Published:Updated:

``மின்வெட்டு இல்லை; பிற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை வழங்குகிறோம்” - அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்துள்ள சூழ்நிலையில், நூறு ஆண்டுகள் சாதனை எனப் போற்றும் அளவுக்கு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

``மின்வெட்டு இல்லை; பிற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை வழங்குகிறோம்” - அமைச்சர் செந்தில் பாலாஜி

தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்துள்ள சூழ்நிலையில், நூறு ஆண்டுகள் சாதனை எனப் போற்றும் அளவுக்கு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றியுள்ளதாக, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Published:Updated:
அமைச்சர் செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில், தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``தமிழ்நாட்டில் தி.மு.க அரசு ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவடைந்துள்ள சூழ்நிலையில், நூறு ஆண்டுகள் சாதனை எனப் போற்றும் அளவுக்கு, சிறப்பாக மக்கள் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. கரூர் மாவட்டத்தில் தேர்தல் நேரத்தில் வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன. அதன்படி, காவிரியாற்றில் ரூ. 2 ஆயிரம் கோடி அளவுக்குப் புதிய கதவணை, தடுப்பணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி
பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி

வேளாண் கல்லூரி கரூர் மாவட்டத்தில் புதிதாகத் தொடங்கப்பட்டு, நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வகுப்புகள் தொடங்கியுள்ளன. அதேபோல, அரவக்குறிச்சியில் கலை அறிவியல் கல்லூரி, தரகம்பட்டியில் கலை அறிவியல் கல்லூரி புதிய கட்டடம் கட்டும் பணி என கரூர் மாவட்டத்தில் உள்ள நான்குல் சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒருசேர வளர்ச்சித் திட்டங்களை தமிழக முதல்வர் வழங்கியுள்ளார். நிலக்கரி கையிருப்பைப் பொறுத்தவரையில், இன்னும் அடுத்த ஏழு நாள்களுக்கு கையிருப்பு உள்ளது. நேற்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றாலைகளில் தயாரிக்கப்படும் மின்சாரம் வீணாக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், மழைக்காலங்களில் மின் தொகுப்புகளை சமமாக வைக்கவில்லையென்றால், பழுதாகும் சூழ்நிலை ஏற்படும். இதனால், தற்போது உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அனல்மின் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு 2,000 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது. 60 சதவிகித மின் உற்பத்தி கட்டாயம் செய்தாக வேண்டும். காற்றாலைகளில் கிடைக்கும் மின் உற்பத்தியில் பழுது ஏற்பட்டால், அதைச் சமமாக வைத்துக்கொள்ள வேண்டும். இது பாட்டாளி மக்கள் கட்சித் தலைவருக்கும் தெரியும். அவருக்குத் தெரிவிக்க விரும்புவதெல்லாம், இரண்டு மணி நேரம் மின் நுகர்வு குறைந்த காரணத்தால் காற்றாலை உற்பத்தியிலிருந்து தேவையான அளவு மட்டுமே மின் நுகர்வுகாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மின் நுகர்வு குறைந்துள்ள காரணத்தால், சோலார், காற்றாலை, அனல்மின் நிலையம் போன்றவற்றில் குறைந்த மின் உற்பத்தி மட்டுமே மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு உபரி மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் வழங்கிவருகிறது. மற்ற மாநிலங்கள் கேட்டு விருப்பம் தெரிவித்தால், அங்கும் வழங்குவதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் தயாராக உள்ளது.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

நிலக்கரி பற்றாக்குறையால் குஜராத் உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கும் அளவுக்கு அறிவிக்கப்பட்ட மின்வெட்டு உள்ளது. தமிழ்நாட்டில் எவ்வித மின்வெட்டும் இல்லை. மின்வெட்டு அறிவிப்பும் இல்லை. மத்திய தொகுப்பிலிருந்து 800 மெகாவாட் பற்றாக்குறையாக வழங்கப்பட்ட சூழ்நிலையில் ஏற்பட்ட மின் தடங்கல்கள் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் சொந்த உற்பத்தி மூலம் ஈடு செய்யப்பட்டது. இனி நிலக்கரி பற்றாக்குறை ஏற்படக் கூடாது என்பதைக் கருத்தில்கொண்டு தமிழ்நாட்டு முதலமைச்சர் முன்னெடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அடுத்த ஏழு நால்களுக்கு நிலக்கரி கையிருப்பு உள்ளது. டெண்டர் முறையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் 137 டாலர் விலைக்கு 4 லட்சத்து 80 ஆயிரம் நிலக்கரி டன் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்ததன் விளைவாக தற்போது சர்வதேசச் சந்தையில் ஏற்பட்டுள்ள அதிகப்படியான நிலக்கரி விலை உயர்வு நேரத்தில் முன்னதாகவே முதலமைச்சரின் முன் முயற்சியால் நிலக்கரியைக் கொள்முதல் செய்திருக்கிறோம். டெண்டர் முறையில் விலை உயர்ந்த பிறகு அதிக விலை கொடுத்து நிலக்கரி வாங்கப்பட்டுள்ளது என எழுப்பப்படும் தேவையற்ற விமர்சனங்கள், முதலமைச்சர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் தவிர்க்கப்பட்டுள்ளது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism