டாஸ்மாக் ஊழியரின் காலில் விழுந்த எம்.எல்.ஏ., ”தயவுசெய்து கடையை மூடுங்கள்" என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட ஆரம்பித்தது. அதையடுத்து சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடுமாறு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் உத்தரவிட்டார்.