Published:Updated:

``பாஜக இப்படியே வளர்ந்தால் வாக்குரிமையையும் நீங்கள் இழக்க நேரும்!" - அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

``இவர்கள் இப்படியே அதிக சக்தி வாய்ந்தவர்களாக மாறினால், வாக்களிக்கும் உரிமையையும் நீங்கள் இழக்க நேரிடும்." - அகிலேஷ் யாதவ்

``பாஜக இப்படியே வளர்ந்தால் வாக்குரிமையையும் நீங்கள் இழக்க நேரும்!" - அகிலேஷ் யாதவ்

``இவர்கள் இப்படியே அதிக சக்தி வாய்ந்தவர்களாக மாறினால், வாக்களிக்கும் உரிமையையும் நீங்கள் இழக்க நேரிடும்." - அகிலேஷ் யாதவ்

Published:Updated:
அகிலேஷ் யாதவ்

மத்தியில் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க, மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட சலசலப்புக்கு மத்தியில், இறுதியாக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கூட்டணி ஆட்சி அமைத்துவிட்டது. ஆனால் இது நிகழ்ந்து சில வாரங்களிலேயே நிதிஷ் குமாரின் அதிரடி முடிவால் பீகாரில் பா.ஜ.க தனது கூட்டணி ஆட்சியை இழந்திருக்கிறது.

பாஜக
பாஜக

இப்படி பா.ஜ.க அரசியலில் திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுவரும் நிலையில், பா.ஜ.க-வின் வளர்ச்சி குறித்து உத்தரப்பிரதேச எதிர்க்கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ், மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம், ஜவ்வா கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய அகிலேஷ் யாதவ், ``பா.ஜ.க, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலினத்தவர்களின் வாக்குகளைப் பெறுகிறது. ஆனால், அவர்களுக்கான உரிமையை பா.ஜ.க கொடுக்கவில்லை.

அகிலேஷ் யாதவ்
அகிலேஷ் யாதவ்

உங்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுகின்றன. அரசியலமைப்புச் சட்டமும் தாக்கப்படுகிறது. இவர்கள் இப்படியே அதிக சக்தி வாய்ந்தவர்களாக மாறினால், வாக்களிக்கும் உரிமையையும் நீங்கள் இழக்க நேரிடும். இதை நீங்கள் நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளவேண்டாம். இன்று, இந்தியாவின் சொத்துகளையெல்லாம் பா.ஜ.க-வினர் விற்கிறார்கள். அதோடு, அவர்கள் ஒட்டுமொத்த நாட்டையும் தொழிலதிபர்களுக்கு வழங்கியிருக்கின்றனர். இவர்கள் இன்னும் சில நாள்கள் தங்கினால் நீங்களும்... நாங்களும் அடிமைகளாகி விடுவோம்" என்றார்.

மேலும் பா.ஜ.க-வின் தேசியக்கொடி கோரிக்கையை விமர்சித்த அகிலேஷ் யாதவ், ``இன்று ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக்கொடி இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், வரலாற்றை உற்றுப் பார்த்தால், மூவர்ணக் கொடியை எதிர்த்தவர்கள் இவர்கள்தான்" என்று கூறினார்.