Published:Updated:

"குறைந்த விலையில் தரமான சேவை கொடுப்பதே இலக்கு" - மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி
பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி

'கரூர் மாவட்டத்தில் கடந்த 5 மாத காலத்தில் சட்டவிரோதமான லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பனை, சந்து கடைகளில் மது விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் விரும்பும் நல்லாட்சி நடைபெற்று வருகிறது' - செந்தில் பாலாஜி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று பழுதடைந்துள்ள கொளந்தகவுண்டனூர் அடுக்குமாடி குடியிருப்பை, நேரில் பார்வையிட்டார். தொடர்ந்து, நிவாரண உதவித் தொகைகள் வழங்கும் நிகழ்ச்சி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி
நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி

பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மக்களுக்கு, போர்க்கால அடிப்படையில் விரைவில் தமிழக முதலமைச்சரின் ஒப்புதல் பெற்று, புதிய வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் மாவட்டத்துக்கு அரசு வேளாண்மை கல்லூரி, காவிரி ஆற்றின் குறுக்கே இரண்டு புதிய தடுப்பணைகள் அமைப்பதற்கு தமிழக முதலமைச்சர் அனுமதி அளித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் கடந்த 5 மாத காலத்தில் சட்டவிரோதமான லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பனை, மது விற்பனை உள்ளிட்ட குற்றச் செயல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் விரும்பும் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களுக்கும் முதல்வராக, தமிழக முதலமைச்சர் விளங்கி வருகிறார்.

தமிழகத்தின் மின்சார தேவை நாளொன்றுக்கு 16 ஆயிரம் மெகாவாட்டாக இருக்கிறது. தமிழக மின்சார வாரியத்தின் மூலம் சொந்தமாக உற்பத்தி செய்யப்படும் 22 விழுக்காடு போக, மீதமுள்ள ஒன்றிய அரசின் பங்கீடு மற்றும் கூடுதலாக தனியாரிடம் கொள்முதல் செய்யக்கூடிய மின்சாரம் என ஏறத்தாழ 50 விழுக்காடு மின்சாரம் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

`தேர்தல் புறக்கணிப்பு' அறிவித்த கிராம மக்கள்; படையெடுத்த அதிகாரிகள்; தொடங்கப்பட்ட பணிகள்!

மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய, அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யும் நிலையினை மாற்றி, உற்பத்தி செலவைக் குறைத்து, தரமான சேவையை வழங்க வேண்டும் என்பதற்காக, தமிழக முதலமைச்சர் பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கி உள்ளார். அவற்றில் குறிப்பாக சூரிய சக்தி வாயிலாக மின் உற்பத்தியை பெருக்கும் திட்டத்தை முதல்முறையாக திருவாரூர் மாவட்டத்தில் சூரிய மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு 4,000 மெகாவாட் அளவுக்கு சூரிய மின்சக்தி பூங்காவின் மூலம் உற்பத்தி அதிகரிக்கப்படும். தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மின்சக்தி பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

குடியிருப்பை பார்வையிடும் செந்தில் பாலாஜி
குடியிருப்பை பார்வையிடும் செந்தில் பாலாஜி

தமிழகத்தில் 3.16 கோடி மின் இணைப்புகள் உள்ளன. ஒவ்வொருவரின் இணைப்புக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேசமயம், அடிக்கடி மின் பழுதுகள் ஏற்படுவதைத் தடுக்க, 8,905 மின்மாற்றிகள் புதுப்பித்து அமைக்க மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது. இதில், முதல்கட்டமாக 2,500 க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. மின்னகம் மூலம் 3.53 லட்சம் புகார்கள் பெறப்பட்டு, அவற்றில் 3.50 லட்சம் புகார்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டுள்ளது. அதாவது, 99 விழுக்காடு அளவுக்கு புகார்களுக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு