Published:Updated:

``சம்ஸ்கிருதக் கல்வி மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்!'' - கல்வித்துறை அமைச்சர்

தர்மேந்திர பிரதான்

``சம்ஸ்கிருதம் ஒரு மொழி மட்டுமல்ல, அது ஓர் உணர்ச்சி'' என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

``சம்ஸ்கிருதக் கல்வி மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்!'' - கல்வித்துறை அமைச்சர்

``சம்ஸ்கிருதம் ஒரு மொழி மட்டுமல்ல, அது ஓர் உணர்ச்சி'' என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
தர்மேந்திர பிரதான்

நாடு முழுவதும் சம்ஸ்கிருத மொழியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் ‘கர்ஷ் மஹோத்சவ்’ என்ற நிகழ்ச்சி புதுடெல்லியில் நடைபெற்றது. மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழகத்தால் மே 7 முதல் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது அந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், ``சம்ஸ்கிருதம் ஒரு மொழி மட்டுமல்ல, அது ஓர் உணர்ச்சி. நமது அறிவும் ஞானமும் நமது செல்வம்.

அமித் ஷா, மோடி
அமித் ஷா, மோடி

தேசிய கல்விக் கொள்கையின்படி, சம்ஸ்கிருதம் உட்பட அனைத்து இந்திய மொழிகளுக்கும் அரசாங்கம் முக்கியத்துவம் அளித்துள்ளது. பல்வேறு இந்திய மொழிகளை ஒன்றிணைப்பதில் இது பெரும் பங்களிப்பைக் கொண்டுள்ளது. சம்ஸ்கிருதப் பல்கலைக்கழகங்கள் பெரிய பல்துறை உயர்கல்வி நிறுவனங்களாக மாறும். சம்ஸ்கிருதத்தின் தன்னிச்சையான தன்மை, நவீனத்துவம், அறிவியல் தன்மைக்கு ஆதாரம் தேவையில்லை. சம்ஸ்கிருத கல்வி மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்'' என்றார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism