Published:Updated:

``50 ஆண்டுகளில் கொண்டுவர முடியாத மாற்றத்தை, 5 மாதங்களில் ஏற்படுத்திவிடுவாரா?"- ராகுலைச் சாடிய சீமான்

சீமான்

``திராவிட மாடல் புத்தகம் வந்தால் வாங்கிப் படிக்க ஆர்வமாக உள்ளேன்” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.

``50 ஆண்டுகளில் கொண்டுவர முடியாத மாற்றத்தை, 5 மாதங்களில் ஏற்படுத்திவிடுவாரா?"- ராகுலைச் சாடிய சீமான்

``திராவிட மாடல் புத்தகம் வந்தால் வாங்கிப் படிக்க ஆர்வமாக உள்ளேன்” என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
சீமான்

சமூக நீதிப்போராளி இம்மானுவேல் சேகரனாரின் 65-ம் ஆண்டு நினைவுநாளையொட்டி, நடைபெற்ற நிகழ்வில் நாம் தமிழர் கட்சி சார்பாக மலர்வணக்கம் செலுத்தபட்டது. மரியாதை செலுத்திய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``திராவிட மாடல் புத்தகம் வந்தால் வாங்கிப் படிக்க ஆர்வமாக உள்ளேன். திராவிட மாடல் என்பது ஒரு வேடிக்கை. திராவிடம் என பேசுவதற்கு காரணமே நாங்கள்தான், பிரபாகரனின் பிள்ளைகளாகிய நாங்கள் வந்தபிறகே திராவிடத்தை அதிகமாக பேசுகின்றனர்.

சீமான்
சீமான்

ராகுல் காந்தி அரசியல் செய்கிறாரா? அது பற்றி எனக்கு தெரியவில்லை. காங்கிரஸ் வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறதா...? ராகுல் காந்தியால் சொந்த தொகுதியிலேயே நின்று வெல்ல முடியவில்லை. எதிர்க்கட்சியாக காங்கிரஸ் இயங்கவில்லை.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இங்கே திராவிடக் கட்சிகளின் தோல்களில் ஏறிக்கொண்டு அவர்களின், தயவில் ஓட்டுக்கு காசு கொடுத்து வெற்றிபெற்று வருகிறார்கள். வேறு இடத்தில் அவர்கள் எங்கே எதிர்க்கட்சியாக இருக்கிறார்கள். 50 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டு கொண்டு வரமுடியாத மாற்றத்தை, 5 மாதங்களில் ராகுல் காந்தி நடைபயணம் செய்து மாற்றிவிடுவாரா?” என விமர்சித்தார்.