Published:Updated:

குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரித்த சிவசேனா! - டி.என்.சேஷன் களம்கண்ட இரு தேர்தல்கள்!

தேர்தல் சமயத்தில் இப்படித்தான் நடக்க வேண்டுமென்று அதிரடி சட்டங்களைக் கொண்டு வந்தவர் டி.என்.சேஷன். தேர்தல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவரும் தேர்தலில் போட்டியிட்டார்.

டி.என். சேஷன்
டி.என். சேஷன்

சிறந்த வீரர்கள் சிறந்த கோச்சாக இருப்பதில்லை. இந்தியாவிலேயே, திறமையான தேர்தல் ஆணையராக அறியப்பட்ட டி.என் சேஷனுக்கும் தேர்தலுக்கும் ராசி கிடையாது. ஏனென்றால், இருமுறை தேர்தலில் நின்று தோல்வி கண்டுள்ளார். தேர்தலின்போது, கண்டபடி நடந்துகொண்டிருந்த அரசியல் கட்சிகளை அடக்கி ஒடுக்கி, தேர்தல் சமயத்தில் இப்படித்தான் நடக்க வேண்டுமென்று அதிரடி சட்டங்களைக் கொண்டு வந்தவர் டி.என்.சேஷன். தேர்தல் ஆணையராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு, இவரும் தேர்தலில் போட்டியிட்டார்.

டி.என். சேஷன்
டி.என். சேஷன்

1997-ம் ஆண்டு குடியரசுத் தலைவருக்கான தேர்தல். காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி சார்பில் கே.ஆர். நாராயணன் போட்டியிட்டார். இவரை, எதிர்த்து களம் கண்டார் டி.என்.சேஷன். இவரை ஆதரித்த ஒரே கட்சி சிவசேனாதான். சேஷனின் உறுதியான நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்ட பால் தாக்கரே அவரை ஆதரித்தார். சிவசேனாவின் கட்சி பத்திரிகையான சாம்னாவில், ''குடியரசுத் தலைவராக வருபவர்கள் உறுதியானவர்களாக இருக்க வேண்டும். ரப்பர் ஸ்டாம்ப்போல இருக்கக் கூடாது. இந்தப் பதவிக்கு டி.என்.சேஷனைத் தவிர வேறு யாரும் தகுதியானவர்களாக நான் கருதவில்லை. தேர்தல் ஆணையராக சேஷன் இருந்தபோது திறம்பட பணியாற்றியவர். ஒழுக்கநெறிகளை முறையாகக் கையாள்பவர்'' என்று தாக்கரே எழுதினார்.

` காலநிலை மாற்றம் குறித்த கல்வி!'- உலகுக்கே முன்னோடி தேசமாகும் இத்தாலி

டி.என்.சேஷனை எதிர்த்து போட்டியிட்ட கே.ஆர்.நாராயணன், 9,52,290 ஓட்டுகள் வாங்கி வெற்றி பெற்றார். டி.என். சேஷனுக்கு 50,631 ஓட்டுகளே கிடைத்தன. தேர்தலில் வேட்பாளராக டி.என்.சேஷன் சந்தித்த முதல் தோல்வி இது. அடுத்ததாக 1999-ம் ஆண்டு குஜராத்தில் காந்தி நகரில் காங்கிரஸ் கட்சி சார்பாக மக்களவை தேர்தலில் குதித்தார். அத்வானியை எதிர்த்து நின்ற டி.என்.சேஷன் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.