Published:Updated:

ஆம் ஆத்மிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம்... சரத் பவார், மம்தா ஷாக் - பின்னணி என்ன?!

சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா

ஆம் ஆத்மி கட்சிக்கு தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை தேர்தல் கமிஷன் வழங்கியிருக்கிறது. அதேசமயம் திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தேசியக் கட்சி அந்தஸ்தை இழந்திருக்கின்றன.

Published:Updated:

ஆம் ஆத்மிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம்... சரத் பவார், மம்தா ஷாக் - பின்னணி என்ன?!

ஆம் ஆத்மி கட்சிக்கு தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை தேர்தல் கமிஷன் வழங்கியிருக்கிறது. அதேசமயம் திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தேசியக் கட்சி அந்தஸ்தை இழந்திருக்கின்றன.

சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா

தேர்தல் கமிஷன், தேசியக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் கடந்த இரண்டு தேர்தல்களில் பெற்ற வாக்குகளின் அடிப்படையில், அவற்றின் அங்கீகாரத்தை மாற்றியமைத்து உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய அந்தஸ்து ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. அந்தக் கட்சிகள் இனி மாநிலக் கட்சிகளாக விளங்கும்.

ஆம் ஆத்மிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம்... சரத் பவார், மம்தா ஷாக் - பின்னணி என்ன?!

இது தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்டிருக்கும் செய்தியில், `இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அங்கீகாரம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. இது தவிர உத்தரப்பிரதேசத்தில் ஆர்.எல்.டி., ஆந்திராவில் பி.ஆர்.எஸ்., மணிப்பூரில் பி.டி.ஏ., பாண்டிச்சேரியில் பா.ம.க., மேற்கு வங்கத்தில் ஆர்.எஸ்.பி., மிசோராமில் எம்.பி.சி போன்ற கட்சிகளின் மாநிலக் கட்சி அங்கீகாரமும் ரத்துசெய்யப்பட்டிருக்கிறது. நாகாலாந்தில் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சிக்கு மாநில அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

டெல்லி, கோவா, பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் பெற்ற தேர்தல் வெற்றியின் அடிப்படையில் ஆம் ஆத்மி கட்சி மாநிலக் கட்சி அந்தஸ்து பெற்றிருப்பதால் தேர்தல் கமிஷனின் சட்டப்பிரிவு 6 பி (iii) பிரிவின்கீழ் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம் வழங்கப்படுகிறது. வரும் தேர்தல்களில் வெற்றிபெற்று, அரசியல் கட்சிகள் பழைய அங்கீகாரத்தை பெற முடியும். காங்கிரஸ், பா.ஜ.க., பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி கட்சிகள் மட்டுமே இனி தேசியக் கட்சிகளாக இருக்கும்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால் - ஆம் ஆத்மி
அரவிந்த் கெஜ்ரிவால் - ஆம் ஆத்மி

இனி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் மாநிலக் கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்ட மாநிலத்தைத் தவிர்த்து, வேறு மாநிலத்தில் போட்டியிடுவதாக இருந்தால் வேறு சின்னத்தில்தான் போட்டியிட முடியும்.

தேசியக் கட்சி அங்கீகாரம் பெற ஒரு கட்சி நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது மொத்த மக்களவைத் தொகுதியில் இரண்டு சதவிகிதத் தொகுதியில் வெற்றிபெற்றிருக்கவேண்டும். தேசியக் கட்சி அந்தஸ்து கிடைத்திருப்பது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் செய்தியில், ``மக்கள் இன்றைக்கு நமக்கு மிகப்பெரிய பொறுப்பைக் கொடுத்திருக்கின்றனர். ஆம் ஆத்மி கட்சி, தேசியக் கட்சி அந்தஸ்தைக் குறுகியகாலத்தில் பெற்று சாதனை படைத்திருக்கிறது.

ஆம் ஆத்மிக்கு தேசியக் கட்சி அங்கீகாரம்... சரத் பவார், மம்தா ஷாக் - பின்னணி என்ன?!

கோடிக்கணக்கான மக்கள் நம்மை ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். நம்மிடம் மக்கள் பெரிய அளவில் எதிர்பார்க்கின்றனர். கடவுள்தான் எங்களது பொறுப்புகளை நிவர்த்தி செய்ய ஆசீர்வதிக்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளாக கட்சிக்காகக் கடுமையாக உழைத்த தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்து தேசியக் கட்சி அங்கீகாரத்தை இழந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் பினோய் பிஸ்வாம் கூறுகையில், ``இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் இதயத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. போராடும் மக்களின் ரத்தம், கண்ணீரால் உருவாக்கப்பட்டது. ஜனநாயகம், மதச்சார்பின்மைக்காக போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான சௌகதா ராய் கூறுகையில், ``தேர்தல் கமிஷனின் முடிவால் வரும் தேர்தலில் எங்களது கட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. எங்களது போராட்டம் தொடரும்” என்று தெரிவித்திருக்கிறார். சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி குஜராத், பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கூட்டணி அமைத்து வெற்றிபெற்றுவந்தது. ஆனால், கடந்த சில தேர்தல்களில் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. இதனால் அந்தக் கட்சியால் வெற்றிபெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.