Published:Updated:

சேது சமுத்திரத் திட்டம்: "கடல், கடலோரச் சூழல் அமைவைக் கடுமையாக பாதிக்கும்" - பூவுலகின் நண்பர்கள்

சட்டமன்றம் ( ட்விட்டர் )

``மன்னார் வளைகுடா உயிர்மண்டலக் காப்பகம் மற்றும் பவளத்திட்டுகளை இந்தத் திட்டம் பாதிக்கும் என்பதால் சேது சமுத்திரத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.’' - பூவுலகின் நண்பர்கள்

சேது சமுத்திரத் திட்டம்: "கடல், கடலோரச் சூழல் அமைவைக் கடுமையாக பாதிக்கும்" - பூவுலகின் நண்பர்கள்

``மன்னார் வளைகுடா உயிர்மண்டலக் காப்பகம் மற்றும் பவளத்திட்டுகளை இந்தத் திட்டம் பாதிக்கும் என்பதால் சேது சமுத்திரத் திட்டத்தைக் கைவிட வேண்டும்.’' - பூவுலகின் நண்பர்கள்

Published:Updated:
சட்டமன்றம் ( ட்விட்டர் )

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர், கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடந்துவருகிறது. நான்காவது நாளான இன்று முதல்வர் ஸ்டாலின் சேது சமுத்திரத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் எனத் தனித் தீர்மானம் கொண்டுவந்தார். இது தொடர்பாகச் சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "1967-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அண்ணா, தான் எழுதிய மடலில் இந்தத் திட்டத்தை நிறைவேற்றியாக வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். 2004-ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் கட்சியின் தலைமையில் தி.மு.க உள்ளடக்கிய கூட்டணி ஆட்சி மலர்ந்தபோது, ரூ.2,427 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் பாதி முடிந்த நிலையில், அரசியல் காரணங்களுக்காக பா.ஜ.க சார்பில் இந்தத் திட்டத்துக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது.

பூவுலகின் நண்பர்கள்
பூவுலகின் நண்பர்கள்

இந்தத் திட்டத்தை ஆரம்பம் முதல் ஆதரித்துவந்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திடீரென நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு திட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். தமிழ்நாட்டு மக்களின் நீண்டக்கால கனவுத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் தொடர்புடைய வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகின்றன. `சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவோம்’ என்று மத்திய பா.ஜ.க அரசு சொல்லிருக்கிறது. எனவே, இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்" எனத் தெரிவித்தார்.

முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த இந்தத் தனித் தீர்மானத்துக்கு பா.ஜ.க உட்பட அனைத்துக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருக்கின்றன. இந்த நிலையில், பூவுலகின் நண்பர்கள் குழு சேது சமுத்திர திட்டத்தைக் கைவிடக் கோரிக்கை வைத்திருக்கிறது.

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், "சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றிட ஒன்றிய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என்கிற தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேறியிருக்கிறது.

 பூவுலகின் நண்பர்கள் - சுந்தர்ராஜன்
பூவுலகின் நண்பர்கள் - சுந்தர்ராஜன்
Jerome K

இந்தத் திட்டம் கடல் மற்றும் கடலோரச் சூழல் அமைவைக் கடுமையாக பாதிக்கும் தன்மையுடையது. குறிப்பாக, மன்னார் வளைகுடா உயிர்மண்டலக் காப்பகம் மற்றும் பவளத்திட்டுகளை இந்தத் திட்டம் பாதிக்கும் என்பதால் இந்தத் திட்டத்தை கைவிடக் கோருகிறோம்" எனப் பதிவிட்டிருக்கிறது.