Published:Updated:

குடியரசு தின விழாவில் பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து? - உளவுத்துறை அலர்ட் எனத் தகவல்!

பிரதமர் மோடி

குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கிடைத்த உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, டெல்லியில் பாதுகாப்பு பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டெல்லியில் ஜனவரி 26-ம் தேதி 75-வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் பிரமாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். சிறப்பு விருந்தினர்களாக கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

மோடி
மோடி

சுதந்திர தின விழா வருவதையொட்டி அணிவகுப்பு ஒத்திகைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுதொடர்பாக மத்திய உளவுத்துறை 9 பக்க அறிக்கையை வெளியிட்டிருப்பதாக செய்தி நிறுவனங்களில் செய்திகள் வெளியான வண்ணமாக இருந்து வருகின்றன. அந்த அறிக்கையில், பிரதமர் மோடி மற்றும் குடியரசு தின விழாவில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பஞ்சாப்பை மையமாகக் கொண்ட இந்த தீவிரவாத குழுக்கள் பஞ்சாப்பில் தீவிரவாதத்தை ஏற்படுத்துவதற்காகவும், பிற மாநிலங்களை குறிவைத்து தாக்குதலில் ஈடுபடவும் திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism