Published:Updated:

``திமுக, பாஜக-விடம் சரணடைந்துவிட்டது!" - புதுவையில் சீமான் ஆவேசம்

சீமான்

"கமல்ஹாசனுக்கு, காங்கிரஸ் குடும்பம் என்பதால் அதில் ஈர்ப்பு இருப்பது சகஜம்தான். டெல்லியில் போய் ராகுலுடன் கூட்டத்தில் பங்கேற்பதால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடும் எண்ணம் கமலுக்கு இருக்கலாம்" - சீமான்.

``திமுக, பாஜக-விடம் சரணடைந்துவிட்டது!" - புதுவையில் சீமான் ஆவேசம்

"கமல்ஹாசனுக்கு, காங்கிரஸ் குடும்பம் என்பதால் அதில் ஈர்ப்பு இருப்பது சகஜம்தான். டெல்லியில் போய் ராகுலுடன் கூட்டத்தில் பங்கேற்பதால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடும் எண்ணம் கமலுக்கு இருக்கலாம்" - சீமான்.

Published:Updated:
சீமான்

புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "மாநில அந்தஸ்து தொடர்பாக முதலில் பேசியது நாங்கள்தான். அதன்பிறகுதான் ரங்கசாமியே பேசினார். அதிகாரத்தில் இருந்தோர் செய்திருக்கவேண்டாம். மாஹே, ஏனாம் வேண்டாம். ஆனால் மிகப்பெரிய துறைகளை அங்கிருந்து வருவோர் எடுக்கின்றனர். அங்கு போய் நாம் போட்டியிடமுடியாது. புதுச்சேரிக்கு மாநில உரிமை தரக்கோரி தொடர்ச்சியாக போராடுவோம். தேசிய கட்சிகளுக்கு எதிராகப் பேசினால்தான் மாநில கட்சிகளுக்கு ஆயுள் இருக்கும். இந்தியா ஒரே நாடு என்று பேசுவதே மாநிலங்களுக்கு எதிரானது.

புதுச்சேரி
புதுச்சேரி

மாநில உரிமைகளையும் பறித்துக்கொண்டு, 'ஒரே நாடு' என்று தேசியக்கட்சிகள் பேசுவது விநோதமானது. தன்னாட்சி உரிமை இருந்தால்தான் இந்தியா என் நாடு என்ற எண்ணம் வரும். அதைவிட்டு, பறித்துக்கொண்டு இதை எதிர்பார்ப்பது தவறானது. கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் குடும்பம் என்பதால் அதில் ஈர்ப்பு இருப்பது சகஜம்தான். டெல்லியில் போய் ராகுலுடன் கூட்டத்தில் பங்கேற்பதால் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடும் எண்ணம் கமலுக்கு இருக்கலாம். நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். ரங்கசாமி கூட்டணி வைத்துள்ள பா.ஜ.க-விடம் போராடவேண்டியதில்லை, கேட்டு பெற்று சாதிக்கவேண்டும். இல்லையெனில் அழுத்தம் தந்து கூட்டணி ஒப்பந்தம் போட்டிருக்கவேண்டும்.

காமராஜர் சீடன் எனக்கூறி பா.ஜ.க-விடம் கூட்டணி வைத்த பிறகு என்ன ஆலோசனை சொல்ல முடியும். சரியென நினைப்பதை அவர் செய்யட்டும். மாநில அந்தஸ்துக்கு போராடும் ரங்கசாமிக்கு ஆதரவாக கருத்து சொன்னோர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. உளமாற போராடுகிறா என்ற கேள்வி எழுந்துள்ளது. பதவியை அனுபவித்துவிட்டார். மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணம் போய்விட்டது. ஆளுநரே தலையீடு. ஆளுநர் பதவியையே திரும்பப் பெறவேண்டும். மக்களால் தேர்வான அரசே சட்டத்தை நிறைவேற்ற முடியாது.

தமிழிசை - ரங்கசாமி
தமிழிசை - ரங்கசாமி

பா.ஜ.க இல்லாத மாநிலங்களில் உளவு பார்க்க ரவி, தமிழிசை நியமிக்கப்பட்டு மேலிடத்துக்கு தகவல் செல்வது அனைவருக்கும் தெரிந்ததுதான். காங்கிரஸ் கட்சியில் இருந்தோர் சரணடைந்ததால் எளிதாக கைப்பற்ற பா.ஜ.க நினைக்கிறது. புதுச்சேரியை பிடித்துவிட்டதால் எளிதாக தமிழகத்தில் கால்பதிக்க பா.ஜ.க நினைக்கிறது. இப்போது பா.ஜ.க-வுக்கு எதிரான நிலைப்பாட்டை அ.தி.மு.க எடுத்தாலும், தேர்தலின் போதுதான் உறுதியாகக் கூற இயலும். தி.மு.க., பா.ஜ.க-விடம் சரணடைந்து வேலை செய்கிறது.

ஸ்டாலின் - சீமான்
ஸ்டாலின் - சீமான்

பா.ஜ.க ஆளவேண்டியதற்கு அவசியமில்லாமலே அனைத்தையும் தி.மு.க செய்கிறது. பா.ஜ.க ஆளும் மாநிலங்களைவிட, அவர்களின் எண்ணங்களை தமிழக தி.மு.க அரசு செய்கிறது. பா.ஜ.க-காரர்களை விட, தி.மு.க விஸ்வாசமாகவுள்ளது. சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் தேவையில்லை. நம் வரலாறையும், மொழியையும் இழந்து வட நாட்டவர்களை திணிப்பார்கள் என்பதால் எதிர்க்கிறோம்" என்றார்.