Published:Updated:

``என்னை ஒரே ஒரு நாள் முதல்வர் ஆக்குங்கள்..!" - கோவையில் சீமான் பேச்சு

சீமான்
News
சீமான்

``ஏழு தமிழர்களை விடுவிப்பதில் என்ன பிரச்னை... ஆளுநர் என்ன முடிவு எடுப்பார்? அர்ஜுன் படத்தில் வருவதைப்போல என்னை ஒரே ஒரு நாள் முதல்வர் ஆக்குங்கள்." - சீமான்

20 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையிலுள்ள இஸ்லாமிய சிறைவாசிகள் மற்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய மறுக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக-வினர்
திமுக-வினர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். சீமான் தலைமையில் போராட்டம் என்றதும், அவர் வருவதற்கு முன்பு அங்கு திமுக-வினர் குவிந்துவிட்டனர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``நாங்க சீமான் பேசறதை வேடிக்கை பார்க்க வந்துருக்கோம். ஏன் வரக் கூடாதா..? எங்க தளபதியைப் பத்திப் பேசினா சும்மா இருக்க மாட்டோம்” என்று போலீஸாருடன் திமுக உடன்பிறப்புகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சீமான் வருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு போலீஸார் அவர்களைக் கைதுசெய்தனர்.

திமுக-வினர் கைது
திமுக-வினர் கைது

ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு நாம் தமிழர் நிர்வாகிகள் ஒவ்வொருவராகப் பேசினர். ``சங்கி திமுக... பாஜக-வின் மெயின் டீம் திமுக” என்று விமர்சித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கடைசியாக பேசிய சீமான், ``சிறையில் இருப்பவர்களை விடுவிப்பது குறித்து அரசு குழு அமைத்துள்ளது. புழுகூட நகரும். ஆனால் அரசு அமைக்கும் குழுக்கள் எதுவும் செய்யாது. மொழி வழியேதான் தேசிய இனங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. சாதிவாரியாக, மதம்வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படவில்லை.

ஆர்ப்பாட்டத்தில் சீமான்
ஆர்ப்பாட்டத்தில் சீமான்

இஸ்லாமியர்களை தேசிய இனத்தின் ஒரு பகுதியாகப் பார்க்க வேண்டும். `மானமுள்ள தமிழன் திமுக-வுக்கு ஓட்டுப் போட மாட்டான்’ என பழனி பாபா கூறியுள்ளார். திமுக-வுக்கு வாக்களித்துவிட்டதால், மானம் இல்லை என்று அர்த்தம்.

ராஜீவ் காந்தி வழக்கில் கைதுசெய்யப்பட்ட எழுவர் மற்றும் இஸ்லாமியர்களை விடுவிக்காமல் இருப்பது சரியல்ல. இதைப் புரிந்துகொண்டு முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களை விடுதலை செய்ய வேண்டும். இதற்காகத் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். எங்களுக்கு வேறு வேலை இல்லை. போராடிக்கொண்டேதான் இருப்போம்.

சீமான்
சீமான்

சிறைக் கதவுகளைத் திறந்து அவர்களை விடுதலை செய்யுங்கள். இல்லையேல் எங்களை உள்ளே போடு்ங்கள். எங்களால் போராடத்தான் முடியும். விடுதலை செய்யும் அதிகாரம் இல்லை.

ஸ்டாலின் பயப்படுகிறார். விடுதலை செய்வீர்கள் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம். நாங்கள் ஓட்டுக்கானவர்கள் கிடையாது. உரிமைக்காகவும் உறவுக்காகவும் போராடுகிறோம். இதில் எனக்கு எந்தப் பிரதிபலனும் இல்லை. தமிழக முதல்வர் மதத்தைப் பார்க்காமல், மனிதத்தைப் பார்த்து சிறையில் வாடிக்கொண்டிருப்பவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

சீமான்
சீமான்

ஏழு தமிழர்களை விடுவிப்பதில் என்ன பிரச்னை... ஆளுநர் என்ன முடிவு எடுப்பார்? அர்ஜுன் படத்தில் வருவதைப்போல என்னை ஒரே ஒரு நாள் முதல்வர் ஆக்குங்கள். அப்படி ஆக்கினால், ஒரே நாளில் எல்லாவற்றையும் செய்துவிட்டு விலகிக்கொள்கிறேன்” என்று பேசினார்.

முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், ``பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 சிறைவாசிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளனர். அதில் ஒரு இஸ்லாமியர்கூட இல்லை என்பது வேதனை. அதிமுக ஆட்சியிலும் இதுதான் நடந்தது. திமுக-வை எதிர்த்து நாங்கள் போராடுவோம். எங்களை எதிர்த்து திமுக போராடும்.

சீமான்
சீமான்

அரசியலில் இதெல்லாம் சாதாரணம். திமுக எங்களை எதிர்ப்பது பெருமைதான். அந்த அளவுக்கு நாங்கள் வளர்ந்திருக்கிறோம்தானே... தரக்குறைவாகப் பேசுவதைப் பற்றி சொல்ல திமுக-வுக்குத் தகுதி இல்லை” என்று கூறினார்.