Published:Updated:

``இந்தியாவின் முதல் பிரதமராக சர்தார் படேல் இருந்திருந்தால், இன்று..!'' - அமித் ஷா சொல்வது என்ன?

அமித் ஷா

``உலகெங்கிலும் உள்ள அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள், ஆனால் உங்கள் தாய்மொழியை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்." - அமித் ஷா

``இந்தியாவின் முதல் பிரதமராக சர்தார் படேல் இருந்திருந்தால், இன்று..!'' - அமித் ஷா சொல்வது என்ன?

``உலகெங்கிலும் உள்ள அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள், ஆனால் உங்கள் தாய்மொழியை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்." - அமித் ஷா

Published:Updated:
அமித் ஷா

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரும், `ஒற்றுமையின் சின்னம்’ என்றும் அழைக்கப்படுபவருமான சர்தார் வல்லபாய் படேலின் 147-வது பிறந்தநாள் இன்று நாடளவில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், நாட்டின் தற்போதைய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, `சர்தார் படேல் இல்லையென்றால், இந்தியாவின் வரைபடம் இன்று இருப்பதுபோல் இருந்திருக்காது' என்று கூறியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

சர்தார் வல்லபாய் படேல்
சர்தார் வல்லபாய் படேல்

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சர்தார் படேல் வித்யாலயா மாணவர்களிடையே இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அமித் ஷா, ``பெற்றோர்கள் குழந்தைகளுடன் தங்கள் தாய்மொழியில் மட்டுமே பேச வேண்டும். உங்கள் மொழியை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். உலகெங்கிலும் உள்ள அனைத்து மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள், ஆனால் உங்கள் தாய்மொழியை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள்.

இறந்த பிறகும் நீண்டகாலமாக நினைவுகூரப்படும் ஒரு மனிதனைத்தான் `உயர்ந்தவர்' என்று அழைக்க முடியும். அவர்தான் சர்தார் வல்லபாய் படேல். நாட்டில், படேலை இந்தியாவின் முதல் பிரதமராக ஆக்கியிருந்தால், நாடு இன்று எதிர்கொள்ளும் பல பிரச்னைகளை எதிர்கொண்டிருக்காது என்ற ஒரு பொதுக் கருத்து இருக்கிறது.

அமித் ஷா
அமித் ஷா

படேல் வெறுமனே கனவு காணும் மனிதர் மட்டுமல்ல. அவர் தன்னுடைய சிந்தனையைச் செயல்படுத்த மிகவும் கடினமாக உழைத்தார். அவர் ஒரு கர்மயோகி. கூட்டுறவு இயக்கத்தை நாட்டில் செயல்படுத்தப் பாடுபட்டவர் அவர். படேல் மட்டும் இல்லையென்றால், இந்தியாவின் வரைபடம் இன்று இருப்பதுபோல இருந்திருக்காது. லட்சத்தீவு, ஜோத்பூர், ஜூனாகத், ஹைதராபாத், காஷ்மீர் ஆகியவற்றை ஒன்றாகக் கொண்டுவந்தார் படேல். காங்கிரஸ் காரிய கமிட்டியில் அதிக வாக்குகளைப் பெற்றாலும் பிரதமர் பதவியைத் தியாகம் செய்தவர் அவர். படேல் இல்லாமல் ஒன்றுபட்ட இந்தியா என்ற எண்ணம் பலனளித்திருக்காது" என்று கூறினார்.