Published:Updated:

`திருப்பூரில் அடிச்சவங்க, திரும்பும் பக்கமெல்லாம் அடிப்பாங்க... அப்போ என்னை தேடுவீங்க” - சீமான்

சீமான்

``இரண்டு கோடி வட இந்தியர்கள் வந்துவிட்டார்கள், வாக்கு உரிமை பெற்று விட்டார்கள், இந்த நிலத்தின் அரசியலையும் அதிகாரத்தையும் அவர்கள் தீர்மானிக்கப் போகிறார்கள்.” - மதுரையில் சீமான் பேச்சு

Published:Updated:

`திருப்பூரில் அடிச்சவங்க, திரும்பும் பக்கமெல்லாம் அடிப்பாங்க... அப்போ என்னை தேடுவீங்க” - சீமான்

``இரண்டு கோடி வட இந்தியர்கள் வந்துவிட்டார்கள், வாக்கு உரிமை பெற்று விட்டார்கள், இந்த நிலத்தின் அரசியலையும் அதிகாரத்தையும் அவர்கள் தீர்மானிக்கப் போகிறார்கள்.” - மதுரையில் சீமான் பேச்சு

சீமான்

புலவர் மு.தமிழ்கூத்தன் அவர்களின் 10-ம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் மதுரை அவனியாபுரத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவருக்கும் தமிழ்கூத்தனுக்கும் இடையேயான உறவைப் பற்றிப் பேசினார்.

மேலும், தமிழ் மன்னர்களின் வீரத்தைப் பற்றியும் அவர்களுடைய வரலாற்றைப் பற்றியும் தொடர்ந்து பேசிய சீமான், `எங்கள் பாட்டியின் வீரம் என்ன தெரியுமா?’ என்று வேலு நாச்சியாரின் வீரத்தைப் பற்றியும் அவர்களுடைய வரலாற்றைப் பற்றியும் பேசினார்.

தொடர்ந்து பேசியவர், ``நம் முன்னோர்கள் அனைவரும் வீரமானவர்கள். அவர்கள் வழியில் வந்த நாம் ஐநூறு ரூபாய்க்கு ஓட்டை விற்கிறோம். பொங்கலுக்கு ஒரு கிலோ அரிசிக்குக் கையேந்தி நிற்கிறோம்.

`திருப்பூரில் அடிச்சவங்க, திரும்பும் பக்கமெல்லாம் அடிப்பாங்க... அப்போ என்னை தேடுவீங்க” - சீமான்

வந்தவர்கள் போனவர்கள் என எங்குப் பார்த்தாலும் எல்லோருக்கும் சிலைகள். ஒருநாள் இந்த சிலைகளை எல்லாம் எடுத்து கடலில் போட போகிறேன். அந்தநாள் வரும். அப்போ வேற போராட்டம் நடக்கும், `இங்க சிலை இருந்தது. அத காணோம்னு”... ஆமா காணோம்.. ஏன் காணோம்.. ஏன்னா, அதுனால காணோம்” என நகைச்சுவையாகப் பேசினார்.

சீமான்
சீமான்

மேலும், ``ஸ்டாலின் வரணும், உதயநிதி வரணும் , இன்பநிதி வரணுமாம்... இப்படியெல்லாம் பேசுறவங்க, பூச்சி மருந்தின் விலை கம்மியா தான் விக்கிது அத வாங்கி குடிச்சுட்டு செத்துப்போ போ...” என ஆவேசமாகப் பேசத் தொடங்கினார்.

அம்பானிக்கும், 100 நாள் வேலைக்குச் செல்பவனுக்கும் ஒரே வரி..

``ஒரு அரசு ஒருவனை நீ தாழ்ந்தவன் எனக் கூறிவிட்டு எப்படி அவனிடமிருந்து வரியை மட்டும் வசூலிக்கலாம்? சிறுபான்மை மக்கள் என்றால் அவர்களுக்கு வரி கம்மியாவா போடுறீங்க? அம்பானி , அதானி மனைவிகள் கட்டும் அதே ஜிஎஸ்டி வரியைத் தான் நூறுநாள் வேலைக்குப் போகும் என் மக்களும் கட்டவேண்டும் என்றால் இதில் எங்கு சட்ட திட்டம் சரியாக உள்ளது?

இரண்டு கோடி வட இந்தியர்கள்..!

இரண்டு கோடி வட இந்தியர்கள் வந்துவிட்டார்கள். வாக்கு உரிமை பெற்று விட்டார்கள். இந்த நிலத்தின் அரசியலையும் அதிகாரத்தையும் அவர்கள் தீர்மானிக்கப் போகிறார்கள். 'இன்று திருப்பூரில் அடிச்சவன் நாளைக்கு திரும்புற பக்கம் எல்லாம் அடிப்பான், வட இந்தியன் உன்னை அடிச்சு இந்த நிலத்தை விட்டு விரட்டுவான்... நீ நிலமற்ற, உரிமையற்ற அகதியாக மாறி கூலியாக மாறுவாய்... இது நிச்சயமாக நடக்கும். அதற்கு முன்பு எழுந்து விடுங்கள், எச்சரிக்கையாக இருங்கள் ஃபீ கேர் ஃபுல்” என்று எச்சரித்தார்.

நீங்கள் எனக்கு வாக்களிக்கும் நாள் வரும்..!

மேலும் தொடர்ந்தவர், ``இந்த நிலை மாற வேண்டும் என்றால் `ஒரே ஒரு ஓட்டு... அதை எனக்கு போட்டு..’ நீங்க பேசாம உங்க வேலைய பாருங்க, ஒரே ஒரு ஓட்டு போடுங்க. நாட்ட நான் பாத்துக்கிறேன். ஒரு நாள் வரும் நீங்க எனக்கு ஓட்டு போடுவீங்க, வேற வழி இல்ல ராஜா... நீங்க எனக்கு ஓட்டு போடலைனா, வட இந்தியன் உங்களை போடுவான்.. அவன் உங்களை விரட்டி விரட்டி அடிப்பான் அப்போ எங்கடா சீமான்... எங்கடா சீமான் என்று நீங்கள் என்னை தேடுவீங்க... அப்போது ``எங்கள் உயிரே, எங்களின் யூரியாவே , எங்களின் உறவே, எங்களின் ஆன்மாவே ” என்று எனக்கு போஸ்டர் அடித்து எந்த பயனும் இல்லை ராஜா...

இதுவரை வாழ்ந்த வாழ்க்கையைப் போல இனிமேல் வாழ முடியாது என்கிற நிலை வருமேயானால் மக்கள் அவர்களாகவே புரட்சி செய்வார்கள். அந்த புரட்சியை நான் முன் நின்று கொண்டு செல்வேன். இளைஞர்களே வரலாற்றைப் பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்” என்றும் அவர் கூறினார்.