Published:Updated:

`பொங்கல் பொருள்களின் தரத்தை உறுதிசெய்வதில் மெத்தனம்; மூத்த அதிகாரி பணியிடை நீக்கம்!' - தமிழக அரசு

தமிழக அரசு பொங்கல் பொருள்கள்

பொங்கல் பரிசுத்தொகுப்பு தரம் குறைபாடு தொடர்பாகப் புகார்கள் எழுந்த நிலையில், மூத்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

`பொங்கல் பொருள்களின் தரத்தை உறுதிசெய்வதில் மெத்தனம்; மூத்த அதிகாரி பணியிடை நீக்கம்!' - தமிழக அரசு

பொங்கல் பரிசுத்தொகுப்பு தரம் குறைபாடு தொடர்பாகப் புகார்கள் எழுந்த நிலையில், மூத்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Published:Updated:
தமிழக அரசு பொங்கல் பொருள்கள்

பொங்கல் பரிசுத்தொகுப்பு தரம் குறைபாடு தொடர்பாகப் புகார்கள் எழுந்த நிலையில், மூத்த அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குக் கரும்பு உள்ளிட்ட 21 பொருள்களுடன் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த திட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 4-ம் தேதி தொடங்கிவைத்தார். நியாயவிலைக் கடைகளில் பைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பொங்கல் தொகுப்பு பொருள்களின் தரம் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் கேள்வி எழுப்பி தங்கள் கண்டனத்தைப் பதிவுசெய்தன. அதனால், தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுத்தொகுப்பு விவகாரம் பேசுபொருளாக மாறியது.

முதல்வர் பொங்கல் பொருள்கள் வழங்கியபோது...
முதல்வர் பொங்கல் பொருள்கள் வழங்கியபோது...

பொங்கல் தொகுப்பு பொருள்கள் கொள்முதல் செய்ததில் ரூ.500 கோடி வரை ஊழல் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். மேலும், இந்தக் குற்றச்சாட்டுத் தவறானது என்றும், இது குறித்து நேரில் விவாதிக்கத் தயாரா என்றும் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கேள்வி எழுப்பியிருந்தார். அதையடுத்து, இது தொடர்பாக, பொங்கல் பொருள்கள் கொள்முதல் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று கூறி ஓ.பி.எஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவை

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் இது தொடர்பாக விசாரித்து, தவறு செய்தவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். பொங்கல் தொகுப்பு வழங்குவதில் சில இடங்களில் பொருள்களின் தரம் குறித்த புகார்கள் எழுந்தன. அந்தப் புகார்கள் குறித்த விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அரசுத் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், சில இடங்களில் கொள்முதல் பொருள்களின் தரத்தை உறுதிசெய்வதில் மெத்தனமாகச் செயல்பட்ட குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இனி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் பொருள்களின் தரத்தை உறுதிப்படுத்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism