Published:Updated:

ஜெயலலிதா மரணம்: ``அம்மாதான் சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டார்!" - சசிகலா

சசிகலா

``அ.தி.மு.க-வை ஒன்றிணைப்பதற்கான வேலை தொடங்கிவிட்டது. அதன் பிறகு, 2024 தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவோம்.'' - சசிகலா

ஜெயலலிதா மரணம்: ``அம்மாதான் சிகிச்சைக்கு வெளிநாடு செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டார்!" - சசிகலா

``அ.தி.மு.க-வை ஒன்றிணைப்பதற்கான வேலை தொடங்கிவிட்டது. அதன் பிறகு, 2024 தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவோம்.'' - சசிகலா

Published:Updated:
சசிகலா

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை, ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கப்பட்ட தகவல்களெல்லாம் சசிகலாவால் ரகசியமாக வைத்துக்கொள்ளப்பட்டதாகவும், சசிகலா உட்பட நான்கு பேரை விசாரிக்கவும் பரிந்துரை செய்திருந்தது. அதைத் தொடர்ந்து ஜெயக்குமார், ஜெ.தீபா ஆகியோர் சசிகலாவைக் குற்றம்சாட்டிவந்தனர். இந்த நிலையில், ஜெயலலிதாதான் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என்று கூறியதாக சசிகலா தெரிவித்திருக்கிறார்.

சசிகலா
சசிகலா

சென்னை கீழ்பாக்கத்திலுள்ள கருணை இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை குறித்துப் பேசிய சசிகலா, ``அவர்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் சரியான பதிலைக் கொடுத்தேன். தமிழ்நாட்டு மக்களும் அதைப் புரிந்துகொண்டார்கள். எய்ம்ஸ் மருத்துவர்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள். அவர்கள் கொடுக்கிற மருத்துவக்குழுவினர் இருந்தார்கள்; தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இருந்தார்கள்; எங்கள் அரசாங்கத்திலிருந்தும் மருத்துவர்கள் இருந்தார்கள். அவர்கள் தினமும் அம்மாவின் உடல்நிலையைப் பற்றி அறிக்கைகள் கொடுத்தார்கள். அப்படியிருக்கும்போது இதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லையே!

சசிகலா
சசிகலா

வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல வந்த மருத்துவர்கள் நேரடியாக அம்மாவிடமே கேட்கிறார்கள். அம்மா சொல்கிறார், `எங்களுக்கு வேண்டாம். எங்கள் மாநிலத்திலேயே சென்னை ஒரு `மெடிக்கல் ஹப்'. அதனால இங்கே இல்லாத சிகிச்சை எதுவும் கிடையாது. வெளியிலிருந்து மருத்துவர்களை அழைக்கலாம்' என்று. எங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அம்மா தெளிவாக இங்கே சிகிச்சைகள் நன்றாக நடக்கின்றன என்று சொல்லிவிட்டார். அன்றைக்குக்கூட அம்மா டி.வி பார்த்துக்கொண்டிருந்தார். அ.தி.மு.க-வை ஒன்றிணைப்பதற்கான வேலை தொடங்கிவிட்டது. அதன் பிறகு, 2024 தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவோம்" என்று கூறினார்.