Published:Updated:

`பான் கார்டுகூட இல்லை; ஆனால் ரூ.220 கோடி நிலங்கள் குவிப்பு?!'- ஆந்திராவை கலங்கடிக்கும் புதிய சர்ச்சை

அமராவதி திட்டம்

சிஐடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதை வைத்து வருமான வரித் துறை மற்றும் அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடி ஏடிஜிபி பி.வி.சுனில் குமார் அந்தத் துறைகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

`பான் கார்டுகூட இல்லை; ஆனால் ரூ.220 கோடி நிலங்கள் குவிப்பு?!'- ஆந்திராவை கலங்கடிக்கும் புதிய சர்ச்சை

சிஐடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதை வைத்து வருமான வரித் துறை மற்றும் அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடி ஏடிஜிபி பி.வி.சுனில் குமார் அந்தத் துறைகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Published:Updated:
அமராவதி திட்டம்

2014-ம் ஆண்டு ஆந்திர மாநிலத்திலிருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டு, புதிய மாநிலமாக உருவாக்கப்பட்டது. இதில் ஆந்திராவின் தலைநகரமான ஹைதராபாத், தெலங்கானா பகுதியுடன் இணைக்கப்பட்டதால், ஆந்திர மாநிலத்துக்குப் புதிய தலைநகரை அறிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மக்களிடமும் கட்சிகளிடமும் கருத்துகளைக் கேட்ட பின்னர், அமராவதியை ஆந்திரத்தின் தலைநகரமாக அப்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்தார். தலைநகரத்தை முன்னேற்ற `கனவு அமராவதி' திட்டத்தைத் தெலுங்கு தேசம் கட்சி கையிலெடுத்தது. 28,000 விவசாயிகளிடமிருந்து 33,000 ஏக்கர் நிலத்தைப் பெற்று மாநிலத் தலைநகரை உருவாக்கி, அதன் வளர்ச்சியிலிருந்து வரும் பணத்தை ஆண்டுதோறும் பகிர்ந்தளிக்கப்படும் என்று கூறி நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

ஐ.டி நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், பன்னாட்டு நிறுவனங்கள் அமைக்க சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது. அங்கு கட்டமைப்புகளை மேம்படுவதற்காக 1.5 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், சமீபத்தில் ஆந்திராவுக்கு மூன்று தலைநகர் வரவுள்ளதாக அறிவித்தார் புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி. ``விசாகப்பட்டினம் நிர்வாகத் தலைநகரமாகவும் அமராவதி சட்டமன்றத் தலைநகராகவும் கர்னூல் சட்ட (நீதிமன்றம்) தலைநகரமாகவும் செயல்படும். அனைத்து மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படவுள்ளதாகவும், அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக்குழு அனைத்தையும் ஆராய்ந்து இறுதி முடிவை எடுக்கும்” என்று முன்னதாகக் கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அனைத்து மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் வகையில் மூன்று தலைநகரங்கள் உருவாக்கப்படவுள்ளதாகவும், அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக்குழு அனைத்தையும் ஆராய்ந்து இறுதி முடிவை எடுக்கும்” என்று முன்னதாகக் கூறியிருந்தார்.

ஆந்திர முதல்வரின் இந்த அறிவிப்புக்குத் தெலுங்கு தேசம், சி.பி.ஐ, அமராவதி விவசாயிகள் மற்றும் மாநில மக்கள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அமராவதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த அறிவிப்பால் ஒட்டுமொத்த ஆந்திர தேசமும் ரணகளமாக காட்சியளிக்கிறது. இதற்கிடையே, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும்விதமாக இன்னொரு சம்பவம் இந்த தலைநகர் விஷயத்தில் புகைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

அமராவதியை அடுத்த துள்ளூர் மண்டலத்தைச் சேர்ந்த பட்டியலின பெண் 2019 நவம்பரில் ஒரு புகார் அளித்தார். அதில், ``தங்களது கிராமத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் பெல்லம்கொண்ட நரசிம்மராவ், தங்கள் நிலத்தை பலவந்தமாக ஆக்கிரமித்துள்ளதாகவும், முன்னாள் தெலுங்கு தேசம் அமைச்சர்கள் பிரதிபதி புல்லா ராவ் மற்றும் பி நாராயணா ஆகியோரின் ஆதரவோடு பொய்யான நில பதிவுகளை உருவாக்கி மோசடி செய்தனர்" என்று புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் சிஐடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சிஐடி விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அதை வைத்து வருமான வரித் துறை மற்றும் அமலாக்க இயக்குநரகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடி டிஜிபி பி.வி.சுனில் குமார் அந்த துறைகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அமராவதியை தலைநகராக மேம்படுத்த கையப்படுத்தப்பட்ட நிலங்களில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமராவதி தலைநகரத்துக்காக நிலம் வழங்கி விவசாயிகள் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தினோம். எங்கள் விசாரணையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் மாதம் 5,000 ரூபாய்க்கும் குறைவான வருமானம் கொண்ட நபர்கள் 797 பேர் 220 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் வாங்கியதற்கான பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அமராவதி திட்டம்
அமராவதி திட்டம்

நிலம் வாங்கிய பல பேர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள். இந்த 797 பேரில், 529 பேருக்கு பான் கார்டுகூட இல்லை. சிலர் வரி செலுத்தவில்லை. ஆனால், கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை வாங்கியுள்ளனர். இந்த ஒழுங்கற்ற பரிவர்த்தனைகள் தலைநகர் அமராவதி, பெடககனி, ததிகொண்டா, துள்ளூர், மங்களகிரி மற்றும் ததேபள்ளி ஆகிய மண்டலங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட பெல்லம்கொண்ட நரசிம்ம ராவ் இரு அமைச்சர்கள் சார்பில் நிலத்தைக் கொடுக்கவில்லை என்றால் அதை அரசு எடுத்துக்கொள்ளும். பின்பு எந்த இழப்பீடும் கிடைக்காது என்று மிரட்டி வாங்கியுள்ளார். மேலும், ஒரு ஏக்கரை 24 லட்சத்துக்கு அவர்களிடமிருந்து வாங்கி பின்னர் அதை மற்ற நபர்களுக்கு கோடி கணக்கில் விற்றுள்ளனர்.

இந்த மாதிரி வாங்கிய நிலங்களில் பெரும்பான்மையானவை பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு, குறிப்பாக எஸ்சி மற்றும் எஸ்டி சமூக மக்களின் வாழ்வாதாரத்துக்காக ஒதுக்கப்பட்ட நிலமாகும். அத்தகைய நிலம் மூன்றாம் தரப்பினருக்கு விற்கவோ அல்லது பரிசளிக்கவோ தடைசெய்யப்பட்டுள்ளது. அமராவதிக்கு நிலம் சேகரித்தல் ஆந்திர மாநில தலைநகர் பிராந்திய மேம்பாட்டு ஆணையம் (ஏபிசிஆர்டிஏ) சட்டம் என்ற தனி சட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தலைநகர் பிராந்தியத்தில் நிலம் வைத்திருப்பவர்கள் அதை மாநில அரசிடம் கொடுக்க முன்வருவார்கள்.

அந்த வகையில் சுமார் 33,000 ஏக்கர் நிலம் வாங்கி குவிக்கப்பட்டது. நிலம் கையகப்படுத்தும்போது எஸ்சி மற்றும் எஸ்டி சமூக மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை அரசு கையகப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அதற்குப் பதிலாக அவர்களுக்கு வளர்ச்சியடைந்த இடங்களில் நிலங்கள் ஒதுக்கப்படும் என்று 2015ல் தெலுங்கு தேச அரசு சட்டம் கொண்டுவந்தது.

டிஜிபி பி.வி.சுனில் குமார்
டிஜிபி பி.வி.சுனில் குமார்

பரிவர்த்தனைகளுக்கு செலவிடப்பட்ட ரூபாய்கள் குறித்து சிஐடி சரிபார்த்துள்ளது என்றும், சம்பந்தப்பட்டவர்கள் ஒருபோதும் ஐ-டி வருமானத்தை தாக்கல் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது என்றும் டிஜிபி சுனில் குமார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள டிஜிபி சுனில் குமார், ``இதையடுத்து பினாமி பெயரில் நிலம் வாங்கியதாகவும், அரசாங்கத்தை ஏமாற்றிய பிரிவின்கீழும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட தெலுங்குதேசம் கட்சியின் நிர்வாகிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பினாமி பரிவர்த்தனைகளாகவும் இருக்கலாம் என்பதால் ஐ.டி மற்றும் அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம். அவர்கள் யாருடைய சார்பாக நிலத்தை வாங்கினார்கள் என்பதை நாங்கள் சரிபார்த்து வருகிறோம். பணமோசடி, பினாமி சொத்து அல்லது வரி ஏய்ப்பு வழக்கு என்றால் அமலாக்கத்துறை இந்த வழக்கை எடுத்துக்கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism