Published:Updated:

``நயினார் நாகேந்திரன் நன்றியுள்ளவர்; அதிமுக ஒன்று சேர்வதை திமுக விரும்பவில்லை" - சொல்கிறார் சசிகலா

சசிகலா ( தே.சிலம்பரசன் )

"நயினார் நாகேந்திரன் நன்றியுள்ளவர் என நினைக்கிறேன். ஏனெனில், அவர் இருக்கும் பா.ஜ.க கட்சிக்கு நான் வந்தால் நன்றாக இருக்கும் என அவர் நினைத்ததை செல்லியிருக்கிறார். அப்படித்தான் நான் எடுத்துக் கொள்கிறேன்" - சசிகலா

``நயினார் நாகேந்திரன் நன்றியுள்ளவர்; அதிமுக ஒன்று சேர்வதை திமுக விரும்பவில்லை" - சொல்கிறார் சசிகலா

"நயினார் நாகேந்திரன் நன்றியுள்ளவர் என நினைக்கிறேன். ஏனெனில், அவர் இருக்கும் பா.ஜ.க கட்சிக்கு நான் வந்தால் நன்றாக இருக்கும் என அவர் நினைத்ததை செல்லியிருக்கிறார். அப்படித்தான் நான் எடுத்துக் கொள்கிறேன்" - சசிகலா

Published:Updated:
சசிகலா ( தே.சிலம்பரசன் )

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க-வில், தகவல் தொழில்நுட்ப அணி வடக்கு மாவட்ட செயலாளராகவும், அதன் பின்னர் மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளராகவும் இருந்து அண்மையில் சசிகலா தரப்புக்குச் சென்ற முகமது ஷெரீப் என்பவரின் இல்லத் திருமண நிகழ்ச்சி நேற்று (05.06.2022) திண்டிவனம் அருகே உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினமே திண்டிவனத்திற்கு வந்திருந்த சசிகலா, தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்தார். இவரை வரவேற்று வைக்கப்பட்ட அ.தி.மு.க கட்சிக் கொடிகள், அ.தி.மு.க நிர்வாகிகளால் பிடுங்கப்பட்டது, சில பேனர்கள் கிழிக்கப்பட்டது போன்ற சம்பவங்கள் திண்டிவனம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

சசிகலா தரப்பினர் சாலை மறியல் - திண்டிவனம்
சசிகலா தரப்பினர் சாலை மறியல் - திண்டிவனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில், நேற்று காலை திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய சசிகலா, மேடையில் பேசும்போது, ``அ.தி.மு.க பொதுச் செயலாளராக இந்நேரத்தில் ஒன்றை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். அதாவது, 'கழகக் கொடியை பயன்படுத்தக் கூடாது' என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அப்படி சொல்பவர்கள் தி.மு.க-வை சேர்ந்தவர்களாகவோ அல்லது தி.மு.க-வுக்கு மறைமுக உதவி செய்பவர்களாகவோ தான் இருக்கக்கூடும். அ.தி.மு.க ரத்தம் தன் உடம்பில் ஓடுவதாக இருந்தால், கழகம் அழிந்துவிடாமல் எப்படி காப்பாற்றுவது என்று மட்டும்தான் நினைப்பார்களே தவிர... இருப்பவர்களையும் விரட்டியடித்து கட்சியை பலவீனப்படுத்த மாட்டார்கள். இது போன்ற ஒருசிலரை பார்க்கும் போது, கட்சிக்கு எதிரான திட்டங்களை மனதில் வைத்து செயல்படுகிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவர்களுடைய எண்ணம் என்றைக்கும் நிறைவேறாது என்பதை உறுதியோடு தெரிவித்துக்கொள்கிறேன். இனிவரும் காலம் நம்முடையது... புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி வழியிலான பொற்கால ஆட்சியாக அது இருக்கும். அதுவே, மக்களுக்கான ஆட்சியாக இருக்கும்" என்றார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவர், "தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒரு வருட காலம் முடிந்துவிட்டது. அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளில் 400... 435 செய்து முடித்துவிட்டோம் என்று சொல்கிறார்கள். ஆனால், மக்களிடம் கேட்கும் போதுதான் அப்படியேதும் இல்லை என்பது தெரிய வருகிறது. ஆட்சிக்கு வருவதற்காக 500 பக்கம் தேர்தல் அறிக்கையை உருவாக்குவதற்கு கவனம் செலுத்திய தி.மு.க-வினர், ஆட்சிக்கு வந்ததும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டதை செயல்படுத்துவதில் கவனம் செலுத்தவில்லை என்பதுதான் என்னுடைய கருத்து. அதேபோல ஒரு வருட காலத்தில் கொலை, கொள்ளை மிகவும் அதிகரித்துள்ளது. திமுக ஆட்சியில், அந்த கட்சிக்காரர்களின் அராஜகம் மிகவும் அதிகமாகிவிட்டது. இதை கேட்க ஆளில்லை என்ற பாணியில் போய்க்கொண்டு இருக்கிறார்கள். இதனால், தி.மு.க-வினர் பாதிக்கப்பட மாட்டார்கள், வாக்களித்த மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள்.

சசிகலா
சசிகலா
தே.சிலம்பரசன்

கொலை போன்ற சம்பவங்கள் இந்த ஒரு வருடத்தில் 600க்கும் மேல் நடந்துவிட்டது. இதில் பாதிக்கும் மேல் சென்னை மாநகரத்தில் நடந்துள்ளது. அம்மா, சென்னை விரிவாக்கம் செய்தபோது போலீஸ் கமிஷனர் ஒருத்தர் தான் இருந்தார். அதனால் எல்லாம் கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது 3 கமிஷனர்கள் போடப்பட்டுள்ளனர். இதனால் ஒரு இடத்தில் தவறு செய்பவர்கள், வேறொரு காவல் எல்லைக்குள் மறைந்து கொள்கிறார்கள். இது நடைமுறையில் நடந்து கொண்டிருக்கிறது. எனவே சென்னையில் போலீஸ் எல்லைகளை மூன்றாக பிரித்தது சரியல்ல. காவல்துறையின் அதிகார மையங்கள் தனித்தனியாக இருக்கும் போது அது தவறு செய்பவர்களுக்கு வசதியாக போய்விடுகிறது. ஒரு கமிஷனர் பதவியை வைத்து, துணை பொறுப்புகளை மட்டும் அதிகரித்து இருந்திருந்தால் இதுபோன்ற தவறுகள் குறைந்திருக்கும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நயினார் நாகேந்திரன் நன்றியுள்ளவர் என நினைக்கிறேன். ஏனெனில், அவர் இருக்கும் பா.ஜ.க கட்சிக்கு நான் வந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து செல்லியிருக்கிறார். அப்படித்தான் நான் எடுத்துக் கொள்கிறேன். அ.தி.மு.க ஒன்று சேர்வதை திமுக தான் விரும்பவில்லை. அப்படி இருப்பது தி.மு.க-விற்கு உடனடி பலனைத் தரும். அதனால், அ.தி.மு.க அப்படியே இருப்பதுதான் நல்லது என நினைக்கிறார்கள். என்னுடைய 38 வருட அரசியல் வாழ்க்கையில் ஸ்டாலினுடைய அப்பாவையும் பார்த்துவிட்டுத்தான் வந்திருக்கிறேன். ஆகவே, நிச்சயம் அனைத்தையும் சரி செய்யமுடியும் எனும் தைரியம் எனக்கு இருக்கிறது. அதை என்னால் செய்து முடிக்க முடியும்.

சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பு -திண்டிவனம்
சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பு -திண்டிவனம்

எதிர்க்கட்சி என்பது, தமிழக மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ அவர்கள்தான் வரமுடியும். எல்லோரும் ஆசைக்கு சொல்லத்தான் செய்வார்கள். பாமக, பாஜக கூறுவதும் அப்படித்தான். அதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. வரும் 23-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளதாக கூறப்படும் அ.தி.மு.க செயற்குழு, பொதுக்குழு கூட்டம் உண்மையானதே அல்ல.

தி.மு.க இம்முறை ஆட்சிக்கு வந்ததும் ஒரு புது கதையைச் சொல்கிறார்கள். "திராவிட மாடல் ஆட்சி" என்று. அப்படியென்றால் என்னவென்று எனக்கும் புரியவில்லை, அவர்களுக்கும் புரிய வாய்ப்பில்லை. இவர்கள் கூறிக்கொள்ளும் அந்த திராவிட மாடல் ஆட்சியை எம்.ஜி.ஆர், அம்மாவும் அன்றே செய்துவிட்டு சென்றுவிட்டார்கள். திராவிடம் என்ற வார்த்தையே ஏழை எளியோரை சமநிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காகத்தான். அதற்கான திட்டங்களை எல்லாம் செய்து முடித்தாகிவிட்டது. தி.மு.க என்ன புதுசாக செய்ய போகிறார்கள் என்று தான் தெரியவில்லை. தி.மு.க ஆட்சியில், அரசு அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பதில்லை. இவர்களாகவே முடிவை எடுத்துக்கொள்கிறார்கள்.

அதற்கு உதாரணம், மேட்டூரில் முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்துவிட்டது. வரும் 20-ம் தேதி வரை தூர்வாரும் பணி இருக்கிறது. ஆனால் அப்பணி முடிவதற்கு முன்பாகவே தண்ணீரை திறந்துவிட்ட ஸ்டாலின், தூர்வாரும் பணியையும் பார்வையிடுகிறார். இது எப்படினு எனக்கும் புரியவில்லை.
ஸ்டாலின்
ஸ்டாலின்

தண்ணீரை திறந்து விட்டதும் விவசாயிகளுக்கு விதை கொடுக்க வேண்டும், அடுத்ததாக உரம் கொடுக்க வேண்டும். இது இரண்டுமே டெல்டா பகுதிகளில் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இவர்கள் எதையுமே திட்டமிட்டு செயல்படவில்லை என்பதை கடந்த ஒரு வருடமாக கவனித்து வருகிறேன். மக்களிடம் விரைவில் இவர்கள் வெறுப்பை சந்திப்பார்கள். இந்த ஓராண்டு தி.மு.க ஆட்சியில் அதிக அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது.

தி.மு.க எப்போதும் சொல்வதை செய்வது கிடையாது. ஆனால் துணிந்து சொல்லி விடுவார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக அவர்களை சார்ந்த ஆண்களின் தலையீடு இருப்பதை ஆளும் அரசு தான் சரிசெய்ய வேண்டும். ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இது போலெல்லாம் கட்டாயம் நடக்காது. முன்னாள் அமைச்சர்கள் மீது தி.மு.க நடவடிக்கை எடுக்கும் என்று சொல்லப்படுவது... முன்னால் அமைச்சர்களிடம் ஏதோ பேச்சு வார்த்தை நடந்து கொண்டுள்ளதாக தான் எங்களுக்கு தகவல் வருகிறது. அ.தி.மு.க ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் கொண்டுவருவோம். அது ஏழை, எளிய மக்களுக்கான ஆட்சியாக கட்டாயம் இருக்கும். அ.தி.மு.க-வை ஒன்று சேர்க்கும் தைரியம் இருக்கிறது, அதை நிச்சயம் செய்வேன்." என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism