Published:Updated:

``சேலம் டெல்டா மாவட்டமாக மாறும்!'' -காவிரி சரபங்கா திட்டம் குறித்து எடப்பாடி மகிழ்ச்சி

பழனிசாமி
பழனிசாமி ( எம்.விஜயகுமார் )

``நான் அமைச்சரானதிலிருந்து முதல்வர் ஆன பிறகும் எவ்வளவோ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டிருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சி கொடுக்கக் கூடிய நிகழ்ச்சி. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி."

``காவிரி நீர் ஒரு சொட்டு கூட கடலில் வீணாகக் கலக்காமல் மக்களுக்குப் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் காவிரி சரபங்கா இணைப்புத் திட்டத்தின் மூலம் சேலத்தில் வறண்டு கிடக்கும் 100 ஏரிகள் நிரப்பப்படும். இத்திட்டத்தின் மூலம் சேலம் டெல்டா மாவட்டமாக மாறும்'' என்றார்.

மேடை
மேடை
எம்.விஜயகுமார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று 565 கோடி மதிப்பீட்டில் காவிரி சரபங்கா இணைப்புத் திட்டத்திற்காக எடப்பாடி ஒன்றியம் இருப்பாளியில் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் தமிழகத் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, சேலம் மாவட்ட கலெக்டர், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் விவசாயிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்.

இத்திட்டத்தின் மூலம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மேட்டூர் அணை அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டி உபரி நீர் 16 கண் பாலம் வழியாக வெளியேற்றும் போது நீரேற்று முறையில் சரபங்கா கால்வாய் மூலம் சேலத்தில் 100 ஏரிகள் நிரப்பப்பட உள்ளன. இதனால் வறண்டு கிடக்கும் மேட்டூர் காவிரி கரையோர மக்கள் மிகுந்த பயனடைவார்கள்.

வழித்தடம்
வழித்தடம்
எம். விஜயகுமார்

இதுபற்றிப் பேசிய மேட்டூர் எம்.எல்.ஏ செம்மலை, ``எம்.ஜி.ஆர் சிறப்பான ஆட்சி செய்தார். ஜெயலலிதா அம்மா மிகச் சிறப்பான ஆட்சி செய்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மிக மிகச் சிறப்பாக ஆட்சி செய்கிறார். மக்களின் நாடித் துடிப்பை உணர்ந்து செயல்படுகிறார்'' என்றார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``நான் அமைச்சரானதிலிருந்து முதல்வர் ஆன பிறகும் எவ்வளவோ நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சி கொடுக்கக் கூடிய நிகழ்ச்சி. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சி. வறண்டு கிடக்கும் இந்த ஏரி இன்னும் 11 மாதத்தில் நீர் நிரம்பி வேளாண்மை செழிக்கப்போகிறது. சொன்னதைச் செய்யும் ஒரே அரசு அம்மா அரசு.

நீர் ஆதாரம் பெருகினால் கிராமங்கள் வளர்ச்சி பெறும் என அம்மா கண்ட கனவை இதன் மூலம் நிறைவேற்றியிருக்கிறோம். தமிழகத்தில் 40 ஆயிரம் ஏரிகள் இருக்கின்றன. அதில் விவசாயிகளின் பங்களிப்போடு குடிமராமத்துப் பணியில் ஏரிகள் தூர் வாரப்பட்டு நீர் நிரம்பி இருக்கின்றன. இதில் முறைகேடு நடந்ததாக ஸ்டாலின் தெரியாமல் சொல்லுகிறார்.

கூட்டம்
கூட்டம்
எம்.விஜயகுமார்

காவிரி நீர் ஒரு சொட்டு கூட கடலில் வீணாகக் கலக்காமல் மக்களுக்குப் பயன்பெறும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் காவிரி சரபங்கா இணைப்புத் திட்டத்தின் மூலம் சேலத்தில் வறண்டு கிடக்கும் 100 ஏரிகள் நிரப்பப்படும். இத்திட்டத்தின் மூலம் சேலம் டெல்டா மாவட்டமாக மாறும். மக்களின் எண்ணங்களை நிறைவேற்றுவதே எங்கள் லட்சியம்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு