Published:Updated:

உடல்நலக் குறைவு; சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி!

முலாயம் சிங் யாதவ்

முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரின் தந்தை உடல்நலம் குறித்து விசாரித்தார்.

உடல்நலக் குறைவு; சமாஜ்வாடி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் மருத்துவமனையில் அனுமதி!

முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரின் தந்தை உடல்நலம் குறித்து விசாரித்தார்.

Published:Updated:
முலாயம் சிங் யாதவ்

சமாஜ்வாடி கட்சியின் நிறுவனரும், உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் உடல்நலக் குறைவால், குருகிராமிலுள்ள மேதாந்தா மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகப் பாதை நோய்த்தொற்றால் (UTI) பாதிக்கப்பட்டிருந்த முலாயம் சிங்கின் உடல்நிலை, மூச்சுத் திணறல் மற்றும் சிறுநீரக சிக்கல்கள் காரணமாக மோசமடைந்ததையடுத்து, உடனடியாக அவசர சிகிச்சை பிரிவுக்கு(ஐ.சி.யு) மாற்றப்பட்டார்.

முலாயம் சிங் யாதவ்
முலாயம் சிங் யாதவ்

அதோடு, முலாயம் சிங் தற்போதைக்கு ஐ.சி.யு-வில் வென்டிலேட்டர் உதவியுடன் இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் முலாயம் சிங்-க்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள், அடுத்த 24 மணிநேரம் மிகவும் இக்கட்டானதாக இருக்கும் என்று தெரிவித்திருக்கின்றனர்.

அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத்
அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத்

இந்த செய்தியறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் யாதவை தொலைபேசியில் தொடர்புகொண்டு, அவரின் தந்தை உடல்நலம் குறித்து விசாரித்தார். கூடவே, மேதாந்தா மருத்துவமனை மருத்துவர்களிடம் பேசி அவருக்கு சிறப்பு சிகிச்சையளிக்குமாறு கேட்டுக் கொண்டார். முலாயம் சிங் விரைவில் குணமடைந்து திரும்புமாறு அரசியல் தலைவர்கள் பலரும் ட்வீட் செய்துவருகின்றனர். அதில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ``முலாயம் சிங் யாதவ் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்" என ட்வீட் செய்திருந்தார்.