Published:Updated:

ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு மத்தியில் புரட்சிப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா!

அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ் - சசிகலா

அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதல் நிலவி வரும் நிலையில், புரட்சி பயணம் மேற்கொள்வதாக வி.கே. சசிகலா அறிவித்திருக்கிறார்.

ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு மத்தியில் புரட்சிப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா!

அதிமுகவில் ஒற்றைத் தலைமை மோதல் நிலவி வரும் நிலையில், புரட்சி பயணம் மேற்கொள்வதாக வி.கே. சசிகலா அறிவித்திருக்கிறார்.

Published:Updated:
அதிமுக - ஓபிஎஸ் - இபிஎஸ் - சசிகலா

ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக அரசியல் களம் தற்போது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா என்ற இந்த மூன்று முக்கிய புள்ளிகளை சுற்றி நகர்ந்து கொண்டிருக்கிறது. சசிகலாவுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என அதிமுக நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், அக்கட்சியில் ஒற்றைத் தலைமை என்ற சர்ச்சை வலுத்துவருகிறது. ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கடும் கருத்து மோதல் ஏற்பட்டு இருக்கிறது. அதிமுக எடப்பாடி அணி, பன்னீர் செல்வம் அணி என இரண்டு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள்.

ஒற்றைத் தலைமை விவகாரத்துக்கு மத்தியில் புரட்சிப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா!

இந்த சூழலில், சசிகலா சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கையில், `` தமிழ் மண்ணின் உரிமைகளை காத்திடவும், பெண்ணினத்தின் பெருமைகளை பேணி காத்திடும் வகையிலும் சசிகலா பயணத்தை தொடங்குகிறார். இந்த புரட்சி பயணத்தை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணிக்கு தியாகராஜா நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோயம்பேடு பூந்தமல்லி, திருவள்ளூர் ரோடு வழியாக திருத்தணி பைபாஸ் சென்றடைகிறார். இந்த புரட்சி பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள் இளம் தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி, மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது'' என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism