Published:Updated:

ப.சிதம்பரம் கைதுக்கு யார் காரணம்? - விசாரணை வளையத்தில் முன்னாள் உதவியாளர்!

சிதம்பரம்
சிதம்பரம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கைதுக்கு, காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருந்த ஒருவரே பிரதான காரணம் எனச் சொல்லப்படுகிறது. அவர்தான் 10 ஆண்டுகளாக சிதம்பரத்திற்கு எதிராகத் தொடர்ந்து ஆவணங்களைத் தயார் செய்துவந்துள்ளார்.

“ 'சிபிஐ காவல் முடிந்தபிறகு, அமலாக்கப் பிரிவின் விசாரணைக்கு தாம் உடன்படத் தயார்' என்று நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு, அடுத்த சிக்கல், அவரது உதவியாளராக இருந்த பெருமாள் மூலம் ஏற்படும் என்கிறார்கள்" விசாரணை அதிகாரிகள்.

பெருமாள்
பெருமாள்

சிதம்பரத்தின் உதவியாளராகப் பலரால் அறியப்பட்டவர், பெருமாள். உண்மையில், சிதம்பரத்திற்கு 25 ஆண்டுக்கால நிழல் என்றால், அது பெருமாள்தான். சிதம்பரத்தின் கண் அசைவிற்கான காரணத்தைப் புரிந்து, காரியத்தைச் செய்யும் அளவிற்கு நெருக்கமாக இருந்தவரை, 'திடீர்' என 2010-ம் ஆண்டு சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது வெளியேற்றினார். அப்போதே, இதுகுறித்து பல்வேறு சர்ச்சை கருத்துகள் உலவின.

9 ஆண்டுகள் சிதம்பரத்துடன் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்தவரை, இப்போது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் வளைத்துள்ளனர். லோதி நகரில் உள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில், நேற்று முழுவதும் விசாரணை செய்யப்பட்டுள்ளார், பெருமாள். சிதம்பரத்தின் மீது அடுத்தடுத்த நெருக்கடிகளை சிபிஐ-யும், அமலாக்கப் பிரிவும் ஏற்படுத்திவரும் நிலையில், பெருமாளின் வாக்குமூலம் அதற்கு மேலும் வலுசேர்க்கும் என்கிறார்கள்.

சிதம்பரம்
சிதம்பரம்

பெருமாள், ப.சிதம்பரத்தைவிட்டு வெளியேறினாலும் அவருடைய ஒவ்வொரு நகர்வும் பெருமாளுக்குத் தெரிந்திருந்தது. அதேநேரம், 2004-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் அரசில் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, பல்வேறு டீலிங்குகள் பெருமாள் உதவியுடன் நடைபெற்றுள்ளது என உறுதியாக நம்புகிறது, அமலாக்கப் பிரிவு. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கை அடிப்படையாக வைத்து, சிதம்பரத்தின் மீது வேறு என்னென்ன வழக்குகளைச் சேர்க்க முடியும் என்பதில் குறியாக உள்ளது மத்திய அரசு. அதற்காகவே, பெருமாளை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

பெருமாளிடம் நடத்திய விசாரணையில், 'சிதம்பரம் நிதியமைச்சராக இருந்தபோது, சட்டரீதியான நடவடிக்கைகளை மீறி, வேறு எந்த வகையில் சில தொழிலதிபர்களுடன் நட்பு பாராட்டினார்' என்று அமலாக்கப் பிரிவு கொக்கிபோட்டுள்ளது. சிதம்பரத்தின் மீது ஏற்கெனவே அதிருப்தியில் இருக்கும் பெருமாள், அவருக்கு எதிராக சில வாக்குமூலங்களையும் பதிவு செய்துள்ளாராம். குறிப்பாக, நிதியமைச்சராக இருந்தபோது சிதம்பரம் மேற்கொண்ட சில ஃபைல்களின் மூவ் குறித்து பெருமாளிடம் அமலாக்கப் பிரிவு கேட்டுள்ளது. அதற்கு பெருமாளும் சில விளக்கங்களைக் கொடுத்துள்ளாராம்.

சிதம்பரம் - கபில் சிபில்
சிதம்பரம் - கபில் சிபில்

ப.சிதம்பரத்தின் கைதுக்கு, காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவராக இருந்த ஒருவரே பிரதான காரணம் எனச் சொல்லப்படுகிறது. அவர்தான் 10 ஆண்டுகளாக சிதம்பரத்திற்கு எதிராகத் தொடர்ந்து ஆவணங்களைத் தயார் செய்துவந்துள்ளார் எனவும், ஒருகாலத்தில், காங்கிரஸ் தலைமைக்கே ஆலோசனை சொல்லும் ராஜதந்திரியாக இருந்தவர், இப்போது காங்கிரஸ் கட்சியைக் காவுவாங்கும் வேலையில் தீவிரமாக இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, பெருமாளை விசாரணைக்கு அழைக்கும் ஐடியாவே அவரது திட்டம்தான் என்கிறார்கள், காங்கிரஸ் கட்சியினர்.

அடுத்த கட்டுரைக்கு