Published:Updated:

``இது நாகலாந்து அல்ல... ஆரியத்தை வீரியமாய் எதிர்த்திட்ட தமிழ்நாடு!" - ஆளுநருக்கு சீமான் கண்டனம்

சீமான்- ஆர்.என்.ரவி

மக்கள் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக இருப்பதாகவும், ஆபத்தான இயக்கமென்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.

``இது நாகலாந்து அல்ல... ஆரியத்தை வீரியமாய் எதிர்த்திட்ட தமிழ்நாடு!" - ஆளுநருக்கு சீமான் கண்டனம்

மக்கள் இயக்கமான பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவை தீவிரவாத இயக்கங்களுக்கு பின்புலமாக இருப்பதாகவும், ஆபத்தான இயக்கமென்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என சீமான் தெரிவித்துள்ளார்.

Published:Updated:
சீமான்- ஆர்.என்.ரவி

சென்னை, நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றப் புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக ஆளுநர் ரவி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இயக்கம் குறித்து தெரிவித்தக் கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ``கொரோனா நோய்த்தொற்று போன்ற பேரிடர் காலங்களின்போதும் மதத்திற்கு அப்பாற்பட்டு மனிதம் காக்க, மக்கள் சேவையாற்றி, உன்னதப்பணிகளைச் செய்து வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது ஆளுநர் ஆர்.என்.ரவி உமிழ்ந்திருக்கும் கருத்துகள் மிகுந்த உள்நோக்கம் கொண்டதாகும். நோய் தொற்று காலத்திலும், `கொரோனா ஜிகாத்’ என இஸ்லாமிய மக்கள் மீது பழி போட்டு, மத ஒதுக்கலை செய்ய முற்பட்டு நாட்டை துண்டாட முயலும் ஆர்.எஸ்.எஸ் , பா.ஜ.க-வை வெளிப்படையாக ஆதரித்து வருகின்றனர்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

எந்தவித அடிப்படையும் இன்றி அபத்தமான ஒரு வாதத்தை முன்வைத்து, தமிழகத்தில் மத ரீதியிலான பிளவை ஏற்படுத்த முயலும் ஆளுநரின் நோக்கங்கள் மிகவும் ஆபத்தானவை. துளியும் பொறுப்புணர்ச்சி இல்லாமல், ஆளுநர்... ஆர்.எஸ்.எஸ்-ஸின் பரப்புரையாளரா? என கேட்கும் அளவிற்கு கருத்துகளையும் செயல்பாடுகளையும் வெளிப்படையாக முன்வைத்து வரும் ஆளுநரின் போக்குகள் மிகவும் வெட்கக்கேடானது. மதப்பூசலை தமிழ்நாட்டிற்குள் ஏற்படுத்த முயலும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, இது நாகலாந்து அல்ல; ஆரியத்தை வீரியமாய் எதிர்த்துப் போர் செய்து வென்றிட்ட வீரம் செறிந்த தமிழ்நாடு என்பதை நினைவூட்டுகிறோம்" என சீமான் தன் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism