Published:Updated:

``மோடி அரசைக் கண்டு அதிமுக அஞ்சுகிறது" - சொல்கிறார் செந்தில் பாலாஜி

பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி

`2010 ம் ஆண்டு 410 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் தற்போது 1,120 ரூபாய். 2014-ம் ஆண்டு 54 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீசல் தற்பொழுது 94 ரூபாய். அதிமுக-வினர் ஏன் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு குறித்துப் பேசவில்லை?' - செந்தில் பாலாஜி

``மோடி அரசைக் கண்டு அதிமுக அஞ்சுகிறது" - சொல்கிறார் செந்தில் பாலாஜி

`2010 ம் ஆண்டு 410 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் தற்போது 1,120 ரூபாய். 2014-ம் ஆண்டு 54 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீசல் தற்பொழுது 94 ரூபாய். அதிமுக-வினர் ஏன் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு குறித்துப் பேசவில்லை?' - செந்தில் பாலாஜி

Published:Updated:
பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி

கரூர் மாநகராட்சி வளாகத்தில், சென்னையில் நடைபெறவிருக்கும் 44 -வது ஒலிம்பியாட் சதுரங்க போட்டி குறித்தான பள்ளி மாணவ, மாணவர்களுக்கான விழிப்புணர்வு பேரணியை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார். அந்தப் பேரணி கரூர் மாநகராட்சி வளாகத்தில் தொடங்கி, ஜவஹர் பஜார், கடைவீதி வழியாக திருவள்ளுவர் மைதானத்தில் முடிந்தது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி மாணவ, மாணவிகளுடன் பேரணியில் பங்கேற்றார்.

மாணவ, மாணவிகள் பேரணி
மாணவ, மாணவிகள் பேரணி

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, ``தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்க்கும்விதமாக இந்த வரலாற்று சிறப்புமிக்க சதுரங்கப் போட்டியை முதல்வர் ஏற்பாடு செய்திருக்கிறார். இரண்டு நாள்களாக சமூக வலைதளங்களில் தவறான கருத்துகள் பரிமாறப்படுகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகார்வோர்களிடம் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும். அப்போது, மின்வாரியம் மூலம் கட்டணம் வசூலிக்கப்படவிருப்பதாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் செய்தி பரவிவருவது தவறான செய்தி.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

திட்டமிட்டுப் பரப்பப்படும் வதந்தி. நேற்று சைதாப்பேட்டையில் நடைபெற்ற மின்வாரியக் கூட்டத்தில் தெளிவாக இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குடிசை மற்றும் வீடுகளுக்கு மின் இணைப்பு பெற்றுள்ள, இரண்டு கோடியே முப்பத்து ஏழு லட்சம் மின் நுகர்வோரில் ஒரு கோடி மின் நுகர்வோருக்கு எவ்வித மாற்றமும் இன்றி கட்டணம் ஜீரோ என்ற நிலையில் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஏழை, எளிய அடித்தட்டு நுகர்வோர் பாதிக்கப்படாத வண்ணம் தமிழ்நாடு முதலமைச்சர் இதற்காக தனி கவனம் செலுத்தியிருக்கிறார்.

பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி
பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி

ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டிருப்பதற்கு கட்டணமோ, வாடகையோ நிச்சயம் வசூலிக்கப்பட மாட்டாது. மின் பயன்பாடு 100 யூனிட் முதல் 200 யூனிட் வரை பயன்படுத்தும் மின் நுகர்வோர் 63 லட்சத்து 35 ஆயிரம் பேருக்கு இரு மாதக்களுக்கு ஒரு முறை 55 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டிருக்கிறது. இது, ஒரு மாதத்துக்கு 27.50 பைசா என்ற அளவில் மட்டுமே மின் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு ஒரு ரூபாய்கூட கிடையாது. மின்வாரியத்தைப் பொறுத்தவரை, தமிழக ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத அளவுக்குக் கட்டண மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. கடன் சுமையை இவ்வளவு அதிகம் உயர்த்தியதற்கு யார் காரணம், ஒரு லட்சத்து ஐம்பத்து ஒன்பது ஆயிரம் கோடி எந்த ஆட்சிக்காலத்தில் மின்வாரிய கடன் தொகை உயர்த்தப்பட்டது... ஆண்டுக்கு ரூ.16,500 கோடி வட்டி செலுத்தக்கூடிய நிலைக்கு தள்ளியது அ.தி.மு.க அரசுதான்.

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் தமிழகத்தின் மொத்த மின்தேவையில் மூன்றில் இரண்டு பங்கு வெளிச்சந்தையில் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது தமிழகத்தின் மொத்த மின் தேவையை நமக்கு நாமே உற்பத்தி செய்துவருகிறோம். அதிக விலை கொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்து, தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்ந்தது என்று பொய்யான செய்தியை அ.தி.மு.க-வினர் பரப்பிவந்தனர். அப்படி எனில், ஏன் தமிழகத்தில் இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை வழங்கவில்லை... தி.மு.க அரசு பொறுப்பேற்றவுடன் ஒரு லட்சம் இலவச மின் இணைப்புகளை விவசாயிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம் அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற நிர்வாகச் சீர்கேடு காரணமாக இழுத்து மூடும் நிலையில் இருந்தது. குறிப்பாக, ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய மானியம், வங்கிகள் வழங்கவேண்டிய கடன்கள் மறுக்கப்பட்ட சூழ்நிலைதான் நிலவிவந்தது. அதேபோல், கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் 2011, 12, 13 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் 37 சதவிகிதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மாணவ, மாணவிகள் பேரணி
மாணவ, மாணவிகள் பேரணி

அவர்கள் உயர்த்திவைத்த கட்டணத்தை மறைத்துவிட்டு, பொய்யான, உண்மைக்குப் புறம்பான தகவல்களை மக்களிடத்தில் இப்போது பரப்பிவருகின்றனர். 2010-ம் ஆண்டு 410 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிலிண்டர் விலை தற்போது 1,120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 2014-ம் ஆண்டு 54 ரூபாய்க்கு விற்கப்பட்ட டீசல் தற்பொழுது 94 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று அ.தி.மு.க-வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏன் பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு குறித்துப் பேசவில்லை... அப்படியானால், ஒன்றிய அரசைக் கண்டு அ.தி.மு.க பயப்படுகிறது. ஒன்றிய அரசை எதிர்க்கக்கூடிய வக்கற்ற சூழ்நிலையில் அ.தி.மு.க இருக்கிறது. இதில், எங்களுக்கு எதிராக பொய்யான வதந்திகளைப் பரப்புவது கொடுமை. தங்கள் மீதுள்ள தவற்றை மறைக்கத்தான், எங்கள்மீது புழுதிவாரித் தூற்றுகிறார்கள்" எனத் தெரிவித்தார்.