Published:Updated:

``சசிகலா பாஜக, திமுக உள்ளிட்ட எந்தக் கட்சியிலும் சேரலாம்” - முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்

முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்

``மின்துறை அமைச்சருக்கு, துறைசார்ந்த புரிதல், அனுபவம் வரலை. அதுவரையிலும், முதலமைச்சர் இந்தத் துறையில் தனி கவனம் செலுத்தி, மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்.” - நத்தம் விசுவநாதன்

``சசிகலா பாஜக, திமுக உள்ளிட்ட எந்தக் கட்சியிலும் சேரலாம்” - முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்

``மின்துறை அமைச்சருக்கு, துறைசார்ந்த புரிதல், அனுபவம் வரலை. அதுவரையிலும், முதலமைச்சர் இந்தத் துறையில் தனி கவனம் செலுத்தி, மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்.” - நத்தம் விசுவநாதன்

Published:Updated:
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்

புதுக்கோட்டையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``அதிமுக-வுக்கும் சசிகலாவுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது என்று ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நீதிமன்றமும் அதை உறுதிசெய்துவிட்டது. தற்போது நானும் இருக்கேன் என்பதை வெளிக்காட்டும் வகையில் அவர் பேசிவருகிறார். அவர் பேசுவதைக் கட்சியும், மக்களும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

பாஜக ஒருபோதும் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று கூறவில்லை. நாங்களும் எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறோம் என்றுதான் கூறுகிறார்கள். அதிமுக-வுக்கு மாற்று பாரதிய ஜனதா கட்சி அல்ல.

முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்

எப்போதுமே, தமிழக அரசியலில் அதிமுக ஒன்று ஆளுங்கட்சி அல்லது பிரதான எதிர்க்கட்சி, அப்படித்தான் எப்போதும் இருக்கும். அ.தி.மு.க ஆலமரம் போன்ற மிகப்பெரிய கட்சி. அ.தி.மு.க-வுடன் பா.ஜ.க-வை ஒப்பிடுவதே தவறு.

அ.தி.மு.க சுதந்திரமான சிந்தனை உள்ள இயக்கம். இயக்கத்தில் உள்ள ஒவ்வொருவரும் அவர்களது கருத்துகளைக் கூறலாம். அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. கட்சித் தலைமை கருத்துதான் இறுதியானது.

தற்போது பொதுக்குழு கூடவிருக்கிறது. பொதுக்குழுவில் இயற்றப்பட உள்ள தீர்மானம்தான் அதிமுக-வின் அதிகாரபூர்வமான நிலைப்பாடு, அதுதான் இறுதியானது. தற்போது, அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. தற்போது, இரட்டைத் தலைமை நன்றாகச் சென்று கொண்டிருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சசிகலாவுக்கும் அதிமுக-வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அவரை ஒதுக்கிவிட்டுவிட்டோம். அவர் பாஜக-வில் சேரலாம் இல்லையென்றால் திமுக உள்ளிட்ட வேறு எந்தக் கட்சியிலும் சேரலாம். அது அவரின் உரிமை.

தி.மு.க ஆட்சி மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. மக்களுடைய எதிர்ப்பை மறைப்பதற்காக, தி.மு.க திராவிட மாடல் என்று கூறி சில வார்த்தைஜாலங்களை வைத்து அதை மறைக்கப் பார்க்கிறார்கள். உண்மையிலேயே திமுக ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை என்பதை மக்கள் நன்றாக புரிந்துகொண்டிருக்கிறார்ல:. உரிய நேரத்தில், மக்கள் தங்களுடைய கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன்

தி.மு.க ஆட்சியும் மின்வெட்டும் பிரிக்க முடியாத ஒன்று. மின்துறை அமைச்சருக்கு இந்தத் துறை குறித்த புரிதலே இன்னமும் இல்லை. பிரச்னைக்கான அடிப்படைக் காரணத்தை அறிந்தால்தான் நிவாரணத்தைக் கொடுக்க முடியும். அது தெரியாமல்தான், ஏதேதோ காரணங்களைக் கூறிவருகின்றனர். மின்துறை அமைச்சருக்கு, மின்துறை சார்ந்த புரிதல், அனுபவம் வரலை. அது வரும் வரையிலும், முதலமைச்சர் இந்தத் துறையில் தனிகவனம் செலுத்தி, மின்வெட்டுப் பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism