Published:Updated:

விமானத்தின் அவசரகாலக் கதவைத் திறந்த விவகாரம்: `சுதந்திரக் காற்றை சுவாசிக்க...’ - அமைச்சர் கிண்டல்

அமைச்சர் செந்தில் பாலாஜி

விமானத்தின் அவசரகால வழிக் கதவைத் திறந்ததாகக் கூறப்படும் இருவரை ட்விட்டர் பதிவில் கிண்டல் செய்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

விமானத்தின் அவசரகாலக் கதவைத் திறந்த விவகாரம்: `சுதந்திரக் காற்றை சுவாசிக்க...’ - அமைச்சர் கிண்டல்

விமானத்தின் அவசரகால வழிக் கதவைத் திறந்ததாகக் கூறப்படும் இருவரை ட்விட்டர் பதிவில் கிண்டல் செய்திருக்கிறார் செந்தில் பாலாஜி.

Published:Updated:
அமைச்சர் செந்தில் பாலாஜி

விமானப் பயணி ஒருவர், விமானத்தின் அவசரகால வெளியேறும் வழியைத் (Emergency Exit) திறந்த சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

கடந்த 2022, டிசம்பர் மாதம், இண்டிகோ விமானம் 6E-7339 சென்னையிலிருந்து திருச்சிக்குச் சென்றது. அந்தச் சமயத்தில் பயணி ஒருவர், அவசரகால வெளியேறும் கதவைத் திறந்திருக்கிறார். அவரின் இந்தச் செய்கையால், மற்ற பயணிகளிடையே பதற்றம் நிலவியது. உடனடியாக விமானப் பணியாளர்கள் விமானத்தின் அழுத்தத்தைச் சரிபார்த்த பின்னர், விமானம் தாமதமாகப் புறப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்க சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டிருக்கிறது.

செந்தில் பாலாஜி ட்வீட்
செந்தில் பாலாஜி ட்வீட்

இது தொடர்பாக, தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், "இரண்டு ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் Emergency கதவைத் திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பியிருந்தேன். இன்று DGCA விசாரிக்க உத்தரவிட்டிருக்கிறது. வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்று என உருட்டிய பொய்யர், சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கக் கதவைத் திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி" எனப் பதிவிட்டிருக்கிறார்.

இதற்கிடையே பாஜக-வைச் சேர்ந்த இரு முக்கியப் பிரமுகர்கள் அந்த விமானத்தில் பயணித்தபோது இது போன்ற செயலில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. DGCA விசாரணையின் முடிவில்தான் உண்மை என்னவென்று தெரியவரும்!