Published:Updated:

முல்லைப்பெரியாறு: `அமைச்சர் துரைமுருகன் காமெடி செய்துகொண்டிருக்கிறார்!’ - செல்லூர் ராஜூ

``முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து, இதேபோல கர்நாடகா அரசும் செயல்பட்டால், தமிழகத்தின் மொத்த நீராதாரமும் பாதிக்கப்படும்” என்கிறார் செல்லூர் ராஜூ.

"முல்லைப்பெரியாறு அணையைப் பார்வையிடுவதற்கான தேவை அதிமுக ஆட்சிக்காலத்தில் ஏற்படவில்லை. கேரள அரசைக் கேள்வி கேட்க தைரியம் இல்லாமல், அமைச்சர் துரைமுருகன் தற்போது காமெடி செய்துகொண்டிருக்கிறார்" என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

முல்லைப பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசின் செயல்பாட்டைக் கண்டித்து அதிமுக சார்பில் வரும் 9-ம் தேதி நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டம் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய செல்லூர் ராஜூ, பின்பு செய்தியாளர்களிடம் பேசினார்.

"முல்லைப்பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க அனுமதி பெற்றுத் தந்த ஜெயலலிதாவின் ஆன்மா திமுக-வை மன்னிக்காது. தமிழர்களின் உரிமைகளைக் காக்கத் தவறிய திமுக அரசு கையாளாகாத அரசாக இருக்கிறது. கேரள அரசைக் கேள்வி கேட்க தைரியமில்லாத அமைச்சர் துரைமுருகன், தற்போது காமெடி செய்துகொண்டிருக்கிறார். காழ்ப்புணர்வுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களை வசைபாடியிருக்கிறார். நாலாந்தரப் பேச்சாளர்போலப் பேசுகிறார் துரைமுருகன்.

முல்லைப்பெரியாறு அணையைப் பார்வையிட்ட அமைச்சர் துரைமுருகன்
முல்லைப்பெரியாறு அணையைப் பார்வையிட்ட அமைச்சர் துரைமுருகன்

அதிமுக அரசு ஏன் அணையை ஆய்வு செய்யவில்லை என்று கேள்வி கேட்க அவருக்கு அருகதை இல்லை. அப்போது ஆய்வு செய்யவேண்டிய தேவையே இருக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்போதுதான் அதற்கான தேவை இருக்கிறது. 2018-ல் இடுக்கி அணை திறக்கப்பட்ட விவகாரத்தில் கேரள அமைச்சர்கள் அத்துமீறி நடந்துகொண்டபோது தடுத்தது அதிமுக அரசு. சுதந்திர இந்தியாவில் இன்னொரு மாநில விவகாரத்தில் இன்னொரு மாநிலம் தலையிட்டதாக வரலாறு இருக்கிறதா?

விதிப்படிதான் அணை திறக்கப்பட்டது என்றால், அதை ஏன் முன்கூட்டியே அறிவிக்கவில்லை... முதலமைச்சர் ஏன் இந்த விவகாரம் குறித்துப் பேசவில்லை?

முல்லைப்பெரியாறு அணை
முல்லைப்பெரியாறு அணை

மக்கள், திமுக அரசை இப்போது காறித் துப்புகிறார்கள். முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து, இதேபோல கர்நாடகா அரசும் செயல்பட்டால், தமிழகத்தின் மொத்த நீராதாரமும் பாதிக்கப்படும் நிலை இருக்கிறது என அரசை எச்சரிக்கிறேன்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு