Published:Updated:

`ஓட்டுபோட்டா செருப்பா இருப்பேன்; இல்லாட்டி...!' - சர்ச்சையான அ.தி.மு.க எம்.எல்.ஏவின் பேச்சு

``எங்களுக்கு வாக்களித்தால் உங்கள் கால்களுக்குச் செருப்பாக இருப்பேன். இல்லையென்றால் உங்கள் பகுதிக்கு எதுவும் செய்யமாட்டேன்''

ராஜவர்மன்
ராஜவர்மன்

அ.தி.மு.கவுக்கு வாக்களிக்காதவர்களுக்கு எந்த நலத்திட்டங்களையும் செய்யமாட்டோம் என சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் பேசியிருக்கிறார்.

ராஜவர்மன்
ராஜவர்மன்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ராஜபாளையம் ஒன்றியப் பகுதிகளில், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் பிரசாரம் செய்தார்.

`சத்துணவு வேலைக்குப் போய்விடுங்கள்!' - அதிகாரிகளைத் திட்டி சர்ச்சையில் சிக்கிய ராஜேந்திர பாலாஜி

அ.தி.மு.கவுக்கு வாக்களிக்க வேண்டி அ.தி.மு.க செய்த சாதனைகளை வலியுறுத்தி மக்களிடம் தேர்தல் பிரசாரத்தில் அவர் ஈடுபட்டார். நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் இப்பகுதிகளில் தனக்குக் குறைவாக வாக்குகள் கிடைத்ததால், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு அதிக வாக்கு கிடைக்க வேண்டும் என்ற இலக்கில் தீவிரப் பிரசாரம் செய்து வருகிறார்.

ராஜவர்மன்
ராஜவர்மன்

அவர் வாக்கு கேட்டு வந்தபோது சில கிராம மக்கள், தங்கள் ஊருக்குக் கழிப்பறை வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி போன்றவற்றை செய்துதரக் கோரிக்கை வைத்தனர்.

அவர்கள் மத்தியில் வாகனத்தில் நின்றபடியே பேசிய அவர், ``நான் இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது சில கிராம மக்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். அனால், ஒரு சில கிராம மக்கள் வாக்களிக்காமல், இப்போது எங்களிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்பது எப்படி? எங்களுக்கு வாக்களித்தால் உங்கள் கால்களுக்குச் செருப்பாக இருப்பேன் இல்லையென்றால் உங்கள் பகுதிக்கு எதுவும் செய்யமாட்டேன். உண்மை அதுதான். நேர்மையா முழுமையா எங்களுக்கு வாக்களித்தால் அதிகாரிகள் காலில் விழுந்தவாது உங்க கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் '' என மக்களிடம் பேசினார்.

ராஜவர்மன்
ராஜவர்மன்

மேலும், ``நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அப்பொழுதுதான் நாங்கள் எல்லோரும் சேர்ந்து உங்களுடைய குறைகளைத் தீர்த்து வைக்க முடியும்'' என்று பேசி பிரசாரம் செய்தார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டைலில் அவர் பேசியுள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.