Published:Updated:

``மின்சார மசோதாவைக் கைவிடும்வரை பிரதமருக்கு முதல்வர் அழுத்தம் கொடுப்பார்” - அமைச்சர் செந்தில் பாலாஜி

மாணவர்களுடன் உறுதிமொழி எடுக்கும் செந்தில் பாலாஜி

``நாம் உருவாக்கிய கட்டமைப்பைத் தனியாருக்கு தாரை வார்க்கும் சூழல்தான் மின்சார திருத்த சட்ட மசோதாவில் இடம் பெற்றிருக்கிறது. இந்த மசோதாவைத் திரும்பப் பெறும் வரை முதல்வர் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார்" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

``மின்சார மசோதாவைக் கைவிடும்வரை பிரதமருக்கு முதல்வர் அழுத்தம் கொடுப்பார்” - அமைச்சர் செந்தில் பாலாஜி

``நாம் உருவாக்கிய கட்டமைப்பைத் தனியாருக்கு தாரை வார்க்கும் சூழல்தான் மின்சார திருத்த சட்ட மசோதாவில் இடம் பெற்றிருக்கிறது. இந்த மசோதாவைத் திரும்பப் பெறும் வரை முதல்வர் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார்" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Published:Updated:
மாணவர்களுடன் உறுதிமொழி எடுக்கும் செந்தில் பாலாஜி

கரூர் நகர்ப்பகுதியில் அமைந்துள்ள கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயர்த்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். அந்தப் பள்ளியில் 11-ம் வகுப்பு, 12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, "தமிழ்நாட்டில் போதைப்பொருள்கள் நடமாட்டத்தை முழுவதுமாகக் கட்டுப்படுத்துவதற்கு நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர்கள், காவல் துறை உயரதிகாரிகள் கூட்டத்தை முதல்வர் நடத்தி மிக கண்டிப்பான உத்தரவுகளை அரசு அதிகாரிகளுக்கு வழங்கியிருக்கிறார். தமிழ்நாட்டில் எந்த இடத்திலும் போதைப்பொருள்கள் பயன்பாடு இல்லாத நிலையை கொண்டுவர வேண்டும் என்பதற்காக முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளார். அதன் அடிப்படையில் போதைப்பொருளுக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் இயக்கமாக முதல்வர் இதை எடுத்திருக்கிறார். நிச்சயமாக போதைப்பொருள் இல்லாத மாநிலமாக, போதைப் பழக்கத்துக்கு ஆளாகாத சிறப்புமிக்க மாநிலமாகத் தமிழ்நாட்டை முதல்வர் மாற்றிக் காட்டுவார்.

மின்சார திருத்த சட்ட மசோதாவைப் பொறுத்தவரை, நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டவுடன் தி.மு.க சார்பில் நாடாளுமன்றக்குழுத் தலைவர் டி.ஆர்.பாலு மிகக் கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்தார்.

உறுதிமொழி எடுக்கும் மாணவர்கள்
உறுதிமொழி எடுக்கும் மாணவர்கள்

அவரின் அழுத்தம் காரணமாகவே நாடாளுமன்ற கமிட்டிக்கு திருத்த மசோதா அனுப்பப்பட்டிருக்கிறது. அந்த மசோதா நடைமுறைக்கு வரும்பட்சத்தில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் வழங்கக்கூடிய 100 யூனிட் இலவச மின்சாரம், விவசாயம், விசைத்தறி, குடிசைகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம் முற்றிலும் பாதிக்கபடக்கூடிய சூழல் உருவாகும். அதிலும் குறிப்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு கடன்களைப் பெற்று, அரசு நிதிகளைப் பெற்று, மக்களின் பங்களிப்புகளைப் பெற்று உருவாக்கப்பட்ட கட்டமைப்புகள் முழுவதுமாக தனியாருக்கு எந்தவிதக் கட்டணமும் செலுத்தாமல் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளன.

அதிகம் பயன்படுத்தக்கூடிய நுகர்வோருக்கும், தொழிற்துறை நிறுவனங்களுக்கும் அனுமதி பெற்று மின் நுகர்வோருக்கான அனுமதியைப் பெறுவார்கள். குறிப்பாக, ஏழை மக்களுக்கு, அடித்தட்டு மக்களுக்கு குறைந்த அளவு பயன்படுத்தக்கூடிய மின் நுகர்வோருக்கு தனியார் துறை மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க மாட்டார்கள். அதனால், ஒட்டுமொத்தமாக நாம் உருவாக்கிய கட்டமைப்பைத் தனியாருக்கு தாரை வார்க்கும் அந்தச் சூழல் தான் மின்சார திருத்த சட்ட மசோதாவில் இடம் பெற்றுள்ளது. இந்திய பிரதமருக்கு முதல்வர் இது பற்றிக் கடிதம் எழுதியுள்ளார். தி.மு.க எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு குரலை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த மசோதாவைத் திரும்பப் பெறும் வரை முதல்வர் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார்" என்றார்.