Published:Updated:

அதிமுக: ``சிலரின் சுயநலத்துக்காகக் கட்சியைக் கூறுபோடும் நிலை உருவாகிவிட்டது" - சசிகலா ஆதங்கம்

சசிகலா ( தே,சிலம்பரசன் )

"அதிமுக இன்று கடும் சோதனைக்கு ஆளாகியிருக்கிறது. தொண்டர்கள் சிந்திய ரத்தத்தாலும் வியர்வையாலும்தான் இந்தக் கழகம் உருவானது. அதிமுக ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கான கட்சியாக மாறினால் அது தவறுதான்." - சசிகலா

அதிமுக: ``சிலரின் சுயநலத்துக்காகக் கட்சியைக் கூறுபோடும் நிலை உருவாகிவிட்டது" - சசிகலா ஆதங்கம்

"அதிமுக இன்று கடும் சோதனைக்கு ஆளாகியிருக்கிறது. தொண்டர்கள் சிந்திய ரத்தத்தாலும் வியர்வையாலும்தான் இந்தக் கழகம் உருவானது. அதிமுக ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கான கட்சியாக மாறினால் அது தவறுதான்." - சசிகலா

Published:Updated:
சசிகலா ( தே,சிலம்பரசன் )

தமிழ்நாட்டில் புரட்சிப்பயணம் மேற்கொண்டுவரும் வி.கே.சசிகலா, கடந்த 5-ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திண்டிவனம் பகுதியில் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இரண்டாவது நாள் பயணமாக நேற்று (07.07.2022) மாலை வானூர் அருகேயுள்ள திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, "இந்தக் கழகம் எத்தகைய சூழ்நிலையில் தொடங்கப்பட்டது... எத்தகைய வன்முறைகளை, அராஜகங்களை எதிர்கொண்டது என்பதெல்லாம் மக்களாகிய உங்களுக்குத் தெரியும். 1972-ல் தொடங்கி குண்டர்களாலும், ரெளடிகளாலும் ஏன்... அன்றைய தி.மு.க அரசின் காவல்துறையினராலும் எத்தனை கழகத் தொண்டர்களின் உயிர்கள் பறிபோயின... எத்தனை தொண்டர்களின் கை, கால், மண்டைகள் உடைந்து ரத்தம் சிந்தினார்கள் என்பதையும் அறிவோம்.

திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் சசிகலா
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் சசிகலா

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தொண்டர்கள் சிந்திய வியர்வையாலும் ரத்தத்தாலும்தான் இந்த அதிமுக கழகம் உருவானது. புரட்சித்தலைவரை ஒரு சமயத்தில் கொல்ல முயன்றார்கள். எத்தனையோ தொண்டர்கள் மீது, பொய் வழக்குகளை திமுக ஆட்சியில் போட்டுப் பார்த்தார்கள். புரட்சித்தலைவரின் மறைவுக்குப் பிறகு, பிளவுபட்ட நம் கழகத்தை மீண்டும் ஒன்றாகக் கட்டமைக்க அம்மா அவர்கள் எதிர்கொண்ட துன்பங்கள், துயரங்கள், சோதனைகள் அனைத்தையும் உடனிருந்து பார்த்தவள் நான். அம்மா அவர்களை ஒரு பெண் என்றும் பாராமல், சட்டசபையிலே சேலையைக் கிழித்து அநாகரிகமாகத் தாக்குதல் நடத்தினார்கள் தி.மு.க மந்திரிகள். அதேபோல அம்மாவும் நானும் புதுவையில் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட்டு சென்னைக்குத் திரும்பியபோது, அதிகாலை நேரத்தில் நாங்கள் வந்த வாகனத்தின் மீது லாரியைவிட்டு மோதி எங்களைக் கொலை செய்ய முயன்றார்கள்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாங்கள் இரண்டு பெண்கள், எத்தனையோ அரசியல் பிரச்னைகளுக்கு மத்தியில் துணிச்சலோடு போராடி, எல்லாவிதமான சோதனைகள், வழக்குகள் அனைத்தையும் எதிர்கொண்டு, இரண்டாகப் பிரிந்த கழகத்தை ஒன்று சேர்த்து நாட்டிலேயே 3-வது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றோம். ஆக, இது போன்ற அடக்கு முறைகளுக்கெல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து அரசியல் களத்தில் போராடிக்கொண்டு, ஒரு வீர தமிழச்சியாக உங்கள் முன் இன்றைக்கு நான் வந்து நிற்கிறேன். அம்மா உடனான எனது நட்பு உண்மையானது, புனிதமானது. என்னை, அம்மாவிடமிருந்து பிரித்துவிடலாம் என்றும், அவ்வாறு செய்வதன் மூலம் அம்மா அவர்களை அரசியலிலிருந்து அப்புறப்படுத்திவிடலாம், அ.தி.மு.க-வை அழித்துவிடலாம் என்றும் அரசியல் எதிரிகள் நினைத்தார்கள். ஆனால், அதில் அவர்கள் தோற்றுப்போனார்கள்.

சசிகலா
சசிகலா
10 கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்து நின்றபோதும், பெரிய கூட்டணி ஏதுமின்றி மக்கள் கூட்டணியோடு வென்ற அ.தி.மு.க... இன்று கடும் சோதனைக்கு ஆளாகியிருக்கிறது. தொடர் வெற்றிகளையே பார்த்த அ.தி.மு.க... இன்று தொடர் தோல்விகளையே சந்தித்துவருகிறது. சிலரின் தனிப்பட்ட சுயநலத்துக்காகக் கட்சியை கூறுபோடும் நிலை உருவாகிவிட்டது.

இந்த நிலை மாற வேண்டுமென்றால், அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தலைமை வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்தத் தலைமை, புரட்சித்தலைவரின் சட்ட விதிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், ஒட்டுமொத்த அடிமட்ட தொண்டர்களின் ஆதரவு பெற்ற தலைமையாகத்தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட ஒரு தலைமையால்தான் பொதுமக்களின் ஆதரவுகளையும் பெற முடியும். அதன் மூலமாகத்தான் அடுத்தடுத்த தேர்தல்களில் அ.தி.மு.க வெற்றிபெற முடியும்.

எந்த தி.மு.க ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க தொடங்கப்பட்டதோ... அந்த தி.மு.க ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுக்கக்கூட தயங்குபவர்களால் இயக்கத்துக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. இன்றைக்கு... கழகத் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல், ஒரு சிலர் பேசிக் கொண்டிருப்பதால் அது எதிர்க்கட்சிகளுக்கு வேண்டுமானால் மனநிறைவையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தலாம். ஆனால் அ.தி.மு.க தொண்டர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்துவதாகத்தான் இருக்கிறது. என்னைச் சந்திக்கும் தொண்டர்களும் இதையேதான் தெரிவிக்கிறார்கள். `நான் பெரியவன்...’, `நீ பெரியவன்...’ என இவர்கள் பதவிக்காகச் சண்டை போடுகின்ற செயல், கட்சியை அழிவுப்பாதைக்குத்தான் கொண்டு செல்லும் என்று அப்பாவித் தொண்டர்கள் வருத்தப்படுகிறார்கள். மீண்டும் கழகம் வெற்றிப்பாதையில் பயணிக்கும். அதற்கு உங்கள் சகோதரியாகிய நான் பாடுபடுவேன், இது நிச்சயம் உறுதி.

எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

அதே போன்று, மற்றவர்களைப்போல நேற்று ஒரு பேச்சு... இன்று ஒரு பேச்சு என நான் பேச மாட்டேன். எனவே, காலம் சென்ற இரு பெரும் தலைவர்களின் வழியில் நான் பாடுபடுவேன். தி.மு.க ஆட்சிக்கு வந்த 13 மாதங்களில்... தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் தி.மு.க-வினரின் அராஜகச் செயல்களும், அத்துமீறல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேவருகின்றன. இதனால் மக்கள் நிம்மதியில்லாமல் இருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கும் தி.மு.க அரசு, 'தான் உண்டு... தன் குடும்பம் உண்டு...' என இருப்பதாகப் பொதுமக்கள் கருதுகிறார்கள். இந்த ஆட்சியாளர்களைப் பற்றி தமிழ்நாட்டு மக்களுக்குத் தெளிவாகப் புரிந்துவிட்டது. எனவே, இந்த மக்கள் விரோத அரசை நம்பினால் இதைவிட மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை உணர்ந்து இவர்களைவிட்டு விலக ஆரம்பித்துவிட்டார்கள். யாரும் கவலைப்பட வேண்டாம். விரைவில் காலம் கனியும்போது, நம் ஆட்சி மீண்டும் வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதுவே மக்களுக்கான ஆட்சியாக இருக்கும்" என்றார்.

தொடர்ந்து கிளியனூர் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா, "எம்.ஜி.ஆரின் சட்ட திட்டத்தின்படி நான் கழகத்தின் பொதுச்செயலாளர். எங்களுடைய கட்சிக்கு ஏதும் ஆகாது. அம்மா எப்படிக் கட்சியை ஒன்றுபடுத்தி வெற்றிவாகை சூடினார்களோ.. அதுபோல மீண்டும் நாங்கள் ஒன்று சேர்ந்து, அடுத்த ஆட்சி அ.தி.மு.க ஆட்சியாக அமைத்துக் காட்டுவோம். அதை நிச்சயம் நான் கொண்டுவருவேன். அ.தி.மு.க பிளவுப்படுவது பி.ஜே.பி-யின் வளர்ச்சி என்பதை, என்னைப் பொறுத்தமட்டில் அப்படி நான் நினைக்கவில்லை. அ.தி.மு.க-வைப் பொறுத்தவரை, மேல்மட்டத்தில் உள்ள தலைவர்கள் `நீயா... நானா...’ என்று போட்டி போடுகிறார்கள். அவ்வளவுதானே தவிர, தொண்டர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வை யாரும் வீழ்த்த முடியாது. எதுவும் அ.தி.மு.க-வின் எதிர்காலத்தை பாதிக்கும் அளவுக்கு நான் விட்டுவிட மாட்டேன். வீட்டு உபயோக சிலிண்டர் விலையை மத்திய அரசு உடனடியாகக் குறைக்க வேண்டும். தி.மு.க அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல, சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியத்தை உடனே செயல்படுத்த வேண்டும்.

சசிகலா பேட்டி
சசிகலா பேட்டி

அ.தி.மு.க ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கான கட்சியாக மாறினால் அது தவறுதான். அதுபோல கொண்டுபோக நினைக்கிறார்கள், அது நிச்சயம் நடக்காது. அ.தி.மு.க எல்லோருக்கும் பொதுவானது" என்றார்.