Published:Updated:

"சசிகலா அம்மா வந்தாதான் கன்ட்ரோல் பண்ண முடியும்!" - சசிகலாவிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சொல்வதென்ன?

சசிகலா

'அம்மா எப்படி கட்சியை வைத்திருந்தாங்களோ.. அதுபோலவே கொண்டு வந்துவிடலாம்' என்று சசிகலா முன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம் உரையாடிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

"சசிகலா அம்மா வந்தாதான் கன்ட்ரோல் பண்ண முடியும்!" - சசிகலாவிடம் பேசிய முன்னாள் அமைச்சர் சொல்வதென்ன?

'அம்மா எப்படி கட்சியை வைத்திருந்தாங்களோ.. அதுபோலவே கொண்டு வந்துவிடலாம்' என்று சசிகலா முன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம் உரையாடிய ஆடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

Published:Updated:
சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்த சசிகலா, சிறைத் தண்டனை முடிந்து விடுதலையானதும் மீண்டும் கட்சித் தலைமை ஏற்பார் என தொண்டர்கள் உற்சாகத்தில் காத்திருந்தனர். அவர் விடுதலையாகி வந்தபோது தொண்டர்களால் உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது. ஆனால், 'அரசியலிலிருந்து விலகியிருக்கப்போவதாக' 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சசிகலா. இதனால் தொண்டர்கள் வருத்தத்துக்கு உள்ளானார்கள். இந்தநிலையில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்று முடிந்தது. தி.மு.க கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது.

எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்
எடப்பாடி பழனிசாமி - சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்

தற்போது சில வாரங்களாக, சசிகலா அ.தி.மு.க தொண்டர்களுடன் தொலைபேசியில் உரையாடும் ஆடியோக்கள் வெளியாகி, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன. அ.தி.மு.க தொண்டர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தொலைபேசியில் உரையாடிவந்த சசிகலா, தற்போது முன்னாள் அமைச்சராக இருந்த ஆனந்தனிடம் தொலைபேசியில் உரையாடிய ஆடியோ ஒன்று இன்று வெளியாகியுள்ளது. உளுந்தூர்பேட்டையை அடுத்த நத்தாமூரைச் சேர்ந்தவர் ஆனந்தன். 1984-ம் ஆண்டு, உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானார். 1991-லும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது, ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தார். 2009-ம் ஆண்டு விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி-யாக இருந்தவர், நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் வாய்ப்பை இவர் தலைமையிடம் எதிர்பார்த்து காத்திருந்ததாகவும். ஆனால், வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இவருடன், சசிகலா தற்போது உரையாடியுள்ள அந்த ஆடியோவில், ஆனந்தன் மற்றும் அவரது குடும்பத்தைப் பற்றி நலம் விசாரிக்கும் சசிகலா, "எதுக்கும் கவலைப்படாதீங்க ஆனந்தன். சீக்கிரம் ஒரு நல்லது நடக்கும். நிச்சயமாக வந்துடுவேன். நான் எல்லோரிடமும் பேச ஆரம்பித்துவிட்டேன். எவ்வளவோ லெட்டர் வருது. மனசு குமுறலாக எழுதுறாங்க. அதையெல்லாம் பார்க்கும்போது மனசுக்கு கஷ்டமா ஆகிடுச்சு எனக்கு. இந்தக் கட்சி, நம் கண்ணெதிரே இப்படி ஆகும்போது மிகவும் வருத்தமாக இருக்கு ஆனந்தன். அந்த மனக் கஷ்டம் தாங்க முடியலை. நீங்களெல்லாம் பழைய ஆட்கள். நீங்களெல்லாம் இப்படி இருப்பது எனக்கே மனசு கஷ்டமாக இருக்கு. தொண்டர்களுக்காக நிச்சயம் வருவேன். அம்மா எப்படிக் கட்சியை வைத்திருந்தாங்களோ... அதைப்போலவே கொண்டு வந்துடலாம். கொரோனா முடியட்டும், உங்களை விரைவில் நேரில் வந்து சந்திக்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

ஆனந்தன்
ஆனந்தன்

முன்னாள் அமைச்சர் ஆனந்தனிடம் பேசினோம்.

"நான்தான் அந்த உரையாடலில் பேசியது. 1984-ல் எம்.எல்.ஏ-வாக இருந்தேன்.1986-ல் மதுரையில் எனக்குத் திருமணம் நடைபெற்றபோது எம்.ஜி.ஆர் அவர்கள்தான் எனக்கு தாலி எடுத்துக் கொடுத்தார். 1984-ல் நாங்கள் 33 எம்.எல்.ஏ-க்கள் போகும்போது, சசிகலா அம்மாவும், அவர்களுடைய கணவரும் எனக்கு மிகவும் பழக்கம். ஆனால், சிறையிலிருந்து வந்த பிறகு இப்போதுதான் முதன்முதலில் பேசுகிறேன். தங்களைத் தலைவர்களாக நினைத்துக்கொள்பவர்கள் ஒரு பக்கம் இருக்காங்க. தொண்டர்கள் ஒரு பக்கம் இருக்காங்க. நான் தீவிர தொண்டன்தான். தலைவன் எனச் சொல்லமுடியாது. தொண்டர்கள் முழுவதும் இன்று இந்த அம்மாவுடன்தான் இருக்காங்க. நான் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சராக இருந்துள்ளேன். ஆனால், அவ்வளவாக வெளியில் தெரியாமல் இருக்கிறேன் என்றால் தொண்டனாகத்தானே இருக்க முடியும்... என்னுடைய அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். ஜெயலலிதா அம்மாவுடன் நல்லது, கெட்டது என உடனிருந்தவர்கள் சசிகலா அம்மாதான். அதனால், கட்சியை நடத்தும் திறமை இவங்ககிட்டதான் இருக்கிறது என நினைக்கிறேன் நான். இப்போது கட்சியில் யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பயப்படுவது கிடையாது. ஒரு தலைமையை முடிவெடுக்க முடியாமல் போட்டி போட்டுக்கொண்டு இருக்காங்க இன்று. அந்த வருத்தம் எனக்கு இருக்கு. இப்படியே போனால் வருங்காலத்தில் கட்சியை எப்படி இவர்கள் வழிநடத்துவார்கள்? கட்சி நல்லா இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எனவே, சசிகலா அம்மா வந்தாதான் கட்சியை கன்ட்ரோல் பண்ண முடியும் என்று அவர்களை அழைக்கிறேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism