Published:Updated:

``சிறைக்குள் ரெய்டு.. தினகரன் வெயிட்டிங்”- அடுத்தடுத்த அதிர்ச்சியில் சசிகலா!

சசிகலா (சிறையில்)

சசிகலா தரப்பில் இப்போது நன்னடத்தை விதி்களை காரணம்காட்டி முன்கூட்டியே விடுதலைக்கான வேலைகள் ஆரம்பித்துள்ளார்கள்.

``சிறைக்குள் ரெய்டு.. தினகரன் வெயிட்டிங்”- அடுத்தடுத்த அதிர்ச்சியில் சசிகலா!

சசிகலா தரப்பில் இப்போது நன்னடத்தை விதி்களை காரணம்காட்டி முன்கூட்டியே விடுதலைக்கான வேலைகள் ஆரம்பித்துள்ளார்கள்.

Published:Updated:
சசிகலா (சிறையில்)

`சொத்துகுவிப்பு வழக்கில் நான்காண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தபிறகு கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெங்களூரு பரப்பனா அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா.

சசிகலா
சசிகலா

அப்போது தமிழகத்தில் முதல்வராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றிருந்தார். சசிகலாவின் உறவினரான தினகரன் அ.தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலார் என்ற பதவியையும் பெற்றிருந்தார். சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகளைச் செய்துதர சசிகலா தரப்பில் அப்போது சில ஏற்பாடுகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

சிறையில் சசிகலாவுக்கு தனியாக உணவு தயாரிக்கவும், டி.வி, சேர், உள்ளிட்ட வசதிகளோடு பெண் பணியாளர்களை அவருக்கு பணிசெய்ய வைப்பதற்கும் பெங்களூரு சிறைத்துறையிடம் சசிகலா தரப்பினர் பேரம் பேசியுள்ளார்கள். அப்போது டி.ஜி.பியாக இருந்த சத்யநாராயணராவ் என்பவரிடம் இதற்காக 2 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. சிறைத்துறையின் கூடுதல் டி.ஐ.ஜி-யாக இருந்த ரூபா என்பவருக்கு இந்த விவகாரம் தெரிந்து, சிறைக்குள் அதிரடியாக சோதனை நடத்தினார். அப்போது சசிகலா, இளவரசி உள்ளிட்டோருக்கு அனுமதியை மீறி பல்வேறு வசதிகள் செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்தார். மேலும், சிறையிலிருந்து சசிகலா வெளியே சென்றுவந்ததற்கான வீடியோ ஆதாரங்களையும் ரூபா தரப்பு கைப்பற்றியது.

ரூபா
ரூபா

இதுதொடர்பாக ரூபா அறிக்கை ஒன்றை அரசுக்கு அளித்தார். ஆனால், ரூபா மீது அப்போதை கர்நாடக அரசு சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ரூபாவின் அறிக்கை குறித்து உண்மைத் தன்மையை விசாரிக்க வினய்குமார் ஐ.ஏ.எஸ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

இந்த அறிக்கையில் ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் உண்மை என்று குறிப்பிட்டுள்ளார்கள். இந்த நிலையில், இன்று காலை சசிகலாவைச் சந்திக்க நேற்றே கிருஷ்ணகிரி சென்றடைந்துவிட்டார் தினகரன். இந்த நிலையில், பெங்களுரு காவல்துறை டீம் பரப்பனா அக்ரஹாரா சிறைக்குள் நுழைந்துள்ளது. அந்தச் சிறையின் மேலடுக்குகள் முழுவதிலும் வழக்கத்துக்கு மாறாக சோதனை செய்துள்ளார்கள்.

தினகரன்
தினகரன்

ஒவ்வோர் அறையிலும் இருக்கக்கூடிய கைதிகள் விவரங்கள், அவர்களுக்கு செய்துதரப்பட்ட வசதிகள் குறித்து எல்லாம் சோதனைக் குழுவினர் விசாரித்துள்ளார்கள். இதனால் தினகரன் சிறைக்குள் சென்று சந்திப்பது கால தாமதம் ஆகியுள்ளது. சிறிது நேரம் காத்திருந்த பிறகே தினகரனை சசிகலாவைச் சந்திக்க அனுமதித்துள்ளது சிறைத்துறை. இதற்கு முன்பு சுமார் ஒரு மணிநேரம் வரை சிறைக்குள் இருப்பார் தினகரன். இந்த முறை குறைந்த நேரத்திலே சிறையிலிருந்து வெளியே வந்துவிட்டார்.

இதுகுறித்த பெங்களூரு காவல்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது `வினய்குமார் அறிக்கை ஏற்கெனவே அரசுக்கு வழங்கப்பட்டுவிட்டது. சசிகலா தரப்பில் இப்போது நன்னடத்தை விதி்களை காரணம்காட்டி முன்கூட்டியே விடுதலைக்கான வேலைகள் ஆரம்பித்துள்ளார்கள். சசிகலா வெளியே வருவதை மத்திய பி.ஜே.பி அரசு விரும்பவில்லை. எனவே, தாங்கள் ஆளும் கர்நாடக மாநிலத்தின் சிறைத்துறைக்குச் சில சமிக்ஞைகளை கொடுத்துள்ளது டெல்லி மேலிடம். அதன்படி வினய்குமார் அளித்த அறிக்கையை அடிப்படையாக வைத்தே இதற்கு செக் வைக்கும் வேலையில் பி.ஜே.பி அரசு இறங்கியுள்ளது. அதனால் முதல்கட்டமாக சிறைக்குள் சோதனை என்கிற பூகம்பத்தைக் கிளறிவிட்டுள்ளார்கள். விரைவில் சசிகலா சிறையில் சொகுசு வாழ்க்கை அனுவித்துவருகிறார் என்று சொல்லி நன்னடத்தையை காலி செய்ய உள்ளார்கள். இதனால் சசிகலாவின் விடுதலையை தள்ளிப்போட வைக்கும் ஒரு யுக்திதான்” என்கிறார்கள்.

சசிகலா
சசிகலா

பெங்களூரு சிறையில் நடைபெற்ற சோதனை சசிகலாவின் அறிக்கை சம்பந்தப்பட்டது என்று முதலில் தகவல் வெளியானது. ஆனால், சிறைத்துறை தரப்பில் இது வழக்கமான சோதனை என்று சொல்லியுள்ளார்கள். தினகரன் சந்திப்பு இன்று நடைபெறுவது தெரிந்தே இந்தச் சோதனை நடந்துள்ளது. ஏற்கெனவே மனஉளைச்சலில் இருக்கும் சசிலாவுக்கு அடுத்தடுத்த அதிரடிகளை கொடுத்துவருகிறது கர்நாடக அரசு என்கிறார்கள்.