Published:Updated:

`பெண்களுக்கு 33% - உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்வதா?’ - நாகாலாந்து அரசிடம் உச்ச நீதிமன்றம் காட்டம்

உச்சநீதிமன்றம்

நாகாலாந்து உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற அம்மாநில அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

Published:Updated:

`பெண்களுக்கு 33% - உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்வதா?’ - நாகாலாந்து அரசிடம் உச்ச நீதிமன்றம் காட்டம்

நாகாலாந்து உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்ற அம்மாநில அரசின் கோரிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

உச்சநீதிமன்றம்

நாகாலாந்தில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் மே மாதம் 16-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. நாகாலாந்து உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்ததால் அம்மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இதையடுத்து பல்வேறு அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தை அணுகின.

நாகாலாந்து தேர்தல்
நாகாலாந்து தேர்தல்

வரும் மார்ச் 14-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தேதிகளை அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டுடன் வரும் மே 16-ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஆனால், `பெண்களுக்கான இடஒதுக்கீடு நாகா மரபுச் சட்டங்களுக்கு எதிரானது. பாரம்பர்ய நாகா கலாசாரத்தில் பெண்களின் அரசியல் கலாசாரம் இருந்ததில்லை’ என்று அம்மக்கள் சமீபத்தில் முதல்வர் நெப்பியு ரியோவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

இதனையடுத்து அங்கு பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு எதிரான பழங்குடியின குழுக்களின் எதிர்ப்பை தொடர்ந்து இந்தத் தேர்தலை ரத்து செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக்கொண்டது நாகாலாந்து அரசு.

நாகாலாந்து தேர்தல்
நாகாலாந்து தேர்தல்

இந்நிலையில், நேற்று நடந்த இந்த வழக்கின் விசாரணையின் போது கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கவுல், தேர்தல்களை ரத்து செய்வது நீதிமன்ற அவமதிப்புக்கு சமம் என்று வாய்மொழி கண்டிப்பில் கூறினார். மேலும் தேர்தலை ரத்து செய்யுமாறு அம்மாநில அரசு பிறபித்த உத்தரவுக்கும் உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.