Published:Updated:

``இலவசத்தை எதிர்க்கிற பாஜக, எதுக்கு வேளாண் மக்களுக்கு ரூ.6,000 கொடுக்குறீங்க?" - சீமான் கேள்வி

சீமான்

``இலவசம் கொடுக்குறதை எதிர்க்கிற பா.ஜ.க., எதுக்கு வேளாண் குடிமக்களுக்கு 6 ஆயிரம் ரூபாயைக் கொடுக்குறீங்க?” - சீமான்

``இலவசத்தை எதிர்க்கிற பாஜக, எதுக்கு வேளாண் மக்களுக்கு ரூ.6,000 கொடுக்குறீங்க?" - சீமான் கேள்வி

``இலவசம் கொடுக்குறதை எதிர்க்கிற பா.ஜ.க., எதுக்கு வேளாண் குடிமக்களுக்கு 6 ஆயிரம் ரூபாயைக் கொடுக்குறீங்க?” - சீமான்

Published:Updated:
சீமான்

திருச்சி விமான நிலையத்தில் கடந்த 2018-ம் ஆண்டு ம.தி.மு.க பொதுச் செயலாளார் வைகோ, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ஆகியோரை வரவேற்பதில் இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் சோமு உள்ளிட்டவர்கள் தாக்கப்பட்டதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதனடிப்படையில், நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 14 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இது சம்பந்தமான வழக்கு விசாரணை, திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 6-ல் நடைபெற்றுவந்தது. அந்த வழக்கு விசாரணை சம்பந்தமாக திருச்சி நீதிமன்றத்தில் சீமான் நேரில் ஆஜரானார். இந்நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார், சீமான் உள்ளிட்ட 14 பேரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்வதாக உத்தரவிட்டார்.

சீமான்
சீமான்

அதையடுத்து நீதிமன்றத்தின் வெளியே செய்தியாளர்களைச் சந்திந்துப் பேசிய சீமான், ``இலவசங்களால் ஒரு தேசம் வளரவே வளராது. வாக்கைப் பெறுவதற்காக செய்யப்படும் வெற்று கவர்ச்சித் திட்டம்தான் இதெல்லாம். கல்வி என்பது ஒரு மானுட உரிமை. அதையே கடன் வாங்கிப் படிக்கவேண்டிய ஒரு நிலைமை வேற நாட்டிலும் கிடையாது. விவசாயக் கடன்களை பலமுறை தள்ளுபடி செய்தும், வேளாண் குடிமக்கள் தொடர்ந்து கடனாளியாக இருக்க என்ன காரணம்... ஏழ்மை இல்லாத அளவுக்கு மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்குப் பெயர்தான் வளர்ச்சி.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இலவசத்தை எதிர்க்கிற பா.ஜ.க., எதுக்கு வேளாண் குடிமக்களுக்கு 6 ஆயிரம் ரூபாயைக் கொடுக்குறீங்க... தனியார் கல்வி நிறுவனங்களின் முதலாளிகளாக தி.மு.க-வைச் சேர்ந்தவர்களே இருக்கிறார்கள். அதனாலேயே அரசுப் பள்ளிகளுக்கு கட்டடம் போன்ற போதுமான வசதிகள்கூட செய்து கொடுக்கப்படுவதில்லை. தமிழக அரசின் எல்லாத் துறைகளிலும் சிக்கல்கள் இருக்கின்றன. குறிப்பாக, பள்ளிக்கல்வித்துறையில் ஓர் இளைஞருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கு. துறையை நிர்வகிப்பதில் அவருக்குச் சில தடுமாற்றங்கள் இருக்கலாம். அவரின் செயல்பாடுகளைப் பொறுத்திருந்து பார்ப்போம்” என்றார்.

சீமான்
சீமான்

தொடர்ந்து பேசியவர், “ ரெட் ஜெயன்ட் மூவிஸ் பற்றி நான் விசாரித்தவரையில், உரிய தொகையைக் கொடுத்து படத்தை வாங்குவதையும், அதற்கு முறையான கணக்குகளைக் காட்டுவதாகவும் சொல்கிறார்கள். அப்படியிருக்க அதில் நாம் கருத்து சொல்வதற்கில்லை. சில படங்களை தம்பி உதயநிதி வாங்கி வெளியிடுவதாலேயே, அவை திரைக்கு வருகின்றன. அண்ணன் கமல்ஹாசன் நடித்த `விக்ரம்’ படம் இவ்வளவு பெரிய வெற்றி மற்றும் லாபம் அடைந்ததற்கு உதயநிதியும், ரெட் ஜெயன்ட் மூவீஸும் ஒரு காரணம். அதை மறுக்க முடியாது. அப்படியிருக்க, அதில் நாம் எதுவும் குறை சொல்ல முடியாது. புகழ்பெற்ற ஒரு நடிகர், சமூகத்தை நேசிக்கக்கூடிய தலைவரான சரத்குமார் ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடித்தது தவறு. ஆன்லைன் ரம்மி தடை செய்வது குறித்து அரசு மக்கள்கிட்ட கருத்து கேக்குறதை விடுங்க. டாஸ்மாக் விவகாரம், எட்டுவழிச் சாலை என அனைத்திலும் முதல்வரின் கருத்து என்னன்னு முதல்ல சொல்லுங்க. நீங்க ஒரு முடிவை எடுங்க. நீங்கள் மக்களின் கருத்துக்கான அரசா அல்லது மக்கள்நலனுக்கான அரசா என்பதுதான் முக்கியம்” என்றார்.