Published:Updated:

`பாலியல் கல்வி தேவையில்லை..!'- ஆர்.எஸ்.எஸ் துணை அமைப்பு சொல்வதென்ன?

இ.லோகேஷ்வரி

பாலியல் கல்வி, பள்ளிகளில் தேவையில்லை என ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் துணை அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்
ஆர்.எஸ்.எஸ்

"புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை பரிந்துரைத்துள்ளபடி, பள்ளிகளில் பாலியல் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டிய அவசியமில்லை" என ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் துணை அமைப்பு தெரிவித்துள்ளது. உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்குப் பாலியல் கல்வி வழங்கப் பரிந்துரைக்கப்படும் எனத் தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாலியல் கல்வி
பாலியல் கல்வி

பாலியல் அத்துமீறல்கள் குறித்தும், பெண்களுக்கான தற்காப்பு மற்றும் பெண்களுக்குத் தேவையான விழிப்புணர்வு குறித்தெல்லாம் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்படுவது குறித்துத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பள்ளிகளில் பாலியல் கல்வி தேவையில்லை என்று, ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அங்கமான சிக்‌ஷா சன்ஸ்க்ரித் உத்தன் நியாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த அமைப்பின் தேசியச் செயலாளர், அதுல் கோத்தாரி டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அதுல் கோத்தாரி
அதுல் கோத்தாரி

அப்போது, ''புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை பரிந்துரைத்துள்ளபடி, பள்ளிகளில் பாலியல் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டிய அவசியமில்லை. பாலுறவு என்ற வார்த்தையைப் பள்ளி மாணவர்களிடம் பயன்படுத்துவது தவறு. இதை, நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். பள்ளி மாணவர்கள் மனித உடலமைப்புப் பற்றி மட்டும் தெரிந்துகொள்ளட்டும்.

அது அறிவியல் பாடமாகச் சொல்லித் தரப்படுகிறது. இந்நிலையில், பாலியல் கல்வி என்று ஒன்று தனியாகத் தேவையில்லை. இதுவரை பாலியல் கல்வி எங்கெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டதோ, அங்கெல்லாம் அது எதிர்வினையை ஏற்படுத்தியிருக்கிறது.

பாலியல் கல்வி, பள்ளிகளில் தேவையில்லை
அதுல் கோத்தாரி

கல்வியில் இந்தியத் தன்மை இருக்க வேண்டும். பாலியல் கல்வி குறித்து யாருக்கு வேண்டுமோ, தேவைக்கேற்ப சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஆலோசனை வழங்கப் பள்ளிகளில் ஆலோசனை மையம் அமைக்கலாம்'' எனத் தெரிவித்துள்ளார்.