Published:Updated:

கரூர்: `கள்ளச்சாராயத்தைக் கட்டுப்படுத்தவே டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ளது!' - அமைச்சர் செந்தில் பாலாஜி

நிவாரணம் வழங்கும் செந்தில் பாலாஜி
நிவாரணம் வழங்கும் செந்தில் பாலாஜி

``கடந்த ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு கொரோனா உச்சத்தில் இருந்தபோது மதுக்கடைகளைத் திறந்துவைத்து, மது விற்பனை செய்தது. ஆனால், அப்போது அ.தி.மு.க கூட்டணியில் இருந்த ராமதாஸ் அமைதியாக இருந்தார். ஆனால், இப்போது குற்றம்சாட்டுகிறார்” - செந்தில் பாலாஜி

"பா.ஜ.க சார்பில் மதுக்கடைகளை திறக்க கூடாது எனப் போராட்டம் நடத்தியதாகக் கேள்வியுற்றேன். அவர்கள், மக்களுக்காகப் போராட்டம் நடத்த வேண்டும். அரசியலுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கைப் பயன்படுத்தி வெளிமாநிலங்களிலிருந்து மதுபானங்கள் அதிக அளவில் தமிழகத்துக்கு சட்டவிரோதமாக கொண்டுவருவதைத் தடுப்பதற்காகவும், கள்ளச்சாரய விற்பனையைத் தடுப்பதற்காகவும், அரசு உரிய கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளைத் திறந்துள்ளது" என்று செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

நிவாரணம் வழங்கும் செந்தில் பாலாஜி
நிவாரணம் வழங்கும் செந்தில் பாலாஜி
'நீட் தேர்வு ரத்து குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை' - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்

கொரோனா நிவாரணமாக தமிழக அரசு வழங்கும் உதவித்தொகையின் இரண்டாம் தவணை ரூ.2,000 மற்றும் 14 வகையான மளிகைப்பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி, கரூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கரூர் நகராட்சிக்குட்பட்ட படிக்கட்டுத்துறை, காந்திநகர் நியாய விலைக் கடையில் தொடங்கிவைத்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி,

நிவாரணம் வழங்கும் செந்தில் பாலாஜி
நிவாரணம் வழங்கும் செந்தில் பாலாஜி

"தமிழகத்தில் ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, நியாய விலைக் கடைகள் மூலம் முதற்கட்டமாக ரூ.2,000 முதல் தவணைத் தொகை சென்ற மாதம் வழங்கப்பட்டது. தற்போது, இரண்டாம் தவணைக்காக இன்று அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2,000 என மொத்தம் இதுவரை ஒரு குடும்ப அட்டைக்கு 4,000 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதனால், 2 .9 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்றுள்ளனர். இதற்காக, அரசு ரூ. 8,350 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்ட அ.தி.மு.க அரசு கடன் சுமையை ஏற்றிச்சென்றது. ஆனால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏழை, எளிய மக்களின் நிலையைக் கருத்தில்கொண்டு நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் வழங்கியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ள தமிழக அரசு, தற்போது தேர்தல் நேரத்தில் அளிக்காத வாக்குறுதியாக 14 வகை மளிகைப் பொருள்கள் தொகுப்பை சுமார் ரூ. 840 கோடி மதிப்பீட்டில், இன்று ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த்தொற்று உச்சத்தில் இருந்த காரணத்தால், மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு இப்போது படிப்படியாகக் குறைந்து தமிழகத்திலுள்ள 27 மாவட்டங்களில் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் நிறுவனங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மற்ற 11 மாவட்டங்களில் 25 சதவிகித பணியாளர்களுடன் நிறுவனங்கள் செயல்பட தளர்வுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, கால அவகாசம் வழங்குவதற்கான தேவை ஏற்படவில்லை.

டாஸ்மாக் மதுக்கடை
டாஸ்மாக் மதுக்கடை

பா.ம.க தலைவர் ராமதாஸ், மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதே பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த ஆட்சியில் அ.தி.மு.க அரசுடன் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தது. கடந்த ஆட்சியில் இருந்த அ.தி.மு.க அரசு கொரோனா உச்சத்தில் இருந்தபோது மதுக்கடைகளைத் திறந்துவைத்து, மது விற்பனை செய்தது. ஆனால், அப்போது அ.தி.மு.க கூட்டணியில் இருந்த ராமதாஸ் அமைதியாக இருந்தார். ஆனால், இப்போது தமிழக அரசைக் குற்றம்சாட்டுகிறார். உண்மையில், தற்போது படிப்படியாக உச்சத்திலிருந்த கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியிருக்கிறது.

அதனால், தளர்வு அறிவிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் மட்டும் மது விற்பனை தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது. நேற்றுக்கூட, பா.ஜ.க சார்பில், 'மதுக்கடைகளை திறக்கக் கூடாது' எனப் போராட்டம் நடத்தியதாகக் கேள்வியுற்றேன். அவர்கள் மக்களுக்காகப் போராட்டம் நடத்த வேண்டும். ஆனால், அரசியலுக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கைப் பயன்படுத்தி வெளிமாநிலங்களிலிருந்து மதுபானங்கள் அதிக அளவில் தமிழகத்துக்கு சட்டவிரோதமாகக் கொண்டுவரப்படுவதைத் தடுப்பதற்கும், கள்ளச்சாரய விற்பனையைத் தடுப்பதற்காகவும், அரசு உரிய கட்டுப்பாடுகளுடன் மதுக்கடைகளைத் திறந்துள்ளது. தமிழக அரசு அனைவருக்குமான நல்லரசாகச் செயல்பட்டுவருகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு