Published:Updated:

“கொஞ்சம் விட்டுப் பிடிங்க.. மோடிக்கு அமைச்சர்கள் அட்வைஸ்!”

பதவியேற்றவுடனேயே நிர்வாகத்தில் அதிரடி காட்டாமல் அமைதியாக செல்லுமாறு பிரதமர் மோடிக்கு அமைச்சர்கள் அட்வைஸ் செய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இரண்டாவது முறையாக மோடி பிரதமர் பொறுப்பை ஏற்று ஒருமாதம் தொட்டுவிட்டது. அரியணையில் மீண்டும் ஏறியவுடனேயே பல அதிரடி மாற்றங்கள் டெல்லி அதிகார மட்டத்தில் பறந்தன. குறிப்பாக, 12 மூத்த வருமானவரித்துறை அதிகாரிகள் கட்டாய ஓய்வில் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். இதுபோன்ற விவகாரத்தில் அதிரடி காட்டாமல், நீக்குப் போக்காக செல்லுமாறு அமைச்சர்கள் சிலர் மோடிக்கு அட்வைஸ் செய்திருப்பது தான் டெல்லி அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது.

பிரதமர் அலுவலகம்
பிரதமர் அலுவலகம்

அதிகாரத்தை வைத்து மிரட்டி பணம் பறிப்பது, பெண் ஊழியர்களிடம் பாலியல் அத்துமீறல், வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்திருப்பது உள்ளிட்ட காரணங்களால், 12 வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது. மோடி பிரதமராக பதவியேற்ற 10 நாட்களிலேயே, கடந்த ஜூன் 10ம் தேதி இந்த உத்தரவு வெளியாகி அதிகாரிகள் மட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

பொதுநலன் கருதி வீட்டுக்கு அனுப்பப்பட்ட 12 பேரில், தமிழக வருமானவரித்துறை ஆணையர் ஹோமி ராஜ்வன்ஷ், கூடுதல் ஆணையர் விவேக் பத்ரா ஆகியோரும் அடக்கம். இந்த அதிரடி உத்தரவு வெளியான பிறகு, பிரதமர் மோடியை சந்தித்த இரண்டு மத்திய அமைச்சர்கள், அவசரப்பட்டு அதிரடி காட்ட வேண்டாம் என அட்வைஸ் செய்துள்ளார்களாம்.

மோடி
மோடி

இதுகுறித்து நம்மிடம் பேசிய பி.ஜே.பி. மூத்த தலைவர் ஒருவர், “கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட பல அதிகாரிகள் மத்திய அமைச்சர்கள் மூவருக்கு மிக நெருக்கமானவர்கள். கடந்த ஆகஸ்ட் 2018 முதலே இவர்களின் நடவடிக்கையை கண்காணித்து தான், கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகம் எடுத்துக் கூறினாலும், மத்திய அமைச்சர்கள் கேட்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குறிப்பாக, அடுத்த பிரதமர் கனவில் மிதந்த ஒரு மத்திய அமைச்சரின் சொத்து விவகாரங்களை, கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட இரண்டு அதிகாரிகள் தான் மேற்பார்வை பார்த்துள்ளனர். நம்பிக்கையான தனது ஆட்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டதை, அந்த மத்திய அமைச்சர் சற்றும் விரும்பவில்லை.

இது மாதிரி அவசரப்பட்டு அதிரடி காட்டுனா, நமக்கு விசுவாசமான அதிகாரிகள் யாருமே இருக்கமாட்டாங்க.
மோடிக்கு அமைச்சர்கள் அட்வைஸ்

‘இது மாதிரி அவசரப்பட்டு அதிரடி காட்டுனா, நமக்கு விசுவாசமான அதிகாரிகள் யாருமே இருக்கமாட்டாங்க. நம்ம நடவடிக்கைகள் பத்தி காங்கிரஸுக்கு செய்தி தரவும் அதிகாரிகள் வட்டம் ரெடியாகிடும். கொஞ்சம் விட்டுப் பிடிங்க’ என்று அமைச்சர்கள் அட்வைஸ் செய்துள்ளனர். ‘ஐ வில் கன்சிடர்’ என ஒற்றை வார்த்தையில் அவர்களுக்கு பதிலளித்துவிட்டு, ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள ஜப்பான் பறந்துவிட்டார் மோடி” என்றார்.

என்.டி.டி.வி. தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பான வழக்கை விசாரித்த சஞ்சய் குமார் ஸ்ரீவத்ஸவா கட்டாய ஓய்வில் அனுப்பப்பட்டதற்கு, ஆடிட்டர் குருமூர்த்தியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது துக்ளக் பத்திரிக்கையில், “மோடி அரசு ஸ்ரீவத்ஸவாவுக்கு நியாயம் செய்யும் என நாங்கள் நினைக்கிறோம். அதுவரையில் விடப்போவதில்லை” என சூளுரைத்திருக்கிறார். மோடியின் அதிரடி பலமட்டத்திலும் அதிர்வை கிளப்பியிருப்பது உண்மை.

மோடியின் அதிரடி பலமட்டத்திலும் அதிர்வை கிளப்பியிருப்பது உண்மை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு