Published:Updated:

ஆய்வு செய்யவந்த முதல்வர்; பத்திரிகையாளரைத் தாக்கிய பாதுகாவலர் - சில மணி நேரத்தில் சஸ்பெண்ட்!

முதல்வர் ஸ்டாலின்

தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தபோது, அதைப் படம்பிடிக்க முயன்ற பத்திரிகையாளரை முதல்வரின் பாதுகாவலர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆய்வு செய்யவந்த முதல்வர்; பத்திரிகையாளரைத் தாக்கிய பாதுகாவலர் - சில மணி நேரத்தில் சஸ்பெண்ட்!

தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தபோது, அதைப் படம்பிடிக்க முயன்ற பத்திரிகையாளரை முதல்வரின் பாதுகாவலர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
முதல்வர் ஸ்டாலின்

தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளைப் பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு (30.05.2022) நாகை மாவட்டம், வேளாங்கண்ணிக்கு வருகை தந்தார். அப்போது வேளாங்கண்ணி ஆர்ச் அருகே அவருக்கு தி.மு.க மாவட்டப் பொறுப்பாளர் கௌதமன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு தனியார் ஹோட்டலில் தங்கிய அவர் இன்று காலை 9 மணிக்குப் புறப்பட்டார். நாகை மாவட்டத்திலுள்ள கருவேலங்கடை கிராமத்தில் கல்லாறு வாய்க்காலில் தூர்வாரிய இடத்தைப் பார்வையிட்டார். அங்கு கூடிய மக்கள் கொடுத்த மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

முதல்வர்
முதல்வர்
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதன் பிறகு மயிலாடுதுறை மாவட்டம், அனந்தமங்கலத்தில் டிரோன் மூலம் நேரடி நெல் விதைப்பு நடைபெறுவதை முதல்வர் தொடங்கிவைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்காகப் பலமுறை ஒத்திகையும் நடந்தது. ஆனால் நேரமின்மையால் டிரோன் மூலம் நெல் விதைப்பு நடைபெறவில்லை. அதைச் சில நிமிடங்கள் பார்வையிட்டுவிட்டு திருக்கடையூர் வந்தவர், தமிழ்நாடு ஹோட்டலில் டீ அருந்தினார்.

தொலைக்காட்சி நிருபரைத் தாக்கிய முதல்வரின் பாதுகாப்பு காவலர்
தொலைக்காட்சி நிருபரைத் தாக்கிய முதல்வரின் பாதுகாப்பு காவலர்

அதைத் தொடர்ந்து, முதல்வர் திருக்கடையூர் ராமச்சந்திரன் வாய்க்காலில் தூர்வாரிய இடங்களைப் பார்வையிட வந்தார்.

அங்கு தொலைக்காட்சி, பத்திரிகைச் செய்தியாளர்கள் புகைப்படம் எடுப்பதற்குத் தடைசெய்யும் விதத்தில் நைலான் கயிறு கொண்டு காவல்துறையினரால் தடுக்கப்பட்டனர். ஓரிரு பத்திரிகைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

அதையும் மீறி புகைப்படம் எடுக்க முயன்ற உள்ளூர் பத்திரிகையாளர்களைக் காவல்துறையினர் தடுத்தனர். அப்போது பத்திரிகையாளர்கள் முதல்வரின் பாதுகாவலர்களிடம், ``தி.மு.க-வினர் உள்ளே செல்லும்போது எங்களுக்கு இடம் இல்லையா" என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைப் படமெடுத்த தொலைக்காட்சி நிருபர் ஹரீஸ் என்பவரை முதல்வரின் பாதுகாப்புப் படை காவலர் தாக்கி கீழே தள்ளினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொலைக்காட்சி நிருபரைத் தாக்கிய முதல்வரின் பாதுகாப்பு காவலரை சில மணி நேரங்களில் காவல்துறை மேலிடம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை மேற்கொண்டது.

இறுதியாக நல்லாடை கிராமத்தில் இயந்திரம் மூலம் நடவு செய்வதைப் பார்வையிட வந்த முதல்வரிடம், பரணி நட்சத்திரத்துக்குரிய கோயிலாகக் கருதப்படும் நல்லாடை ஸ்ரீ அக்னீஸ்வரர் ஆலயத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களுக்கு மாத ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை என மனு கொடுத்தனர்.

முதல்வர்
முதல்வர்

அதைத் தொடர்ந்து, இயந்திரம் மூலம் நடவு செய்யும் காட்சிகளைப் பார்வையிட்டு, உச்சி வெயிலில் பொதுமக்களைக் கும்பிட்டபடி முதல்வர் நடந்து வந்தபோது, தி.மு.க-வைச் சேர்ந்த பெரம்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜீவாராயேந்திரன் என்பவர் முதல்வரின் கையைப் பிடித்துக்கொண்டு, ``நீங்க உயிரோட இருக்கிறவரைக்கும் நீங்கதான் முதல்வராக இருக்கணும் தலைவரே..." என்று கூறி ஆனந்தக் கண்ணீர் வடித்தார்.

அவரை தட்டிக் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார் முதல்வர் ஸ்டாலின்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism