Published:Updated:

`கருவாடு கூட மீன் ஆகும்.. சசிகலா, அதிமுக உறுப்பினர் ஆக முடியாது!’ - சி.வி.சண்முகம் காட்டம்

சி.வி.சண்முகம் ( தே.சிலம்பரசன் )

`சசிகலா தரப்பு, அதிமுக மீது உரிமை கோரிய போது, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து’ - சி.வி.சண்முகம்

`கருவாடு கூட மீன் ஆகும்.. சசிகலா, அதிமுக உறுப்பினர் ஆக முடியாது!’ - சி.வி.சண்முகம் காட்டம்

`சசிகலா தரப்பு, அதிமுக மீது உரிமை கோரிய போது, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து’ - சி.வி.சண்முகம்

Published:Updated:
சி.வி.சண்முகம் ( தே.சிலம்பரசன் )

விழுப்புரம் சட்டமன்ற தொகுதியில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவிய பின்னர் அதிகம் வெளியில் வராமல் இருந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், இன்று விழுப்புரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் சந்தித்து பேசிவிட்டு பின் செய்தியாளர்களை சந்தித்தார்.

"அ.தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, முதன்முறையாக கொரோனா வைரஸ் வந்த சமயத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் என்னென்ன துரிதமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் இன்றைய நிலைமை... 100 நோயாளிகள் சென்றால் அதில் ஐந்து நபர்களை கூட மருத்துவமனையில் அனுமதிப்பது இல்லை. வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ளும்படி, 80 நோயாளிகளை வீட்டிற்கு திருப்பி அனுப்புகிறார்கள். அப்படி அனுமதிக்கப்பட்டாலும், படுக்கை, உணவு வசதி சரியாக இருப்பதில்லை. இது அமைச்சரின் கவனத்திற்கு சென்றதா என்றும் தெரியவில்லை.

சி.வி.சண்முகம்
சி.வி.சண்முகம்
தே.சிலம்பரசன்

நோயாளிகளை கௌரவமாக நடத்த வேண்டும். இறந்தவர்களின் உடலை தூக்கி வீசும் அவலம் இன்று நடந்து கொண்டுள்ளது. இது சரி செய்யப்பட வேண்டும். அதே சமயம், இன்று சிகிச்சை பலனின்றி இறக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இறந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கையை மட்டுமே தான் கணக்கு காட்டுகிறார்கள். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, வீட்டிலேயே தனிமை படுத்திக்கொள்ளும்படி விடப்பட்ட நபர்களில் சிலர் இறப்பதை கணக்கில் எடுத்து கொள்ளப்படுவதில்லை. அப்படி பார்த்தால் இறப்பு விகிதம் 3% முதல் 4% மேல் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீட்டை முறையாக இந்த அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அ.தி.மு.க தலைவர்களால் நடத்தப்படுகின்றன இயக்கம் இல்லை. தொண்டர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அதில் தான் எம்.ஜி.ஆர் இணைந்தார். தொண்டர்கள் அவரை தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். ஆகவே, யாரை நம்பியும் இந்த இயக்கம் இல்லை. எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின்னர் பல மூத்த தலைவர்கள், நாவலர் நெடுஞ்செழியன், சோமசுந்தரம், பண்ருட்டி ராமச்சந்திரன், கே.கிருஷ்ணசாமி, விஸ்வநாதன், அரங்கநாயகம் போன்றோர் அதிமுக இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட போது முக்கிய தூண்களாக இருந்தவர்கள். ஆனால், எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின், இந்த இயக்கத்தை சுக்குநூறாக உடைத்து, 'நாங்கள்தான் உண்மையான அதிமுக. எங்களால் தான் இந்த இயக்கம் நிலைக்கிறது' என்று சொன்ன அத்தனை தலைவர்களும் காணாமல் போன சரித்திரத்தை தான் அதிமுக பார்த்திருக்கிறது. இது தொண்டர்களால் ஆன இயக்கம். அப்போதெல்லாம், சசிகலா எங்கே இருந்தார் என்றே தெரியாது. அவருக்கும் இந்த இயக்கத்திற்கும் சம்பந்தமே இல்லை. அவர், அம்மாவின் வீட்டிலே... அம்மாவிற்கு உதவியாளராக வந்தவர் அவ்வளவு தான்.

ஆலோசனையில் ஈடுபட்ட சி.வி.சண்முகம்
ஆலோசனையில் ஈடுபட்ட சி.வி.சண்முகம்

சசிகலா தரப்பு, அதிமுக மீது உரிமை கோரிய போது, ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என தேர்தல் ஆணையம் தெரிவித்து.. 'இரட்டை இலை சின்னமும் இவர்களுக்கே' என தெளிவாக தெரிவித்திருந்தது. அதன்பின், சசிகலா உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த இறுதி வழக்கிலும், உச்சபட்ச தீர்ப்பாக 'தேர்தல் ஆணையம் கூறியது செல்லும்' என்று கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இனிமேல் சசிகலா தரப்பு என்ன நாடகம் போட்டாலும் நடக்காது. எங்களுக்கு பெரியவர் காளிமுத்து சொல்வதுண்டு, "கருவாடு மீனாகாது" என்று.

இப்போது, 'கருவாடும் மீன் ஆகிவிடும். ஆனால், சசிகலா அதிமுக-வின் உறுப்பினராக கூட ஆக முடியாது'. ஒரு சசிகலா அல்ல... ஆயிரம் சசிகலா வந்தாலும் இந்த அதிமுக இயக்கத்தை ஒன்றும் செய்ய முடியாது.
சி.வி.சண்முகம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முக்கியமாக, நாங்கள் ஆட்சியில் இருந்தபோது; விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கினோம். பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட ஒரு வார காலத்திலேயே அவற்றை நிறுத்தும்படி சொல்லியிருக்கிறார்கள்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் என்ன...! மக்களுக்கான பணியை ஏன் தடுக்க வேண்டும்? அந்த பணிகள் தொடர்ந்து நடைபெறுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், எங்களை களத்தில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளி விடாதீர்கள்" என்றார் காட்டமாக.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism